புதன், 12 ஏப்ரல், 2017

மகாவம்சம் அசோகர் பற்றி பொய்க்கதை தமிழகத்தில் இருந்தே புத்தமதம் பரவியது பௌத்தம் போதிதர்மன் சிங்களவர் பௌத்தம்

aathi tamil aathi1956@gmail.com

11/9/15
பெறுநர்: எனக்கு
Nakkeeran Balasubramanyam
இலங்கையின் பொய்க்கதைகள் :
இலங்கைக் கதையின் படி அசோகர் தனது 99 சகோதரர்களைக் கொன்றபின் ஆட்சிக்கு
வந்தது பொய்யான தகவல் எனவும்(பக்:18), கி.மு.273இல் ஆட்சிக்கு வந்த
அசோகர் 4 ஆண்டுகள் கழித்தே முடிசூடிக் கொண்டார் என்பது உண்மை
எனவும்(பக்:19), பௌத்தவராக மாறுவதற்குமுன் அசோகர் தீயவராகவும்,
கொடூரமானவராகவும் இருந்தார் என்று சொல்வதற்கு வரலாற்றுச் சான்றுகள்
எதுவும் இல்லை எனவும்(பக்:21) வின்சென்ட் சுமித் கூறுகிறார். அசோகரை
மதமாற்றம் செய்தவர் அவரது குருவான உபகுப்தர். இலங்கை மரபுப்படி
உபகுப்தரின் இடத்தில் மோகாலி என்பவரின் புதல்வர் திஸ்ஸா இருக்கிறார்.
இவர் ஒரு கற்பனைப் பாத்திரம் என கர்னர் வாடல் கருத்து தெரிவித்திருப்பதாக
வின்சென்ட் சுமித் தெரிவிக்கிறார்(பக்:34).
பாறை ஆணை-2, மன்னர் ஆண்டியோகாஸ் பற்றியும், மற்ற கிரேக்கப் பகுதி நாடுகள்
பற்றியும், சேர, சோழ, பாண்டியர்கள் பற்றியும் குறிப்பிடுகிறது.
இப்பகுதிகளுக்கெல்லாம் தூதுக் குழுக்கள் பௌத்த சமயப் பணிக்கு
அனுப்பப்பட்டன. இந்தத் தூதுக் குழுக்கள் அனுப்பப்பட்ட காலம் கி.மு. 258
என்று நம்ப இடமுள்ளது என்கிறார் வின்சென்ட் சுமித்(பக்:350). ஆனால்
அசோகர் எந்தெந்த நாடுகளுக்குத் தூதர்களை அனுப்பினார் என்பது குறித்த
இலங்கை புத்த பிட்சுகளால் எழுதப்பட்ட குறிப்புகளில் கிரேக்கம் சார்ந்த
நாடுகளும், தமிழர்களின் நாடுகளும் விடப்பட்டுள்ளன.
தமிழ் வழங்கும் பகுதியில் உள்ள நாடுகள் விடுபட்டதற்கு சிங்களர்களுக்கும்,
இந்தியத் தமிழர்களுக்கும் இடையே இருந்த பகைமை உணர்ச்சியே காரணம் எனவும்,
தாங்கள் வெறுக்கும் தமிழர்களிடமிருந்து பவுத்தம் இலங்கைக்கு வந்தது
என்பதைக் கூறிகொள்ள அவர்கள் விரும்ப வில்லை எனவும், தமிழர்கள் அரசாண்ட
தென்பகுதி நாடுகளுக்கு அசோகர் சமயத் தூதர்களை அனுப்பினார் என்பதில்
சந்தேகப்பட இடமில்லை எனவும் வின்சென்ட் சுமித் கூறுகிறார்(பக்:
36,370). அசோகரின் ஆணைகள்(Edicts) இலங்கையைப் பற்றி ஒன்றும் கூறவில்லை
எனவும் எனவே அந்தத் தீவில் பேசப்படும் கதைகளுக்கு அசோகரின் ஆணைகளைச்
சான்றாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும் இலங்கைக் கதைகள் வரலாற்றை
அறிந்து கொள்ள நம்பகத்தன்மை உள்ளவையாக இல்லை எனவும் கூறுகிறார்
வின்சென்ட் சுமித் அவர்கள்.
அசோகரின் மகள் எனக் கருதப்படும் சங்கமித்ரா பற்றிக் கல்வெட்டுகளில் ஏதும்
குறிப்பிடப்படவில்லை எனவும், அது போன்ற மகள் இருந்தாள் என்பதும்
சந்தேகத்துக்குர
ியது எனவும், ஆனால் அசோகனின் சகோதரர் ஆன மகேந்தரர் ஓர் உண்மையான
பாத்திரம் எனவும் சீனப் பயணிகளின் குறிப்புகளின்பட
ி தமிழ் நாட்டில் இருந்து தான் புத்தமத நிறுவனங்கள் இலங்கைக்குப் பரவின
எனவும் வின்சென்ட் சுமித் தெரிவிக்கிறார்(பக்:38,39).
- கணியன் பாலன், ஈரோடு
11 மணிகள் · பொது
மேலும்
Go Greenமற்றும் வேறு 26 பேர்கள் ஆகியோர் இதை விரும்புகிறார்கள்.
பா. பா
// சீனப் பயணிகளின் குறிப்புகளின்படி தமிழ் நாட்டில் இருந்து தான்
புத்தமத நிறுவனங்கள் இலங்கைக்குப் பரவின எனவும் வின்சென்ட் சுமித்
தெரிவிக்கிறார்// 7MM ARIVU
பிடித்திருக்கிறது · 2 · பதிலளி ·
புகாரளி · 10 மணி நேரத்திற்கு முன்பு
Ramasamy Arumugam Slm
==இந்திய ஆரிய மகாபாரத,ராமாயணத் தலைமைக் கதாபாத்திரங்களின் பிறப்பு
எவ்வளவுக்கெவ்வளவு கேவலமானதோ அதைவிடவும் விலங்குத்தனமான கேவலக்கதை சிங்கள
மஹாவம்ச கதை; இந்திய பார்ப்பனரின் கதைகள் எப்படி நம்பமுடியாத சுவாரஸ்ய
கற்பனைகளோ அதே அளவு பொய்யும் புனைசுருட்டும் மிகுந்தவை இலங்கை சிங்கள -
பௌத்தர்களின் ஈனாயாணக் கதைகள். அசோகர் காலத்தில் இலங்கைக்கு புத்தமதம்
ஏற்றுமதி ஆகவில்லை; அப்போது அங்கு சிங்கள இனமும் தோன்றி இருக்கவே இல்லை.
கி.பி. 500-ல் கலிங்கத்திலிருந்து விரட்டப்பட்ட விஜயன், இலங்கை யில் கரை
ஏறி,ஆண் வாரிசு அற்ற அரசனின் பெண்ணை மணந்த பின்னரே, இரு இன தொடர் கலப்பு
நிகழ்ந்து, சிங்கள இனம் பரிணமிக்கிறது.ப
ுத்தமதமும் வேரூன்று கிறது.பின்னர் தென் பாண்டி நாட்டில் ஏற்பட்ட சைவ சமண
பௌத்த மத மோதல்களும்,கழுவேற்றக் கொடுமைகளும், புத்தமதத்தை இலங்கைக்கு
முற்றாக விரட்டிவிட்டது என்பதே வரலாற்று உண்மை. மற்றவை அனைத்தும் ஆரிய -
சிங்கள புரட்டுகளே !
பிடித்திருக்கிறது · 3 · பதிலளி ·
புகாரளி · 8 மணி நேரத்திற்கு முன்பு
தென் தமிழன்
அசோகனை சோழன் இளஞ்செட் சென்னி போரிட்டு விரட்டி அடித்தான் என்று தமிழ்
நூல்களில் உள்ளது
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · 5 மணி நேரத்திற்கு முன்பு
1 பதில்
Karthick Narayanan
இதைக்காட்டிலும் புத்தர் 3 முறை இலங்கைக்கு போனதாகவும், அதுவும் ஒளியின்
வேகத்தில் வந்து காட்சி தருவார் என்றும் அவர்களின் மஹா வம்ச புத்தகத்தில்
கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக