சனி, 3 ஜூன், 2017

கி.ஆ.பெ.விசுவதாதம் கல் அடி வாங்கியும் தளராத இந்தி எதிர்ப்பு இந்தியெதிர்ப்பு ஹிந்தி

aathi tamil aathi1956@gmail.com

18/12/14
பெறுநர்: எனக்கு
கி.ஆ.பெ.விசுவநாதம் நினைவு நாள் 19.12.1994
"நான் உயிரோடு இருந்து தமிழை வளர்ப்பதைவிட, என்
புதைகுழியே அதிகமாகத் தமிழை வளர்க்கும்...!"
1938இல் இராசாசி கொண்டு வந்த இந்தித்
திணிப்பை எதிர்த்து சென்னை மாநில
இந்தி எதிர்ப்பு வாரியம் உருவாக்கப்பட்டது. இதன்
தலைவராக சோமசுந்தர பாரதியாரும் செயலாளராக
கி.ஆ.பெ.வியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின்
தமிழகமெங்கெங்கும் போராட்டங்கள் வெடித்தன.
நாடெங்கும் கயல், புலி, வில் அடங்கிய மூவேந்தர்
சின்னங்கள் கி.ஆ.பெ.வி. அறை கூவலால் ஏற்றப்பட்டன.
இந்தி எதிர்ப்புப் பரப்புரைக்கு கி.ஆ.பெ.வி.
தூத்துக்குடிக்கும், திருநெல்வேலிக்கும் சென்ற
போது அவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
நெல்லை மேலை வீதியில் கற்கள் வீசப்பட்டதில்
நெற்றி உடைந்து இரத்தம் வழிந்தோடிய போதும் அவர்
பேசுவதை நிறுத்த வில்லை. அப்போது அவர், "நான்
வீட்டிலிருந்து புறப்படும் போது திரும்ப
வருவதாகச் சொல்லிப் புறப்பட வில்லை. நான்
உயிரோடு இருந்து தமிழை வளர்ப்பதை விட என்
புதைகுழியே அதிகமாகத் தமிழை வளர்க்கும்" என்றார்.
எட்டய புரத்தில் சோமசுந்தர பாரதியார் தலைமையில்
கி.ஆ.பெ.வி. பேசும் போது கல்லெறிதல்
தொடர்ந்து நடைபெற்றது. அப்போது கி.ஆ.பெ.வி.யின்
உதடு கிழிந்து இரத்தம் வழிந்தோடியது. உடனடியாக
கூட்டம் நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் நடந்த முதல் கட்ட இந்தி எதிர்ப்ப்புப்
போரில் மட்டும் 12 மாவட்டங்களில் 314 ஊர்களில் 480
நாட்கள் 617 சொற்பொழிவுகளை கி.ஆ.பெ.வி.
நிகழ்த்தி சாதனை படைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக