|
21/9/15
![]() | ![]() ![]() | ||
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்
நிலமெல்லாம் ரத்தம் - பகுதி 56
பொறுமை இழந்த அராபியர்களும் மகாத்மா காந்தியின் நியாயமான நிலைப்பாடும்
- பா. ராகவன்
பாலஸ்தீனைப் பிரித்து, யூதர்களுக்கென்று ஒரு தனி தேசத்தை உருவாக்கும்
திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது, நவம்பர் 29, 1947-ம்
வருடம். அதற்குச் சரியாக ஆறு மாதங்கள் கழித்து - அதாவது மே 14, 1948-ம்
ஆண்டு இஸ்ரேல் பிறந்தது.
இந்த ஆறு மாத காலத்தில் பாலஸ்தீனில் ஓடிய ரத்தம் சொல்லி மாளாது.
எப்போது ஐக்கிய நாடுகள் சபை, இஸ்ரேல் கோரிக்கைக்குத் தலையாட்டியதோ,
அடுத்த வினாடியே பாலஸ்தீன் அராபியர்கள் ஆயுதம் ஏந்திவிட்டார்கள். கண்ணில்
பட்ட அத்தனை யூதர்களையும் தாக்கத் தொடங்கினார்கள். ஆண்களா, பெண்களா,
குழந்தைகளா, முதியோரா என்றெல்லாம் பார்க்கவில்லை. யூதரா, கொல்!
என்பதுதான் ஒரே சித்தார்ந்தமாக இருந்தது.
ஆண்டாண்டு காலமாக எப்படி ஐரோப்பா யூதர்கள் விஷயத்தில் அதற்கு முன்
நடந்துகொண்டதோ, அதே மாதிரி அப்போது அராபியர்களும் மாறிப் போனார்கள்.
அவர்களது சகிப்புத்தன்மை இறந்தது, பொறுமை மறைந்தது, சகோதரத்துவம்
காலமாகிப்போனது. விட்டுக்கொடுக்கும் மனோபாவம் மறைந்துவிட்டது.
புத்தியெங்கும் கொலைவெறி மட்டுமே மேலோங்கி இருக்க, நூற்றுக்கணக்கான
தீவிரவாதகுழுக்கள் ஓரிரவில் உதித்தன.
எந்த தேசமும் எந்த சர்வதேச அமைப்பும் தங்கள் குரலுக்கு மதிப்புக்
கொடுக்கப் போவதில்லை என்பது தெரிந்ததுமே அராபியர்கள் வாளேந்தி
விட்டார்கள். இனி வாய்ப்பேச்சில் பயன் இல்லை என்பது மட்டுமே அவர்களது
முடிவாக இருந்தது.
ஐய்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு முடிந்த கணத்தில் தொடங்கி சரியாகப்
பன்னிரண்டு நாட்களுக்குள் பாலஸ்தீன் எங்கும் மொத்தம் எண்பது யூதர்களை
அவர்கள் கொன்றிருந்தார்கள். சுமார் ஆயிரத்தி முந்நூறு கடைகள்
சூறையாடப்பட்டன; தீவைத்துக் கொளுத்தப்பட்டன. நெடுஞ்சாலைகளில் கணக்கு
வழக்கில்லாமல் பஸ்கள் எரிக்கப்பட்டன. நாட்டு குண்டுகள் வைத்து
தகர்க்கப்பட்டன.
இது பாலஸ்தீன் எல்லைக்குள் மட்டும் நடந்தவை. பாலஸ்தீனுக்கு வெளியிலும்
இத்தகைய அசம்பாவிதங்கள் ஏராளமாக நடக்கவே செய்தன. பாலஸ்தீனைச் சுற்றியுள்ள
பிற அரபு தேசங்களில் எங்கெல்லாம் யூதர்கள் வசித்துவந்தார்களோ,
அங்கெல்லாமும் இதே ரகத் தாக்குதல்கள் ஆரம்பமாயின. ஏடன் நகரில் மூன்று
தினங்களில் எண்பத்திரண்டு யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
பாக்தாத்தில் பதினேழு பேர். டெஹ்ரானில் முப்பது பேர். சவூதி அரேபியாவில்
பதினாறு பேர். பெய்ரூத்திலும் அலெக்ஸான்றியாவிலும் அலெப்போவிலும் இருந்த
அத்தனை யூத வர்த்தக நிலையங்களையும் அடித்து நொறுக்கி விட்டார்கள்.
சுருக்கமாகச் சொல்வதென்றால் மத்தியக் கிழக்கு முழுவதுமே அந்தச் சில
மாதங்களில் யுத்தபூமியாகவே இருந்தது. இதில் உச்சகட்டமாக திரிபோலியில்
மூன்று மணிநேரத்தில் நூற்று முப்பது யூதர்களை ஒரே இடத்தில் கொலை செய்தது.
இதனை ஒரு அரேபியத் தீவிரவாதக் குழு செய்தது. அந்தக் குழு அதற்கு முந்தைய
தினம் தான் உதயமானது. பெயர் கூட சூட்டவில்லை! அந்த ஒரு படுகொலைச்
சம்பவத்துடன் அவர்கள் திருப்தியடைந்து கலைந்துபோய் விட்டார்கள்!
இம்மாதிரியான நேரடித் தீவிரவாதச் செயல்கள் தவிர, பாலஸ்தீன் அராபியர்கள்
மறைமுகமான சில தாக்குதல் உத்திகளையும் வகுத்தார்கள். எப்படியாயினும்
இஸ்ரேல் உதிக்கத்தான் போகிறதுஎன்பதால், ஏதாவது செய்து ஜெருசலேம் யூதர்களை
மட்டுமாவது விரட்டிவிட்டு, நகரை முழுவதுமாகக் கைப்பற்றிவிட நினைத்த
அவர்கள், ரகசியமாக, ஜெருசலேம் நகருக்குச் செல்லும் தண்ணீர்க் குழாய்களை
முதலில் அடைத்தார்கள்.
இரண்டு நாட்களுக்கு மேல் தாங்காது என்றாகிவிட்டது நிலைமை. ஒரு சொட்டு
தண்ணீர் கூட ஊருக்குள் கிடையாது. உள்ளே இருப்பவர்கள் வெளியேறித்தானே
ஆகவேண்டும்? அதனைத் தொடர்ந்து, நகருக்கு வெளியிலிருந்து உணவுப்
பொருள்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் எதுவும்
ஜெருசலேத்துக்குள்ளே போகாதவாறு பார்த்துக் கொண்டார்கள். இரவெல்லாம்,
பகலெல்லாம் நகரைச் சுற்றி முறைவைத்துக் கொண்டு காவல் காத்தார்கள்.
ஐ. நா. அறிவிப்பு வந்த முதல் நான்கு மாதங்களில் பாலஸ்தீன் இருந்த இருப்பை
வெறும் சொற்களால் விவரித்துவிடவே முடியாது. அராபியர்களின் கோபம், அந்தப்
பாலைவனச் சூட்டைக் காட்டிலும் உக்கிரமாக இருந்தது. தங்களுக்கு நியாயம்
செய்யாவிட்டால் கூட அவர்கள் பொறுத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் தங்கள்
குரலை முற்றிலுமாக இப்படிப் புறக்கணிக்கிறார்களே என்கிற துக்கம்தான்
அவர்களின் கோபமாக உருப்பெற்றது.
சரித்திரத்தைத் திரும்பிப் பார்த்தால், ஏனைய ஐரோப்பிய தேசங்கள் அனைத்தைக்
காட்டிலும் யூதர்கள் விஷயத்தில் மிகவும் பொறுமையாக, சகிப்புத்தன்மைய
ுடன் நடந்துகொண்டவர்கள் பாலஸ்தீன அராபியர்கள்தான். இதை யூதர்களேகூட
மறுக்க முடியாது. அவர்கள் எத்தனைமுறை ஊரைவிட்டு வெளியேறினாலும் திரும்பி
வந்தால் எற்றுக்கொள்ளக் கூடியவர்களாக அராபியர்கள் இருந்திருக்கிறார்கள்.
பாலஸ்தீன் இரு மதத்தவருக்கும் பொதுவான பூமி என்கிற எண்ணம் அவர்களின்
அடிமனதில் எப்போதும் இருந்திருக்கிறது. தவிரவும் யூதேகளுடன் சமரசமாக
நடந்துக்கொள்ளுங்கள் என்று முகமது நபியே சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்
என்பதால், அதை மீறக்கூடிய இயல்பு முஸ்லிம்கள் யாருக்குமே, எந்தக்
காலத்திலும் இருந்ததில்லை.
அவர்கள் சம உரிமை, நிம்மதியான வாழ்க்கை, பரிபூரண சுதந்திரம்
ஆகியவற்றைத்தான் கேட்டார்களே தவிர, பாலஸ்தீனில் யூதர்களே கூடாது என்று
ஒருபோதும் சொன்னதில்லை. ஆனால், பாலஸ்தீனை இரண்டாகப் பிளந்து
யூதர்களுக்கென்று ஒரு தேசம் உருவாவதைத்தான் அவர்கள் எதிர்த்தார்கள்.
அதற்கு அவர்கள் சொன்ன காரணம், யூதர்களுக்கு தனி நாடு கொடுத்தால், அவர்கள்
முஸ்லிம்களை வாழவிடமாட்டார்க
ள்; அவர்களது நிலப்பரப்பை அபகரித்துவிடுவார்கள் என்பதுதான்.
இதைத்தான் மற்றவர்கள் ஏற்கவில்லை. ஆனால் நடந்தது என்னவோ இதுதான்! ஆக,
யூதர்கள் விஷயத்தில் அராபியர்கள் யோசித்தது சரியானதுதான்; அது ஒரு
தீர்க்கதரிசனம்தான் என்பது உண்மையாகிறது. இல்லையா?
இதனால்தான் அவர்கள் கோபம் கொண்டார்கள். கோபம் தலைக்கேறியதால் வன்முறையில்
இறங்கினார்கள். வன்முறை என்றாகிவிட்டபிறகு அதற்கு எல்லைகள் உண்டா என்ன?
என்னென்ன உண்டோ அத்தனையும் செய்தார்கள்.
யூதர்கள் தரப்பில் முதலில் தற்காப்பு நடவடிக்கைகள் மட்டுமே
மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஓரிரு மாதங்களுக்கு மேல் அவர்களாலும்
தாக்குப்பிடிக்க முடியாததால், யூதர்களும் சிறு சிறு குழுக்களாகச்
சேர்ந்து, அராபியர்களின் கிராமங்களை, குடியிருப்புகளைத் தாக்க
ஆரம்பித்தார்கள்.
ஏப்ரல் 1948-ம் ஆண்டு தெர் யாசின் (Deir Yassin) என்கிற அரேபிய
கிராமத்துக்குள் புகுந்த யூதர்கள் அங்கிருந்த சுமார் நூற்று இருபது
அராபியர்களைக் கொன்றுவிட்டு இரவோடு இரவாக ஓடி விட்டார்கள்.
இதற்கான பின்விளைவு உடனே ஏற்பட்டது. உடனே என்றால் நான்காவது நாள்.
ஸ்காபஸ் (Mount Scopus) என்கிற குன்றுப் பகுதியில் இருந்த
மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு வாகனத்தை அரேபிய
முஸ்லிம்கள் கடத்தினார்கள். கடத்தப்பட்ட அத்தனை டாக்டர்களும் உடனடியாகக்
கொலை செய்யப்பட்டார்கள்.
இந்தச் சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது. யூதர்கள் தரப்பில் மிகுந்த
கவனமுடன் இதனை ஓர் உருக்கமான, பரபரப்பான, துக்கம் சுமந்த, கண்ணீர்
வரவழைக்கும் செய்தியாகத் தயாரிக்கப்பட்டு, அனைத்துச் செய்தி
ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டது.
மேற்படிச் சம்பவம் உருக்கமானதுதான், துக்ககரமானதுதான். மறுப்பதற்கில்லை.
ஆனால் தெர் யாசின் கிராமப் படுகொலைகளுக்கு பதிலாகத்தான் அராபியர்கள்
இதனைச் செய்தார்கள் என்கிற ஒரு செய்தி மட்டும் கவனமாக மறைக்கப்பட்டுவி
ட்டது.
ஆகவே, வினாடிப் பொழுதில் அராபியர்கள் அத்தனைபேரும் காட்டுமிராண்டிகள்,
பயங்கரவாதிகள், ஆபத்தானவர்கள் என்பது போன்ற பிம்பம் சர்வதேச மீடியாவுக்கு
வழங்கப்பட்டுவிட
்டது. உயிர்பிழைத்து பாலஸ்தீனுக்கு ஓடிவந்த யூதர்கள் அங்கும் அநியாயமாக
படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று மீடியா அலற ஆரம்பிக்க, உலகம்
முழுவதும் மக்கள் யூதர்களின் அனுதாபிகளாக ஆகிப்போனார்கள். ஒட்டுமொத்த
உலகத் தலைவர்களும் பாலஸ்தீனிய அராபியர்களுக்கு எதிராக குரல் கொடுக்க
ஆரம்பித்தார்கள். பாலஸ்தீனில் உள்ள அராபியர்கள் அத்தனை பேரையும்
இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பேசினார்கள் - ஒரே ஒருவரைத்
தவிர.
அவர், மகாத்மா காந்தி.
தமது ஹரிஜன் பத்திரிகையில் இந்தச் சம்பவமெல்லாம் நடப்பதற்கு முன்பாகவே
காந்தி எழுதிய ஒரு கட்டுரைதான் பாலஸ்தீன் நிலவரம் பற்றிய நியாயமான
விமரிசனங்களை உள்ளடக்கிய ஒரே ஆவணம். உண்மையில் சொல்லப்போனால், பல அரேபிய
தேசத் தலைவர்களே மகாத்மா காந்தியின் இந்த ஒரு கட்டுரையை வாசித்த
பிறகுதான் புத்திசாலித்தனமாக சிந்திக்கவும் பேசவும் ஆரம்பித்தார்கள்.
'பாலஸ்தீன் யூதர்கள்' (Jews in Palestine) என்று தலைப்பிட்டு காந்தி
எழுதிய அந்தக் கட்டுறையில் இருந்து சில முக்கியமான பகுதிகளை மட்டும்
பார்த்துவிட்டு மேலே போய்விடலாம். இதனைத் தெரிந்துகொள்ளாமல் பாலஸ்தீன்
பிரச்னையைப் புரிந்துகொள்வது மிகவும் சிரமம். ஏனெனில், அராபியர்களைக்
காட்டிலும், யூதர்களைக் காட்டிலும் பாலஸ்தீன் பிரச்னையை மிக நுணுக்கமாக
ஆராய்ந்துவைத்திருந்தவர் காந்தி.
இனி, அக்கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:
# பாலஸ்தீனில் வசிக்கும் யூதர்கள் - அராபியர்களின் பிரச்சினை குறித்து
எனது கருத்தைக் கேட்டு மொத்தம் ஏழு கடிதங்கள் எனக்கு வந்தன. ஜெர்மனியில்
யூதர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்தும் என் கருத்தைப் பலர்
கேட்கிறார்கள். மிகவும் சிக்கலான இவ்விஷயம் பற்றிச் சிறிது தயக்கமுடன்
தன் எழுதுகிறேன்.
# யூதர்களுக்கு என் அனுதாபம் உண்டு. நான் தென்னாப்பிரிக்க
ாவில் இருந்த காலத்தில் அவர்களை மிக நெருக்கமாக அறிவேன். எனக்கே சில யூத
நண்பர்களும் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் யூதர்களின் ஆண்டாண்டுகால
அவலனகள் குறித்து அறிந்திருக்கிறேன். அரிஜனங்களை ஹிந்துக்கள் எப்படி
தீண்டத்தகாதவர்க
ளாக நடத்துகிறார்களோ, அதே மாதிரி யூதர்களைக் கிறித்தவர்கள்
நடத்தியிருக்கிறார்கள். இதற்கான எனது அனுதாபம் உண்டே தவிர, நீதி என்று
வரும்போது இந்தஅனுதாபம் குறுக்கிடாது.
# யூதர்கள் தமக்கென்று ஒரு தனி நாடு கேட்பது எனக்குச் சரியாகப் படவில்லை.
அவர்களது பைபிளிலேயே அது குரிப்பிடப்பட்ட
ு இருப்பதாகவெல்லாம் அவர்கள் சொல்வதை ஏற்பதற்கில்லை. உலகில் மற்ற மக்கள்
எல்லோரும் செய்வதுபோல, எங்கே அவர்கள் பிறந்து வளர்ந்தார்களோ, அந்த
தேசத்தையே அவர்கள்தம் சொந்த தேசமாகப் பாவிப்பதில் என்ன கஷ்டம்?
# இங்கிலாந்து எப்படி பிரிட்டிஷ் காரர்களுக்கு சொந்தமோ, பிரான்ஸ் எப்படி
பிரெஞ்சுக்காரர்களுக்கு சொந்தமோ அதேமாதிரி, பாலஸ்தீன் என்பது
அரேபியர்களுக்குச் சொந்தமான நிலம். பல்வேறு தேசங்களிலிருந்து யூதர்களைக்
கொண்டுவந்து அங்கே திணிப்பது தவறானது, மனிதாபிமானத்துக்கு முரணானது.
# பாலஸ்தீனில் இன்று நடந்துக்கொண்டிருப்பது நியாயப்படுத்தவே முடியாத
செயல். பிரிட்டன் அங்கே செய்துகொண்டிருப்பது, நிச்சயமாக மானுடகுலத்துக்க
ு எதிரான செயல். தமக்கென்று தனிநாடு கேட்கும் யூதர்கள் தற்சமயம் வாசித்துக்கொண்ட
ிருக்கும் தேசங்களை ஒட்டுமொத்தமாக விட்டுவிட்டு வரப்போகிறார்கள் என்று
நான் நினைக்கவில்லை. அங்கொரு வேர், இங்கொரு வேர் என்றுதான் இருப்பார்கள்.
எதற்கு இந்த இரட்டை ஆட்டம்? உலகில் உள்ள அனைத்து யூதர்களும் புறப்பட்டு
பாலஸ்தீனுக்கு வந்து சேர்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. அது
முடியவும் முடியாது. நான் ஒரு யூதனாக இருந்து, ஜெர்மனியில்
பிறந்திருந்தால், ஜெர்மனிதான் என் தாயகம் என்று நினைபேனே தவிர, வேறு
மாதிரி அல்ல! அங்கே என்ன கொடுமைகளை அனுபவிக்க நேர்ந்தாலும் என் சொந்த
தேசத்தில் எனக்கு கொடுமை நடக்கிறது என்றுதான் நினைப்பேனே தவிர, இன்னொரு
தேசத்தை தாயகமாகக் கருதி ஓடிவிட ஒருபோதும் எண்ணமாட்டேன்.
# எனக்குச் சந்தேகமே இல்லை. யூதர்கள் தவறான வலியில் மட்டுமே போய்க்
கொண்டிருக்கிறார்கள். பைபிளில் சொல்லப்படும் பாலஸ்தீன் என்பது இன்றைய
புவியியல் ரீதியிலான நிலப்பரபுக்குச் சம்பந்தமில்லாதது. அப்படியே
பாலஸ்தீன்தான் தங்களின் தாயகம் என்பதில் அவர்கள் உறுதியாக
இருப்பார்கலேயானாலும், பிரிட்டிஷ் ராணுவத்தின் துப்பாக்கிப்
பாதுகாப்புடன் திருட்டுத்தனமாக அங்கே நுழைவது எவ்வகையிலும் நியாயமானதல்ல.
துப்பாக்கி முனையில் தேசத்தை அடைய விரும்புவது ஏற்புடைய செயலும் அல்ல.
# பாலஸ்தீனில் யூதர்கள் வசிக்க விரும்பினால், அரபியர்களின் அனுமதியைப்
பெற்று, அவர்களின் நல்லுறவுடன் மட்டுமே அங்கே வாழ வேண்டும்.
அராபியர்களின் மனத்தை மாற்ற முதலில் முயற்சி செய்யவேண்டும்.
# நான் அராபியர்கள் பக்கம் சார்பு எடுக்கவில்லை. நியாயத்தைச் சொல்கிறேன்.
அவர்களும் வன்முறை பக்கம் போகாமல் அமைதியுடன் போராடவேண்டும்.
# யூதர்களுக்கு இறுதியாக ஒரு வார்த்தை. அவர்கள் வசிக்கும் எல்லா
தேசங்களுமே அவர்களுக்குத் தாயகம்தான். பாலஸ்தீனிலேயே வசிக்கும்
யூதர்களுக்கு எப்படி பாலஸ்தீன் தாயகமாகிறதோ, அதே மாதிரி. அதற்கு மேல்
ஒன்றுமில்லை.
பாலஸ்தீன் பிரச்சினையின் ஆரம்பம் முதல், பிரச்சினையின் பரிணாம வளர்ச்சி,
இருதரப்பு நியாயங்கள், எது பொதுவான நியாயம் என்பது வரை அத்தனை
விவரங்களும் இந்தச் சில வரிகளுக்குள் வந்துவிடுவதை கவனிக்கலாம். 1939-ல்
மகாத்மா காந்தி எழுதியது இது. இதற்குப் பின் சுமார் இருபது இருபத்தைந்து
ஆண்டுகள் வரை உண்மை நிலையை எடுத்துச் சொல்லும் ஓர் எழுத்து கூட யாராலும்
வெளியிடப்படவேயி
ல்லை என்பது விசித்திரமானதும் வருத்தத்துக்குரியதுமாகும்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் ஜூன் 2005
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்
https://www.facebook.com/ groups/
811220052306876/
"பசித்தவனுக்கு மீன்களைக் கொடுத்து உதவுவதைக் காட்டிலும், எப்படி மீன்
பிடிப்பது என்பதை கற்றுக் கொடுத்தால், வாழ்க்கையில் முன்னேறுவான்"
“பணம் இருந்தால் உன்னையே உனக்கு தெரியாது
சேவை குணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது”
மனிதர்கள் நான்கு வகைப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிறது:
தனக்குத் தெரியாது என்பது தெரியாதவர்கள் – இவர்கள் முட்டாள்கள். இவர்களை
விட்டுவிடுங்கள்.
தனக்குத் தெரியாது என்பது தெரிந்தவர்கள் – இவர்கள் எளிமையானவர்கள்.
சொல்லிக்கொடுங்கள்.
தனக்குத் தெரியும் என்பது தெரியாதவர்கள் – இவர்கள் தூங்கிக்
கொண்டிருக்கிறார்கள். எழுப்புங்கள்.
தனக்குத் தெரியும் என்பது தெரிந்தவர்கள் – இவர்களே ஞானிகள். பின்பற்றுங்கள்.

https://www.facebook.com/

பலஸ்தீன் பாலசுதீனம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக