சனி, 1 ஏப்ரல், 2017

தமிழிசை கைலாய இசை கருவிகள் பறை

aathi tamil aathi1956@gmail.com

7/1/16
பெறுநர்: எனக்கு
Rajkumar Palaniswamy
தமிழர்கள் மீட்க வேண்டிய கைலாய இசைக்கருவிகள் !
தமிழர் கோவில்களில் மட்டும் வாசிக்கப்படும் இசைக்கருவிகளை கைலாய
வாத்தியம் என்று அழைக்கிறார்கள். சங்க இலக்கியங்கள் கூறும் பறை இசை, யாழ்
இசை, குழல் இசை, சங்கின் ஓசை போன்றவைகள் சேர்ந்தது தான் கைலாய இசை
வாத்தியங்கள். தொன்மை இசையான பறையிசையை நாம் இப்போது முடிந்தவரை உயிர்
கொடுத்து மீட்டு வருகிறோம். அதே போல தமிழர் மெய்யியல் சார்ந்த இத்தகைய
இசைக் கருவிகளையும் நாம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்து இவ்விசைக்கு
உயிர் கொடுக்க வேண்டும். அருகி வரும் தமிழர் இசைக் கருவிகளுள் கைலாய
இசைக் கருவிகளும் அடக்கம்.
தமிழிசையை கர்நாடக இசையாக திரிக்கப்பட்டு தாரை வார்த்துக் கொடுத்து
விட்டோம். தமிழர் இசைக் கருவிகளையாவது நாம் பாதுகாத்து அடுத்த
தலைமுறைக்கு கொண்டு சேர்ப்போம். கைலாய இசையை நீங்களே கேட்டு இதில்
இடம்பெற்றுள்ள சங்கின் ஓசை நுணுக்கங்களை அறியுங்கள்.
kailaya vathiyam
youtube.com
kailai vathiyam திருவாசகம் முற்றோதல் -சிவ தாமோதரன் அய்யா திருகழுகுன்றம், 21-06-2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக