ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

காப்பியம் மீட்ட ஐயர் பிள்ளை முதலியார் பார்ப்பனர் கமில் உ.வே.சா

aathi tamil aathi1956@gmail.com

20/10/15
பெறுநர்: எனக்கு
மணி மணிவண்ணன்
அக்டோபர் 21ம் நாள் தமிழ் மொழியின் வரலாற்றிலேயே பொன்னெழுத்துகளால்
பொறிக்கப்பட வேண்டிய நாள். அன்றுதான் மறக்கப்பட்டிருந்த,
மறைக்கப்பட்டிருந்த பழந்தமிழ் இலக்கியங்களை மீட்டெடுத்துப் பதிப்பித்து
உலகுக்குப் பறைசாற்றும் முயற்சிகளுக்கான விதை ஊன்றப்பட்டது. அன்றைய
தமிழகத்தின் தலைசிறந்த தமிழ்ப்புலவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
பிள்ளை அவர்களுக்கும் அவரது தலைமாணாக்கரான உ. வே. சாமிநாதையர்
அவர்களுக்கும் கூட இந்தப் பழைய இலக்கியங்களைப் பற்றித்
தெரிந்திருக்கவில்லை. சைவ வைணவ ஆதீனங்களும், மடங்களும் சமண பௌத்த
சார்புடைய நூல்கள் என்று தள்ளி வைத்திருந்த ஐம்பெருங் காப்பியங்களும்,
சங்கத்தமிழ் நூல்களும் ஒரு சிலரிடம் மட்டுமே யாரும் அறியாமல் கற்காமல்
காலத்தால் கரைந்து கொண்டிருந்த வேளையது. நமது நல்லூழால் உ.வே.சா. அவர்கள்
முனிசீப் சேலம் ராமசுவாமி முதலியார் அவர்களை 1880, அக்டோபர் 21,
வியாழக்கிழமை அன்று சந்தித்தார். ராமசுவாமி உவேசாவிடம் என்ன
படித்திருக்கிறாய் என்று வினவுகிறார். அந்த உரையாடலுக்குப்பிறகுதான்
தமிழ் ஒரு கரை காண முடியாத பெருங்கடல் என்று உவேசா மூலம் நாமும்
அறிகிறோம். அந்தப் பொன்னாளால்தான் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சீவக
சிந்தாமணியும் சங்கப்பாடல்களும் மீட்டெடுக்கப்பட்டன.
இணைப்பு: Smile of Murugan, by Kamil Zvelebil, p 268
https://m.facebook.com/photo.php?fbid=10207879335044804&id=1338795892&set=a.1537854889836.70850.1338795892&refid=52&_ft_=qid.6207746599052312123%3Amf_story_key.4164846656974824932&__tn__=E

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக