சனி, 26 செப்டம்பர், 2020

தேவர் காமராசர் க்கு செய்த உதவிகள்

 

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 23 செப்., 2018, பிற்பகல் 12:37
பெறுநர்: எனக்கு
Avm Visu
"பசும்பொன் தேவர் பெருமகனார் காமராஜர் நாடாருக்குச் செய்த உதவிகள்"
1. 1933-ல் பசும்பொன் பெருமகனார் சாயல்குடியில் பழம்பெரும் தேசபக்தர் சேதுராமன் செட்டியார் நடத்தும் விவேகானந்தர் வாசக சாலையின் முதலாவது ஆண்டு விழாவில் பேசிய கன்னிப் பேச்சால் எல்லோருடைய உள்ளத்திலும் இடம் பிடிக்கிறார். அவ்விழாவில் விவேகானந்தரின் படத்தை திறந்துவைத்து ஆன்மிகச் சொற்பொழிவாக மூன்று மணிநேரம் கேட்போர் வியக்கும் வண்ணம் பேசி முடிக்கிறார்.
இக்கூட்டத்திற்கு வந்திருந்த விருதுநகர் காமராஜர் நாடார் பசும்பொன் பெருமகனாரிடம் "இது போன்ற ஒரு பிரசங்கத்தை இதுவரையில் நான் கேட்டதில்லை என்றும் வீரமிக்க இப்பிரசங்கம் விடுதலைப் போருக்கு பயன்படும் என்றும் மனதாரப் பாராட்டுகிறார். அப்போதுதான் காமராஜர் நாடாரும் பசும்பொன் பெருமகனாரும் முதன் முதலில் சந்திக்கின்றனர். இச்சந்திப்பு பின்னாளில் காமராஜர் நாடாரின் அரசியல் வாழ்வில் பல நன்மைகளையும் உயர்வுகளையும் கொண்டு சேர்க்கும் சந்திப்பாக அமைந்திருந்தது.
2. காமராஜரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தது: 1936 நகரசபைத் தேர்தல் என்ற ஜில்லா போர்டு தேர்தல் நடைபெறவிருந்தத காலகட்டம் காமராஜர் நாடார் காங்கிரஸில் சாதாணத் தொண்டராக ஏழ்மையில் வாழ்ந்த காலம். அவரது உறவினர்கள் அனைவரும் நீதிக் கட்சியில் செளந்திரபாண்டிய நாடார் தலைமையின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருந்த காலம். பசும்பொன் பெருமகனார் காமராஜர் நாடாரை வாக்காளராக்கிய தேர்தலில் நிற்கவைக்க விரும்புகிறார். காமராஜர் நாடார் பேரில் சொத்து ஏதும் இல்லாததாலும் அவர் பெயரில் வரி எதுவும் செலுத்தப்படததாலும் அவர் பெயர் வாக்காளர் சாபிதாவில் இடம் பெறவில்லை. இதையறிந்த பசும்பொன் பெருமகனார்..
காமராஜர் நாடாரின் தாயார் சிவகாமி அம்மையாரிடம் சென்று "உங்களது மகன் தேர்தலில் நிற்கவைக்க வேண்டும். உங்கள் பெயரில் உள்ள வீட்டினை அவரது பெயருக்கு மாற்றித் தாருங்கள்" என்று கேட்கிறார். சிவகாமி அம்மையாரோ "தேவரய்யா எனக்கு இருப்பது இந்த ஒரு வீடு மட்டுமே. எனக்கும் வயது வந்த பெண்பிள்ளை இருக்கிறது. நானோ விதவை. எங்கள் ஜாதியில் ஒரு வீடாவது இருந்தால் தான் என் பெண்ணுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைப்பார். என் மகன் காமராஜர் வீட்டுக்குப் பயன்படாத பிள்ளையாகப் போய்விட்டான். எனவே இந்த வீட்டை என் மகன் பெயருக்கு எழுதிவைத்து விட்டு நானும் என் மகளும் தெருவில் நிற்கத் தயாராய் இல்லை" என்று மறுத்துவிட்டார்.
பின்பு தேவர் பெருமகனார் விருதுநகரில் நான்கு வெள்ளாடுகளை 28 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி அவ்வாட்டிற்கு காமராஜர் நாடார் பெயரில் நகராட்சியில் 6 அணா வரி செலுத்தி அதன் பின்னர் வாக்காளர் பட்டியலில் காமராஜர் நாடாரின் பெயர் சேர்க்கப்பட்டு ஜில்லாபோர்டு தேர்தலில் நிறுத்தப்பட்டார்.
அதற்கு காமராஜர் நாடாரும் கண்களில் கண்ணீர் மல்க பணிந்து வணங்கி பசும்பொன் பெருமகனாருக்கு நன்றி கூறினார்.
காமராஜர் நாடாரை வாக்காளராக்கிய செய்தியினைப் பல கூட்டங்களில் பின்னாளில் தேவர் பெருமகனார் கூறியபோது காமராஜர் நாடார் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை..
3.1937-ல் சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்த நேரம். விருதுநகர் பகுதியில் ஜஸ்டிஸ் கட்சியினர் காங்கிரஸ் வேட்பாளரான காமராஜர் நாடாரை தெப்பகுளம் அருகில் வழிமறித்து அவரது வேஷ்டியை உரிந்துவிட்டு காமராஜர் நாடார் எடுக்க முயலும்போது இரண்டு முரடர்கள் காலால் துணிளை மிதித்துக் கொள்ள சில முரடர்கள் சாணி உருண்டைகளை அவர் மீது எரிந்தார்கள்.
இச்செய்தியைக் கேள்விப்பட்டு பசும்பொன் பெருமகனார் தனது தொகுதி வேலைகளைக் கூட கவனிக்காது விருதுநகர் விரைந்து சென்று காமராஜர் நாடாரைச் சந்திக்கிறார். காமராஜர் நாடாரும் கண் கலங்கி இரவில் என்னை கடத்தி பட்டிவீரன் பட்டி செளந்திரபாண்டிய நாடாரின் வாழைத் தோப்பில் வைத்து வெட்டிக் கொலை செய்யப் போவதாக சதித்திட்டம் செய்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.
அன்றிரவு விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் காமராஜர் நாடாரை ஆதரித்து பசும்பொன் பெருமகனார் பேசுகிறார்.
"காமராஜர் சாதாரண ஏழைத் தொண்டன் என்று இங்கே உள்ள ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் நினைத்தால் அவர்களுக்காக அனுதாபப்படுகிறேன். காமராஜருக்கு பின்னால் காங்கிரஸ் மகாசபை இருக்கிறது. அந்த மகாசபையில் எங்களைப் போல் எந்தவித தியாகத்திற்கும் தயாராக உள்ள கோடான கோடி பேர் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.
இரவோடு இரவாக காமராஜரை தூக்கிக் கொண்டுபோய் கொலை செய்யப் போவதாக எல்லாம் கேள்விப்டுகிறேன். அது உண்மையானால் இங்கே ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.வி ராமசாமி நாடாருக்கு நான் எச்சரிக்கையாகச் சொல்கிறேன். காமராஜர் மீது ஒரு துருப்பு படுமானால் நீங்கள் வீதியில் நிம்மதியாக நடமாடமுடியாது. இருப்பு கவசம் போட்டுக்கொண்டு தான் நடக்க முடியும் என்று வேகமாகப் பேசினார். அந்த பேச்சுக்குப் பின்னால் தேவருடைய ஆட்களால் தனது உயிருக்கு ஆபத்து வரலாம் நான் கிராமங்களுக்குப் போய் ஓட்டு கேட்கும் பொழுது எனக்கு போலீஸ் பந்தோபஸ்து வேண்டுமென்று கலெக்டரிடம் வி.வி ராமசாமி நாடார் கேட்டார்.
தேர்தல் நேரத்தில் உங்களுக்குப் பந்தோபஸ்தாக போலீசை அனுப்பினால் போலீசை வைத்து நீங்கள் ஓட்டுக் கேட்பதாக தேவர் புகார் செய்வார். கோர்ட்டுக்குப் போவார். எனவே போலீசை அனுப்ப முடியாது என்று கலெக்டர் மறுத்துவிட்டார்.
வி.வி. ராமசாமி நாடார் கிராமங்களுக்குப் போய் ஓட்டுக் கேட்க முடியாத நிலையில் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். காமராஜர் நாடார் சட்டசபைக்குத் தேர்தெடுக்கப்பட்டார். பசும்பொன் பெருமகனாருடைய ஆதரவு மட்டும் அன்றைக்கு காமராஜர் நாடாருக்கு இல்லாமல் இருந்திருக்குமானால் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பது மட்டுமல்ல காமராஜர் ஜஸ்டிஸ் கட்சியினுடைய பெரும்புள்ளிகள் உயிரோடு விட்டு வைத்திருப்பார்க
ளா என்பதே சந்தேகம்.
4. திருப்பரங்குன்றம் மாநாடு: 1942 ஆகஸ்டு புரட்சியை இராஜாஜி கொச்சைப் படுத்தி பேசியது கண்டு தமிழக காங்கிரசார் கொதித்தெழுந்து திருப்பரங்குன்ற
த்தில் மாநாட்டினைக் கூட்டுகின்றனர். இராஜாஜியின் தலைமை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றினை தேவர் திருமகனார் முன்மொழிய அத்தீர்மானம் காந்தியடிகளின் வேண்டுகோளையும் நிராகரித்து பெரும் வெற்றியடைந்தது.
இராஜாஜியின் தலைமை தடுக்கப்பட்ட நிலையில் காமராஜர் நாடாரின் தலைமை தலைதூக்க தேவர் பெருமகனார் திருப்பரங்குன்றம் மாநாட்டினை அடித்தளமாய் அமைத்துக் கொடுத்தார்.
திருப்பரங்குன்றம் மாநாடு காமராஜர் நாடாரின் வாழ்வில் பெரும் பதவிகளையும் வகிக்கத் திருப்பு முனை மாநாடாக அமைத்து போனது அரசியல் புரிந்த அனைவரும் தெரிந்த விசயமாகும். இது காமராஜர் நாடாரின் வாழ்வில் ஒரு சிறப்பு மிக்க பகுதியாகும்.
சமீபத்தில் காமராஜர் நாடாரின் உண்மைத் தொண்டன் திரு. ச.குமரி அனந்தன் அவர்கள் கமுதியில் ஒரு கூட்டத்திற்கு வந்திருந்த போது பசும்பொன் பெருமகனாரின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் தான் பேச மேடை ஏறுகிறார்.
அவர் அன்று கமுதி முத்துமாரியம்மன் கோவில் அருகில் அமைத்து மேடையில் பேசும்போது கூறுகிறார்.
"நமது சமுதாயத்தில் பாரத பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நிழலில் வாழ்ந்தவர்கள் என்தை நமது சமூகத்தினர் மறக்க முடியாது, மறக்கவும் கூடாது என்று பேசினார். அன்று அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தன..
இன்னும் இதுபோல எத்தனையோ செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் கூறிக் கொண்டே போகலாம். ஆனால் அது காமராஜர் நாடாரின் ஏழ்மையை ஏளனம் செய்தது போலாகிவிடும். எனவே பண்பு கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
நூல்: பொக்கிஷம்
நூல் ஆசிரியர்: க.பூபதிராஜா
5 நிமிடங்கள் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக