வெள்ளி, 13 நவம்பர், 2020

மீண்டும் ஹைட்ரோகார்பன் இம்முறை ongc யுடன் வேதாந்தா வும்

 

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 28 ஏப்., 2019, பிற்பகல் 3:30
பெறுநர்: எனக்கு
Tamilri.com
# தமிழகத்தில்_புத
ிதாக_341ஹைட்ரோக
ார்பன்_கிணறுகள்
மீண்டும் தலைதூக்கும் ஹைட்ரோகார்பன் பிரச்சனை.. வேதாந்தா 116+158 கிணறு, ஓ.என்.ஜி.சி 40+27 கிணறுகள் அமைக்க திட்டம்
காவிரிப் படுக்கை பகுதிகளில் உள்ள நிலப்பகுதி மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும், வேதாந்தா நிறுவனத்திற்கும் இரண்டு மண்டலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் உரிமத்தை மத்திய பெட்ரோலியத்துறை கடந்த ஆண்டு வழங்கியிருந்தது.
ஆனால் தற்போது கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது, மேலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் மத்திய அரசு அமைதி காத்து வந்த நிலையில், தற்போது ''Open Acrege Licensing Policy'' மூலம் மீண்டும் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை துவங்க விண்ணப்பித்துள்ளது வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள்.
தமிழகத்தில் வேதாந்தா இதுவரை காப்பர் உருக்கு ஆலை மட்டுமே வைத்திருந்த நிலையில், தற்போது முதன் முறையாக எண்ணெய் மற்றும் சுரங்க கிணறுகள் அமைக்கும் பணியைத் துவங்கவுள்ளது. அதேசமயம் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் எண்ணெய் கிணறுகள் மற்றும் சுரங்களை அமைத்துள்ள வேதாந்தா தமிழகத்திலும் அமைக்க விண்ணப்பித்துள்ளது கவனிக்கத்தக்கது.
வேதாந்தா 274 கிணறுகள் அமைக்க திட்டம் வேதாந்தா நிறுவனம் இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில், 274 கிணறுகளை ஆழமற்ற கடல் பகுதிகளுக்குள்ளும், அதாவது காரைக்கால், நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள நிலப்பகுதியில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், புவனகிரி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக எண்ணெய் கிணறுகள் ரூ.5150 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது.
ஓ.என்.ஜி.சி 67 கிணறுகள் அமைக்க திட்டம் அதேசமயம் ஏற்கனவே இங்கு எண்ணெய் எரிவாயு கிணறு அமைத்திருக்கும் ஓ.என்.ஜி.சி நிறுவனமானது மேலும் 67 கிணறுகளை அமைக்க விண்ணப்பங்களை மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஒ.என்.ஜி.சி. அமைக்கவுள்ள 27 கிணறுகளுக்கு முதற்கட்டமாக சுற்றுச்சூழல் ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாகை, காரைக்கால், விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி, கடலூர், திருவாரூர் ஆகிய இடங்களில் நிலப்பகுதி மற்றும் ஆழமற்ற கடற்பகுதியில் இந்த கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. சீர்காழி, தரங்கம்பாடி, கீழ்வேளூர்,, வேதாரண்யம், கோட்டுச்சேரி, திருமலைராயன், திண்டிவனம், வானூர், காரைக்கால், புவனகிரி, பெரியகுடி ஆகிய இடங்களில் இந்த கிணறுகள் அமைவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்திற்கு அச்சுறுத்தலே ஏற்கனவே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூலம் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வந்த வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான உரிமம் வழங்கப்பட்டால், மேலும் தமிழ் நாடு சுடுகாடாக மாறிவிடும், இது தமிழகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்.
தமிழகத்தில் பருவமழை தொடர்ச்சியாகப் பொய்த்து வரும் நிலையில் விவசாயிகள் பெரும் வாழ்வாதார சிக்கலில் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய எண்ணிக்கையில் ஹைட்ரோகார்பன் திட்டங்களைக் காவிரி டெல்டா பகுதியில் செயல்படுத்த மத்திய அரசின் உதவியுடன் வேதாந்தா நிறுவனம் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனம் முயன்று வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை தங்களது தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ள நிலையில் மத்திய அரசின் இந்த முயற்சி கடும் கண்டனத்துக்குரியது.
காவிரி டெல்டா பகுதியில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் அப்பகுதியில் நில அமைப்பே கடல் மேற்பரப்பு மட்டத்திற்குக் கீழே இறங்கி வருவதாகவும் இதன் காரணமாக நிலப்பகுதியில் கடல் நீர் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு உட்புகுந்து விட்டதாகவும் பல்வேறு ஆய்வுகள் வெளிவரும் நிலையில் புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களை அப்பகுதியில் செயல்படுத்துவது தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பே கேள்விக்குள்ளாக்குவதாக உள்ளது. அனைத்து அமைப்புகளும் கட்சிகளும் இணைந்து இம்முயற்சியைத் தடுக்காவிட்டால் காவிரி டெல்டா அழிவதை நம் தலைமுறை அல்ல நம் கண்முன்னே காணும் நிலை உருவாகும்.
1 மணி நேரம் · பொது
Krishna Muthukumarappan மற்றும் 39 பேர்
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
படத்தை இணை ·
நண்பர்களைக் குறிப்பிடவும்
Tamilri.com
http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/apr/12/341-hydrocarbon-wells-to-be-drilled-in-tamil-nadu-by-vedanta-and-ongc-196319
0.html
341 hydrocarbon wells to be drilled in Tamil Nadu by Vedanta and ONGC?

tri மீத்தேன் நாசகார திட்டம் மண்ணழிப்பு ஸ்டெர்லைட் அனுமதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக