புதன், 12 ஏப்ரல், 2017

ஈழம் வர்ணம் புகுத்தல் வடுகர் கலிங்கர் குலம் சாதி பாண்டியன் சமத்துவம்

aathi tamil aathi1956@gmail.com

7/9/15
பெறுநர்: எனக்கு
கூர்ங்கோட்டவர்
வர்ணத்தை இனக்குழுவோடு குழப்பியவர்கள் யார்?
பாண்டியன் பராக்கிரம்மன் ஈழத்தை கி.பி. 1212 முதல் 1215 வரை ஆண்ட பாண்டிய
வேந்தன் இனக்குழுவை வர்ணத்தின்படி அடையாளப்படுத்தவ
ில்லை.
பாடல் 1: பாண்டியன் குடிவிருதுகள்
தோணி கரையார்க்குத் தொப்பி துலுக்கருக்கு
காணி யுழுமேழிசுளி காராளருக்கு
நாணி வில்லம்பு நாட்டிலுள்ள வேடுவர்க்கு
எழுத்தாணி சுளிமுற்குகர்க்கு கமலமலர் கோயிலார்க்கு
கைப்பிரம்பு பண்டாரப்பிள்ளைக்கு திமிலர்க்குப் பால்முட்டி
சேணியர்க்கு நூலச்சு அமலருக்குத் தேர்க்கொடிகள்
அம்பட்டருக்குக் கத்தரிக்கோல் விமலருக்குமத்துலகில்
வேதியர்க்கும் பூணுலாம்
வண்ணார்க்குக்கல்லு வாணிபர்க்குச் செக்கு
சுண்ணாம்புசுடும் கடையர்க்குக் கூடையாம் தொல்லு
வேந்தர்க்குச் செங்கோல் மேளமது வள்ளுவர்க்கு
சேர்ந்தகுயவருக்குக் கும்பகுடம் செப்புவேன் இன்னும்
தட்டார்க்குக் குறடு சாணார்க்குக்கத்தி
செட்டிகுலத்தோர்க்குத் தோடு தராசுபடி
இட்டமுடன் இந்த விதிப்படிக்கு எல்லாம் விருதெனவே
பட்டமது கட்டிவைத்தான் பாண்டிமன்னன்.
_______________________
ஆனால் நம்ம பொரட்டாசி வடுக கலிங்க மாகன் என்ன செய்தான்னு பார்ப்போமா?
பாடல் 2: வடுக கலிங்க மாகன் வகுத்த வர்ணம் பற்றிய பாடல்
திருகுலப் பாசநரர்களைத் தள்ளி
சூத்திரராகத் தொல்லுலகேற்றிச்
சாத்திர வேதத் தவங்களைச்செய்து
மாற்றியுன் சனனம் வைசியனாய்ப் பிறப்பீரென்று
ஏத்தியே காசிபனிவ்வகை சபித்தான்
பாண்டியன் சோழன் சேரன் பரதநாடதனில்
தோன்றியே கலியுகத் துரத்தனஞ் செய்து
வேண்டிய சிறையொடு வேந்தராயாண்டு
தூண்டினார் மூவர் தேவாலயங்கள்
சிறைகளை வகுத்துத் திருத்தொண்டராக்கி
திறைபெருக கலிங்கராசனைச் சேர்த்து
துறைவளர்பரத நாடுகளாண்டு
வந்தபின் கலிங்கன் மாயன ரணாசலன்
தந்தையிடத்தில் தரும விடைபெற்று
முடியது தரித்து முதல்வனைப் போற்றி
துடிமுரசதிரச் சூழவே சயினியம்
படையொடு சென்று மந்திரியுடனே
மரக்கல மேறி வந்தன னிலங்கையில்
சிரத்தொளி துலங்கத் தினகரனிலங்க
வரத்தொடு மட்டக்களப்பினி லிறங்கி
நிரைதனி வகுத்தான்
_______________
இந்த பாடல்களைப் படித்தாலே தெரிந்துவிடும். குடிமுறையோடு எவர் வர்ணத்தை
கலந்து குளப்பியதென்று. முதல் பாடலில் எந்த தொழிலும் சூத்திரத்தொழில் என
இழிவுப்படுத்தப்படவில்லை. ஆனால் கலிங்க மாகன் பாண்டியனிடம் இருந்து
ஆட்சியைப் பறித்த போது அதில் வர்ணத்தை புகுத்தினான் என்பது தெளிவாகிறது.

தென்காசி சுப்பிரமணியன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக