வெள்ளி, 13 நவம்பர், 2020

அகமுடையார் முக்குலம் என ஏமாறுதல் மதுரை பெரும்பான்மை இருந்தும் பதவி இல்லை mp mla வேட்பாளர் சாதி

aathi1956 aathi1956@gmail.com

பெறுநர்: எனக்கு
இரா.ச. இமலாதித்தன்
வாண ஆதி அரச மரபிரான அகமுடையார் உறவுகளே!
மதுரை மாவட்டத்தில் ஐந்து லட்சம் மக்கள் தொகை கொண்ட பெரும்பான்மை சமூகம் அகமுடையார் தான். ஆனால் அங்கே ஓர் அகமுடையாருக்கு கூட அரசியல் அங்கீகாரம் கிடைக்கவில்லை. மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பத்து சட்டமன்றத்தொகுதிகளில் மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், சோழவந்தான் உள்பட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் அகமுடையாரே பெரும்பான்மை சமூகம். ஆனால், முக்குலத்தோர் என்ற போலியான அரசியலால், கள்ளர்களே மதுரை மாவட்டதில் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இது தொடர்பான சிறிய அரசியல் கணக்கீடுகளை கீழே பார்ப்போம்.
மதுரை மாவட்ட சட்டமன்றத்தொகுத
ிகள்:
மதுரை கிழக்கு - மூர்த்தி (அம்பல கள்ளர்)
மதுரை மேற்கு - செல்லூர் ராஜூ (பிறமலை கள்ளர்)
மதுரை வடக்கு - இராஜன் செல்லப்பா (பிறமலை கள்ளர்)
திருப்பரங்குன்றம் - லேட். ஏ.கே.போஸ் (பிறமலை கள்ளர்)
திருமங்கலம் - ஆர்.பி.உதயகுமார் (மறவர்)
சோழவந்தான்(தனி) - கே.மாணிக்கம் (பள்ளர்)
மதுரை மத்தி - பி.டி.ஆர். பா.தியாகராஜன் (தொண்டை மண்டல வேளாளர்)
மதுரை தெற்கு - சரவணன் (செளராஷ்ட்ரா)
மேலூர் - பெரிய புள்ளான் (முத்தரையர்)
உசிலம்பட்டி - நீதிபதி (பிறமலை கள்ளர்)
இது தவிர, 2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மதுரையில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள்:
அதிமுக - வி.வி.ஆர்.இராஜ் சத்யன் - பிறமலை கள்ளர்
அமமுக - டேவிட் அண்ணாதுரை (மறவர்)
கம்யூனிஸ்ட் - சு.வெங்கடேசன் (நாயுடு)
இதுதான் மதுரை மாவட்டத்தின் தற்போதைய அரசியல் நிலைமை. மதுரை மாவட்டத்தின் பெரும்பான்மை சமூகமான அகமுடையாருக்கு ஒரு சட்டமன்றத் தொகுதியோ, நாடாளுமன்றத் தொகுதியோ கூட ஒதுக்கப்படவில்லை. ஏ.கே.போஸ் மறைவுக்கு பிறகு காலியாகவுள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலில் கூட அஇஅதிமுக, அமமுக சார்பில் பிறமலை கள்ளர் வேட்பாளர்களே நிறுத்தப்பட்டுள்ளனர். திமுக சார்பில் மட்டுமே பெரும்பான்மை சமூகமான அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த மருத்துவர் சரவணன் நிறுத்தப்பட்டுள
்ளார்.
முக்குலத்தோர் என்ற போலியான இந்த உள்ளரசியலை புரிந்து கொள்ளாததால் தான், அகமுடையாருக்கான அரசியல் அங்கீகாரம் கிடைக்கவே இல்லை. இது மதுரைக்கு மட்டுமில்லை; ஒட்டுமொத்த தமிழ்நாடெங்கும் அரசியலில் அகமுடையாருக்கு இதே நிலைமை தான். இனியாவது புரிதல் கொண்டு, எழுச்சியோடு அகமுடையார் பேரினம் அரசியலில் மீண்டெழட்டும். அதற்கான காலம் இப்போது தான் கனிந்திருக்கிறது; அகமுடையார் இளையோர்களே, இனியாவது நாம் இதை சரியாக பயன்படுத்திக் கொள்வோம். நமக்கென அரசியல் பாதையை வலுவாக உருவாக்குவோம்.
- இரா.ச. இமலாதித்தன்
# அரசியல் # அகமுடையார்
# முக்குலத்தோர்

தேவர் பட்டம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக