நன்செய்ப் பயிர்களை வளர்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கினான் வெள்ளையன்
என்றும்வாலி என்றும்(வால்=வெ
ள்ளை) பலதேவன்என்றும் பலராமன் என்றும் அழைக்கப்படுபவன்.
பின்னர் வந்த கண்ணனாகிய கருப்பன் ஏறு தழுவல் மூலம் காளையை வசக்கும்
உத்தியைப் புகுத்தினான்.பாலிலிருந்து தயிர், மோர், வெண்ணெய், நெய்
ஆகியவற்றை எடுக்கும் தொழில்நுட்பத்தையும் அவனோ அவன் பின்னால் வந்த
இன்னொருவனோ கண்டுபிடித்தான்.
இரவில் வெளிச்சத்துக்காக வெட்ட வெளியில் நெருப்பு வளர்க்கப்படுவது
நின்று நெய்யில் எரியும் அகல் விளக்கால் குகைகள், குடில்களின் உட்புறம்
ஒளி பெற்றது. அதுவரை மனிதர்களால் இழுக்கப்பட்ட ஏர் வசக்கப்பட்ட
காளைகளால் இழுக்கப்பட்டது. ஆமாடு பால் கறப்பதற்குப் பயன்பட்டது. வாணிக
வளர்ச்சியால் பொதி சுமக்கவும் வண்டியிழுக்கவும் மாடு பயன்பட்டது.
இப்போது மாடு உணவுப் பொருள் என்ற நிலையிலிருந்து ஓர் உழைப்புக்
கருவியாகவும் விளைப்புக் கருவியாகவும் மாறியது. இதுவரை வேள்விகளில்
மாடுகளைப் பலியிட்டு வந்த பூசகர்களின் வேள்விகளுக்கு எதிர்ப்பு
வந்தது.வேள்விகள் முடிவுக்கு வந்தன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக