காலி மும்மொழி கல்வெட்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலி மும்மொழி கல்வெட்டு (Galle Trilingual Inscription) இலங்கையின்காலியில் சீனத் கடற்படைத்தளபதி செங் ஹே இத்தீவிற்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409 ஆண்டில் சீன, தமிழ், பாரசீகம் ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்ட கற்றூண் கல்வெட்டு ஆகும். இந்த உரையில் சீனத் தளபதியாலும் பிறராலும் சிவனொளிபாத மலையின் மீதான அல்லாஹ், தமிழர் கடவுளாம் தேனாவரை நாயனார் மற்றும் புத்தர் கோவில்களுக்குக் கொடுக்கப்பட்ட நன்கொடைகள் விவரிக்கப்பட்டுள்ளன. உலகம் வணிக நோக்குடன் அமைதியான இடமாகத் திகழ இந்துக் கடவுளரை கடற்த்தளபதி வேண்டிக் கொண்டார்.[1] இக்கல்வெட்டு காலியில் 1911இல் கண்டெடுக்கப்பட்டு தற்போது கொழும்பு தேசிய நூதனசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
1409இல் தனது மூன்றாவது முறையானப் பயணத்தில் செங் ஹே சீனாவிலிருந்து புறப்படும்போதே இலங்கையில் எழுப்ப திட்டமிட்டிருந்த பன்மொழி கல்வெட்டை தன்னுடன் கொணர்ந்தான். இந்த நாள் பெப்ரவரி 15, 1409 ஆகும்; இக்கல்வெட்டு நாஞ்சிங்கில் பொறிக்கப்பட்டுள்ளது. சீனமொழியிலான உரை கௌதம புத்தரை போற்றுவதோடு அவருக்கு அளிக்கப்பட்ட தாராளமான நன்கொடையை விவரிக்கிறது.
இக்கல்வெட்டினை எஸ். எச். தோம்லின் என்ற பொறியாளர் 1911இல் கண்டெடுத்தார். இலங்கை நூதனசாலையில் உள்ளதைப் போலவே தற்கால நகலொன்று நாஞ்சிங்கின் புதையல் படகுத்துறை பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது.
வழங்கல்கள்[தொகு]
1,000 தங்கக் காசுகள்; 5,000 வெள்ளிக் காசுகள்; 50 பூந்தையலிடப்பட்ட பட்டு தொகுதி பல வண்ணங்களில்; 50 பட்டு டபெட்டா, பல வண்ணங்களில்; 4 சோடிகள் ஆபரண பதாகைகள், தங்க பூந்தையலிட்ட பன்னிறமுள்ள பட்டு- 2 சோடிகள் சிவப்பில், ஒரு சோடி மஞ்சளில், ஒரு சோடி கருப்பில்; 5 பழங்கால பித்தளை ஊதுபத்தி தாங்கிகள்; 5 சோடி பழங்கால பித்தளை மலர் சட்டிகள் - லாக்குவரில் தங்க வடிவங்களுடனும் தங்க நிறுத்தங்களுடனும்; 5 மஞ்சள் பித்தளை விளக்குகள் லாக்குவரில் தங்க வடிவங்களுடனும் தங்க நிறுத்தங்களுடனும்; சிவப்பு நிறத்தில் 5 ஊதுபத்தி கிண்ணங்கள் லாக்குவரில் தங்க வடிவங்களுடனும் தங்க நிறுத்தங்களுடனும்; 6 சோடி தங்கத் தாமரை மலர்கள்; 2,500 அலகுகள் நறுமண எண்ணெய்; 10 சோடி மெழுகு வத்திகள்; 10 தூப கட்டிகள்.
மேற்சான்றுகள்[தொகு]
மேலும் அறிய[தொகு]
- Xinhua News Agency (2005), Zheng He: A Peaceful Mariner and Diplomat.
செங் ஹே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங் ஹே | |
---|---|
பிறப்பு | 1371 யுன்னான், சீனா |
இறப்பு | 1433 |
பணி | ஆசிய பயணி |
பட்டம் | பெருங்கடலின் கடற்படை அதிகாரி |
செங் ஹே (1371–1433) ஒரு ஹூயி இனச் சீனக் கடலோடியும், நாடுகாண் பயணியும், இரஜதந்திரியும், கப்பல் தலைவரும் ஆவார். இவரது பயணங்கள் அனைத்தும் கூட்டாக மேற்குப் பெருங்கடலுக்கு செங் ஹே என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. இப் பயணங்கள் 1405 தொடக்கம் 1433 ஆண்டுவரை இடம் பெற்றவையாகும்.
வாழ்க்கை[தொகு]
செங் ஹே 1371 ஆம் ஆண்டு, மிங் வம்சத்தினருடனான போரில், யுவான் வம்சத்தினரின் இறுதிக் கோட்டையாக விளங்கிய இன்றைய யுனான் மாகாணத்தில் பிறந்தார். பெரும்பாலான ஹுயி மக்களைப்போலவே செங் ஹேயும் ஒரு முஸ்லிம் ஆவார். மிங் வரலாற்றின்படி, இவருடைய உண்மையான பெயர் "மா சன்பாவோ" என்பதுடன், இவருடைய இடம் குன்யாங் எனப்பட்ட இன்றைய ஜின்னிங்கும் ஆகும். இவர் சாமு எனப்படும் சாதியைச் சேர்ந்தவர்.
வெளி இணைப்புகள்[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில் செங் ஹே என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக