ஞாயிறு, 9 ஜூலை, 2017

ரகுநாத நாயக்கர் தஞ்சாவூர் தெலுங்கு சம்ஸ்கிருதம் வளர்ச்சி

aathi tamil aathi1956@gmail.com

26/7/14
பெறுநர்: எனக்கு
தஞ்சை நாயக்கர்களின் ஆட்சி மொழியாக இருந்த
தெலுங்கு இரகுநாத நாயக்கர் காலத்தில் பெரும்
இலக்கிய மொழியாகச் செழித்தது.
தெலுங்கு இலக்கிய வரலாற்றில் இரகுநாத நாயக்கர்
தெலுங்கு இலக்கியத்திற்கும் தெலுங்கு இசைக்கும்
ஆற்றிய பணிகள் போற்றப்படுகின்றன.
தெலுங்கும் சமஸ்கிருதமும் போற்றப்பட்ட
தஞ்சை மண்ணில், தமிழ்ப் புலவர்கள் அரசால்
ஆதரிக்கப்படவில்லை. ஆட்சி-அலுவல் மொழியாகவும்
தெலுங்கே இருந்தது. அரச ஆதரவுடன் தெலுங்கில்
பெரும் காவியங்கள் இயற்றப்பட்ட காலத்தில்,
சிறு சிறு தமிழ் நிலவுடைமையாளர்க
ளை நம்பி சிற்றிலக்கியங்கள் பாடும் நிலைக்குத்
தமிழ் தள்ளப்பட்டது. தமிழிசைவாணர்கள்
புறக்கணிக்கப்பட்ட நிலையில், தெலுங்குக்
கீர்த்தனைகள் செல்வாக்கோடு எழுந்தன.
தமிழிசை தெலுங்கு பாடத் துவங்கியது...

வந்தேறி நாயக்கர் 
யுவபாரதி மணிகண்டன் நாயக்கர் ஆட்சியில் தமிழகம் தொடர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக