புலிகளினால் சமாதானக் காலப்பகுதியில் பொது மக்களின் நலன்களுக்காக பல்வேறு துறைசார் நிறுவனங்கள் ஆரம்பிக்கபட்டன. அதில் ஒன்றுதான் இந்த பாண்டியன் சுவையூற்று எனும் உணவகம். இது ஆரம்பத்தில் பொட்டு அம்மான் அவர்களினால் தொடங்கப்பட்டு பின்னர் தமிழீழ நிதித்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு தமிழேந்தி அப்பாவின் கண்காணிப்பின் கீழ் இருந்து வந்தது.
இந்த பாண்டியன் சுவையூற்றில் உணவு வகைகளின் விலை மற்ற தனியார் உணவகன்களோடு ஒப்பிடுகையில் மிக மிக மலிவாக இருந்து வந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இப்போது தமிழகத்தில் ஜெயலலிதா ஆரம்பித்து வைத்து இருக்கும் மலிவு விலை உணவகங்களை புலிகள் அந்த காலத்திலேயே மக்களின் தேவையை அறிந்து ஈழத்தின் பல பகுதிகளில் ஆரம்பித்து மக்களுக்கு மிகப்பெரும் உதவிகளை செய்து வநதனர்.
இங்கு உள்ள அரசு போல் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மக்களுக்கு நல திட்ட உதவிகளை செய்துவிட்டு, அதை வைத்து சுய விளம்பரம் செய்ய இரண்டு இலட்சம் செலவு செய்வது அல்ல புலிகளின் அரசு. முழுக்க முழுக்க மக்களின் தேவைகளை மடுமே நோக்காக கொண்டு ஆரம்பித்து அவற்றை முழுக்க முழுக்க மக்களுக்காகவே நடைமுறைப்படுத்துவது தான் புலிகளின் அரசு. அதற்கு சிறு எடுத்துக்காட்டு தான் இந்த பாண்டியன் சுவையூற்று.
பாண்டியன் சுவையூற்றைப்போன்று சேரன் சுவையகம், இளந்தென்றல் ஓய்வகம், காமதேனு, கிளியரசன் சுவையகம் போன்று புலிகளினால் நடத்தபட்ட பல உணவகங்கள அந்த காலத்தில் பொது மக்களின் தேவைகளுக்காக ஆரம்பிக்கபட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தன
இப்போது இந்த பாண்டியன் சுவையூற்றையும் சந்திரன் பூங்காவையும் சிங்கள நாய்கள் இடித்து தரைமட்டமாக்கி விட்டனர்.
இந்த பாண்டியன் சுவையுற்று என்பது புலிகளின் ஆட்சி காலத்தில் ஈழத்தில் வசித்து வந்த மக்களுக்கு மறக்க முடியாத பல சந்தோசமான அனுபவங்களை வழங்கி இருந்தது. அதிலும் கிளிநொச்சியை சூழ இருந்த மக்களின் மனங்களில் இந்த பாண்டியன் சுவையூற்று என்பது அழிக்க முடியாத ஒரு நினைவாக என்றும் இருக்கும். கிளிநொச்சி பேருந்து நிலையத்துக்கு அருகில் இருந்த இந்த பாண்டியன் சுவையூற்றும் அதற்கு முன்னாள் இருந்த சந்திரன் பூங்கா பற்றி நினைத்துப் பாத்தாலே கண்களில் கண்ணீர் வருகின்றன.
எதேச்சையாக இந்த படத்தினை இணையத்தில் பார்த்த போது பழைய நினைவுகளை கிளறிவிட்டன. மறக்கக் கூடிய நாட்களா அவை....?எவ்வளவு அழகிய நாட்கள் அவை. எமது மண்ணில்... எமது புலிகளின் ஆட்சியில்.... எமது போராளிகளின் பாதுகாப்பில்... எமது தலைவரின் கீழ் ....எமது தமிழினம் மகிழ்ச்சியாக வாழ்ந்த அந்த நாட்கள் இனி திரும்பி எப்போது வரும் என்று தெரியவில்லை.
அனால் கண்டிப்பாக திரும்பி வரும். தலைவரின் ஆட்சியின் கீழ் போராளிகளின் பாதுகாப்பின் கீழ் தமிழினம் மீண்டும் தலை நிமிரும்.
.... அது மட்டும் நிச்சயம் ...!
இந்த கடையினை யாருக்காவது நியாபகம் இருக்கின்றதா ...?
சேரன் சுவையகம்
. பாண்டியன் உற்பத்திப் பிரிவு
பாண்டியன் வாணிபம் 45.பாண்டியன் சுவையூற்று 46. சோழன் தயாரிப்புகள்
http://eelamboys.free.fr/photos/bandiyan%20res/kilinochchi_photos1.htm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக