ஞாயிறு, 9 ஜூலை, 2017

மேலும் சில சித்திர கவி விபரங்கள் மிறைக் கவி பந்தம்

aathi tamil aathi1956@gmail.com

26/7/14
பெறுநர்: எனக்கு
http://www.ramilhan.blogspot.in/2012/07/blog-post_30.html?m=1
 Dev Anandh Fernando
எங்கள் ஊரிலும் சித்திரகவி வாழ்ந்தார். அவர் பெயர்
வேம்பாறு செ.முத்தையா ரொட்ரிகோ ஆகும். அவர்
மதுரையில் கூடிய நான்காம் தமிழ் சங்கத்தில் அங்கம்
வகித்தவர். அவர் எங்கள் ஊரில்
பிறந்ததை நினைத்து நாங்கள் பெரிதும் மகிழ்கிறோம்.
 Shajlafaisal Khan
............................................................
......................... கல்லாத கல்வியெலாம்
பொருளுக்கு முய்த்திடுமே சொல்லாத மந்திரத்தினுட்
பொருளாயுற்ற செல்வம் எல்லோர்க் குமுய்த்திடுமோ சொல்.
 சித்திரக்கவி - இரட்டை நாகபந்தம்
இது சித்திரக்கவியின் வகைகள் பலவற்றுள் ஒன்று.
மேலும், அட்டநாகபந்தம்,இரதபந்தம், முரசபந்தம் என
பந்த கவிகள் பல வகை உண்டு.
இரட்டை நாக பந்தத்தில் , நேரிசைசிந்தியல்
வெண்பா மற்றும் இன்னிசை சிந்தியல்
வெண்பா கொண்டு வடித்துள்ளேன்.
நேரிசை வெண்பா:-
செஞ்சடை நாதனை செம்புலத் தாணுவை
விஞ்சிடவே தாரணியில் ஆகாதே - என்றும்தான்
அஞ்சுகம் கொண்டான் தலை.
விளக்கம்:-
செம்மையான சடையும் செம்மையான
நிலத்தினை உடயவனுமாகிய ஈசனை விஞ்சிட
இப்புவியில் யாராலும் இயலாது.
என்றுமே கிளியை(அங்கயற்கண்ணி) கொண்டவனே சிறந்தவன்
இன்னிசை வெண்பா:-
விண்ணவர் தம்மொடு புண்ணிய மாகிய
நற்செஞ் சுடரே கொடுத்திடா யென்றுநான்
பாடுவேன் நாபியில்தே டாததை.
விளக்கம்:-
விண்ணுலகத்தோர் மிகப் புண்ணியமானது என எண்ணும்
சுடரோனே!நாபியாகிய மணிபூரகத்தின் உள்ளே தேட
இயலாதவற்கு ஒளி அளித்திடுவாயா?.

aathi tamil aathi1956@gmail.com

26/7/14
பெறுநர்: எனக்கு
J R Jeya Ganesh
தமிழில் சித்திரக்கவிகள் மூல இலக்கியமாக
திருஞானசம்பந்தரால் முதன் முதலில் பாடப்பட்டன.
சம்பந்தரின் "திருஎழுகூற்றிருக்கை" என்ற
அமைப்புடைய பதிகமே முதல் சித்திரக்கவி.
இவரை பின்பற்றி அருணகிரிநாதரும் அமைத்துள்ளார்.
இவர்களின் வரிசையில் பாம்பன் சுவாமிகளும்
சித்திரக்கவிகள் படைத்து உள்ளார்
.
 Nehemiah Jacob
வந்தறந் தோய்ந்தி வயமுயத்தந்த நம் வாமிசுதன்
தந்திரஞ்சேர் மதமார்வார்முன் சாய்தவ போதனுசன்
சந்ததம் சீர்த்திவதிதுதி மாதவர் தந்தன்புசெய்
செந்தில்வந்தந்த நந்தந்தமிழார் நஞ்சித சிவனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக