திங்கள், 21 அக்டோபர், 2019

ஆடி மாதப்பிறப்பு தேங்காய் சுட்டு கொண்டாடும் விழா பண்டிகை

aathi1956 <aathi1956@gmail.com>
செவ்., 17 ஜூலை, 2018, முற்பகல் 11:19
பெறுநர்: எனக்கு

கத்திவாக்கம் பாசுகரன் மகன் நவீனன்
தேங்காய் சுடுதல் - கற்கடகம் / ஆடி முதல் நாளை தமிழர்கள் வரவேற்கும் விழா!
தேங்காய் நாரை முற்றிலும் உரித்துவிட்டு நன்றாக உருட்டியபின், தேங்காயின் 3முகங்களில் ஒன்றில் மட்டும் துளையிட்டு தேங்காய் நீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து வைத்து கொள்ளவும்.
பாசிப்பருப்புடன்,பொட்டுக்கடலை,
எள்ளு,வெல்லம்,சிறிதளவு உப்பிட்டு அரைத்தெடுத்து....தேங்காயின் ஒரு துவாரத்தின் வழியாக அடைத்து சிறிது தேங்காய் நீரை ஊற்றியபின்,துவாரத்தை மஞ்சளிட்டு அடைத்து வாதனங்குச்சியை துவாரத்தில் சொருகி தேங்காயை தீயில் சுட்டபின் கடவுளுக்கு படைத்தபின் உடைத்து குடும்பத்துடன் சாப்பிடும் வழக்கம்தான், ஆடி முதல் நாளை தமிழர்கள் வரவேற்கும் பண்டிகை.
# Aadi1 # Coconut # Festival

சுரேசு பள்ளர்
நான்ங்க கொண்டாடுறோம்

Anbu Saravanan Salem
சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் நாங்கள் கொண்டாடுவோம்
----------------

வெ.பார்கவன் தமிழன்
கடகப் (ஆடி) பிறப்பு முதல் நாள்.
தேங்காய் சுட்டு குலதெய்வத்திற்க
ு அல்லது அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று படைப்பார்கள்.
தேங்காய் நார்களை முற்றாக நீக்கி தேங்காய் கண்களில் துளையிட்டு நீரை வடித்து லேசாக வறுத்த எள்ளு பச்சையரிசி உடைத்த பச்சைபயிறு வெல்லம் அல்லது நாட்டு சக்கரை கலந்து தேங்காய் கண் வழியாக முக்கால்வாசி நிரப்பி வடித்த தேங்காய் நீரை நிரப்பி அழிச்சில் குச்சியை செதுக்கி தேங்காய் கண்ணில் செருகி தேங்காய் குச்சியில் மஞ்சள் பூசி சுட வேண்டும்.
சுட்ட தேங்காயை அருகிலுள்ள குலதெய்வ கோயில் அல்லது அம்மன் கோயிலுக்கு எடுத்து சென்று உடைத்து சாமிக்கு படையல் வைத்து வழிபடவேண்டும். சுட்ட தேங்காய் கலவையின் சுவை தனிச்சிறப்பு.
தமிழர் மறந்துவரும் பண்டிகையில் ஆடி பண்டிகையும் ஒன்று. வருங்காலத்தில் இதுபோன்ற மரபுவழி பண்டிகைகளை தமிழர்கள் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். புதுமண தம்பதியர்களை இதில் பெரும்பாலும் கலந்துகொள்ள வைப்பார்கள்.
அத்துணை தமிழர் உறவின்முறை தமிழ்சாதியினருக்கும் ஆடி முதல்நாள் பண்டிகைக்கு வாழ்த்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக