பாலையின் இரு மருங்கிலுமுள்ள முல்லை, மருத நிலங்களின் வரண்ட எல்லைப்
பகுதிகளிலிருந்தும் பிற இடங்களிலுமிருந்தும் வழிப்பறியை நம்பிய ஆறலைக்
கள்வர்கள் பாலைகளில் குடியேறினர். அனைத்துப் பகுதிகளிலுமிருந்து வந்த
இவர்கள் பழந்தெய்வமான கொற்றவையை வழிபட்டனர். நாகர்களாகிய குறிஞ்சி நில
மக்கள் தங்கள் தெய்வமான சிவனை வழிபட்டனர். குறிஞ்சி நிலத்தினரின் வளம்
அரசர்களின் படைகளுக்கு வசக்கப்பட்ட யானைகளை வழங்குவதன் மூலமும் வசக்கிய
யானைகள் மூலம் தடிகளைச் சுமந்து ஏற்றுமதி செய்ததன் மூலமும் மலைபடு
பொருட்களை விற்றதன் மூலமும் பெருகியது. இவ்வாறு யானையை வசக்கிய முருகன்
குறிஞ்சி நிலத் தெய்வமானான்.
இவ்வாறு ஐந்நிலங்களிலும் மக்கள் தங்கள் பழைய குக்குலப் பாகுபாடுகளை
மறந்து ஒவ்வொரு நிலப் பிரிவிலும் மண்ணின் மைந்தர்களாக ஒருங்கிணைந்து
தத்தமக்கு ஒரு தலைமையை உருவாக்கி நெடுங்காலம் சென்ற பின்னரேபொருளிலக்கணம்
உருவானது. நிலத் தலைவர்கள் இப்போது தெய்வங்களாகிவிட்டனர். அரசர்கள்
ஆண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக