| திங்., 24 செப்., 2018, முற்பகல் 8:33 | |||
தமிழ்மொழியான் இரா மனோ ,
கார்த்திகேயன் பாண்டியர் மதுரை மற்றும் 29 பேருடன் உற்சாகமாக
உணர்கிறார்.
“திரு ஓணம் நன்னாள்” கொண்டாட மறந்த தமிழர்கள்.
பண்டை காலத்தில் பாண்டிய நாட்டில் குறிப்பாக மதுரையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மதுரையை ஆண்டபோது, திருவோண திருவிழா நடந்த செய்தியை மாங்குடி மருதனார் மதுரை காஞ்சியில் கூறியுள்ளார். ஆவணி மாதம் நிறைமதி நன்னாளான திருவோணத்தன்று திருமால் பிறந்ததாகவும், அதனை மக்கள் திருவிழாவாக கொண்டாடியதாகவும் குறிப்பிடுகிறார்.
ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகையாகும். பத்துப்பாட்டு[2][3] நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில்[4][5][6][7][ 8] பாண்டிய மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.
“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார்
மாயோன் மேய ஓண நன் நாள்
கோணம் தின்ற வடு வாழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறுபொரு செருவின்
மாறாது உற்ற வடு படு நெற்றி
சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர்
கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட
நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…" - மதுரைக் காஞ்சி (அடிகள் 590 முதல் 599 வரை)
நாலாயிர திவ்யபிரபந்தத்தில்[9][10][11] பெரியாழ்வார்[12] பரம்பரையாகத் திருமாளுக்கு தொண்டுசெய்வதையும் திருவோண நன்னாளில் நரசிம்ம அவதாரமெடுத்து இரணியனை அழித்தவனை நம் துன்பங்கள் போகப் பல்லாண்டு வாழ்த்துவமே
“எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே” - பெரியாழ்வார் திருமொழி 6
தேவாரத்தில் சம்பந்தர் ஓணம் கபலிசரத்தில் (மயிலை) எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று விளக்குகிறார்[13][14][15][16]
“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்” - திருஞானசம்பந்தர், தேவாரம் 503, திருமறை 2
இன்று அத்திருவிழா தென் தமிழகத்திலும் கோவில்களோடும் நின்றுவிட்டது. பாண்டியன் ஆட்சி செய்த கேரளத்தில் ஓணம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
நாள்பட நாள்பட, சங்கத் தமிழ் விழாக்கள் எல்லாம் மறைஞ்சி போய்…
ஓணம் தமிழ்நாட்டை விட்டே போய்விட்டது போலும்!
தீபாவளி போன்ற வடநாட்டுப் பண்டிகைகள், அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டன!
பொங்கல் மட்டும் இன்னும் இருக்கு! அது வரைக்கும் மகிழ்ச்சி!
கார்த்திகேயன் பாண்டியர் மதுரை மற்றும் 29 பேருடன் உற்சாகமாக
உணர்கிறார்.
“திரு ஓணம் நன்னாள்” கொண்டாட மறந்த தமிழர்கள்.
பண்டை காலத்தில் பாண்டிய நாட்டில் குறிப்பாக மதுரையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மதுரையை ஆண்டபோது, திருவோண திருவிழா நடந்த செய்தியை மாங்குடி மருதனார் மதுரை காஞ்சியில் கூறியுள்ளார். ஆவணி மாதம் நிறைமதி நன்னாளான திருவோணத்தன்று திருமால் பிறந்ததாகவும், அதனை மக்கள் திருவிழாவாக கொண்டாடியதாகவும் குறிப்பிடுகிறார்.
ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகையாகும். பத்துப்பாட்டு[2][3] நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில்[4][5][6][7][
“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார்
மாயோன் மேய ஓண நன் நாள்
கோணம் தின்ற வடு வாழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறுபொரு செருவின்
மாறாது உற்ற வடு படு நெற்றி
சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர்
கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட
நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…" - மதுரைக் காஞ்சி (அடிகள் 590 முதல் 599 வரை)
நாலாயிர திவ்யபிரபந்தத்தில்[9][10][11] பெரியாழ்வார்[12] பரம்பரையாகத் திருமாளுக்கு தொண்டுசெய்வதையும் திருவோண நன்னாளில் நரசிம்ம அவதாரமெடுத்து இரணியனை அழித்தவனை நம் துன்பங்கள் போகப் பல்லாண்டு வாழ்த்துவமே
“எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே” - பெரியாழ்வார் திருமொழி 6
தேவாரத்தில் சம்பந்தர் ஓணம் கபலிசரத்தில் (மயிலை) எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று விளக்குகிறார்[13][14][15][16]
“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்” - திருஞானசம்பந்தர், தேவாரம் 503, திருமறை 2
இன்று அத்திருவிழா தென் தமிழகத்திலும் கோவில்களோடும் நின்றுவிட்டது. பாண்டியன் ஆட்சி செய்த கேரளத்தில் ஓணம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
நாள்பட நாள்பட, சங்கத் தமிழ் விழாக்கள் எல்லாம் மறைஞ்சி போய்…
ஓணம் தமிழ்நாட்டை விட்டே போய்விட்டது போலும்!
தீபாவளி போன்ற வடநாட்டுப் பண்டிகைகள், அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டன!
பொங்கல் மட்டும் இன்னும் இருக்கு! அது வரைக்கும் மகிழ்ச்சி!
விண்மீன் நாட்காட்டி பண்டிகை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக