திங்கள், 21 அக்டோபர், 2019

மனம் உளவியல் பற்றி இலக்கியம்

aathi1956 aathi1956@gmail.com

திங்., 16 ஜூலை, 2018, பிற்பகல் 4:37
பெறுநர்: எனக்கு
Palani Deepan
மனம்.
”அறிவியல் பார்வையோடு எதையும் அணுகும் எனக்கு...டார்வின், டாக்கிங்சு... என்று அறியப்படாத அந்தக் காலத்திலேயே...(?) தனது சொந்த அறிவால் எப்பேர்பட்ட அறிவாளியாகி இருக்கிறார் அவர்... எப்படிப்பட்ட மூளை அவருடையது...அதனால் அவரை வியக்கிறேன்(!)”
மனநல மருத்துவர் சாலினி.
அடடா...!
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவருக்கே அவருக்கு எப்பேர்ப்பட்ட மூளை... என்று வியக்கிற சாலினி அவர்களே....
தமிழர்களான எங்கள் மூதாதையர்கள் எப்பேர்பட்ட மூளைப் படைத்தவர்கள் தெரியுமா...?அதுவும் இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே...?
மனநல மருத்துவரான உங்களுக்கு ஒரு கேள்வி.
இதுநாள் வரை ”மனம்” என்ற ஒன்றைப் பற்றி... அது ஒரு புலன் என்ற வரையறுக்குள் எந்த மேலைநாட்டு அறிஞனாவது, அல்லது விஞ்ஞானியாவது கண்டறிந்து சொல்லியிருக்கிறானா...?
இல்லை.
ஆனால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே... எங்கள் தொல்காப்பியன் சொல்லியிருக்கிறான்.
”மனம்” என்பது ஒரு புலன். இது ஆறாவது புலன். ஐந்து புலன்களோடு இந்த புலனும் இருப்பதாலேயே ஒருவன் மனிதன் என்கிற உயர்திணை ஆகிறான் என்கிறார் தொல்காப்பியன்.
தொல்காப்பியத்திற்கு மிகப் பிற்காலத்திலே தோன்றிய பகவத்கீதை ஆசிரியனையும் இந்த சொல்காப்பிய சொல்லாடல், கண்டுபிடிப்பு மிகவும் கவர்ந்திருக்கிறது.
அதனால்தான் கண்ணன்....” புலன்களில் நான் மனம்” என்கிறான்.
தொல்காப்பியம் நூற்பா 571, பாடல் 27.
”ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப் படுத்தினரே...”
எந்த அளவுக்கு தொல்காப்பியன் வியப்புக்குரியவன்...? அறிந்து கொள்ளுங்கள்.
அதோடு மற்றொன்றையும் சொல்கிறேன்....
இன்று மனநல மருத்துவர் என்று அழைக்கிறோம்.
இதையும் உலகிலேயே முதன் முதலாக, உடல் நலனிலிருந்து மனத்தை தனியாகப் பிரித்து, மன நலத்தின் அவசியத்தை உணர்ந்து ”மன நலன்” என்று குறிப்பிட்டவனும், அது மற்ற நலன்களில் எல்லாம் உயர்வானது என்று பதிவு செய்தவனும் தமிழனே... அவன் திருவள்ளுவன்.
அதிகாரம் 46. பாடல் 45 7.
”மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்”.
இதை கடந்த நூற்றாண்டு இல்லை. இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பு சொன்னவன் தமிழன். மனநலத்தோடு ”இன” நலத்தையும் சேர்த்திருக்கிறான் பாருங்கள் அங்கு நிற்கிறான் அவன் ஒரு தமிழனாக.
கவனியுங்கள்.
”தமிழ்நலம் மன்னுயிர்க்கு ஆக்கம்”
22 மணி நேரம் · பொது

அறிவியல் இனப்பற்று திருவள்ளுவர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக