aathi1956 <aathi1956@gmail.com>
வியா., 19 ஜூலை, 2018, பிற்பகல் 3:14


பெறுநர்: எனக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
தமிழ் பார்ப்பனர்களுக்கு குல தெய்வம் உண்டு... திருச்செந்தூர் முக்காணி (நான் அந்த சாதி தான்) .. அதாவது சாதிப் பெயரே முக்காணி தான்..முக்காணி ஐயர் என்று கூட இல்லை...எங்களது குலதெய்வம் கூடப்ப சாஸ்தா...என் தங்கை கணவரின் குல தெய்வம் குருமூர்த்தி விருது நகர் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் உள்ளது...அதை சிவ வடிவம் என்று கூறினாலும் அது லிங்க வடிவில் இல்லை....முக்காணி என்ற சாதிப் பெயரே திருச்செந்தூர் அருகில் உள்ள முக்காணி என்ற ஊரை பூர்வீகமாகக் கொண்டதால் வந்திருக்கலாம்
பார்ப்பனர் பார்ப்பனத்தமிழர் தமிழ்ச்சாதி
Aathimoola Perumal Prakash
முக்கானி பேசும் தமிழ் பார்ப்பனத் தமிழா?
முறைப்பெண்ணை திருமணம் செய்பவரா?
28 நிமிடங்களுக்கு முன்பு ·
பாண்டிய ராசன் சட்டத்தரணி
முக்காணி தாய் மாமன் மற்றும் தாய் மாமன் மகனை மகளை திருமணம் செய்து
கொள்வர்...பார்ப்பனத் தமிழ் என்று நீங்கள் கூறுவது சினிமாவில் காட்டும்
பார்ப்ணத் தமிழ் என்றால் அவ்வாறு பேசக் கூடியவர்கள் திருவரங்கத்து
ஐயங்கார் பார்ப்பனர்கள் மட்டுமே அவர்களும் கூட சினிமாவில் காட்டும்
அளவிற்கு பேசுவதில்லை... திருச்செந்தூர் பார்ப்பனர்களிடம் பார்ப்பனத்
தமிழ் மிகக் குறவாகவே இருக்கும்...திருச்சுதந்திரர் பற்றி எனக்குத்
தெரியவில்லை... நாங்கள் எங்கள் தாத்தாவின் காலத்திலேயே திருச்செந்தூரில்
இருந்து மதுரைக்கு வந்துவிட்டோம்... அதனால் எனக்கு விவரமாகத்
தெரியாது...சிறு வயதில் உன் பாட்டியுடன் திருச்செந்தூர் சென்றால்
முருகனைக் கும்பிட்டு விட்டு சுடலைமாடனை வழிபட்டு விட்டு வருவோம்...
எங்கள் பாட்டி தாத்தா வீட்டில் பூசை செய்யும் போது என்றும் சமஸ்கிருத
மந்திரங்கள் ஓதிய தில்லை...கந்தசஷடியும்...தேவாரமுமே ஓதி
வணங்குவர்...வெளி பூசைக்குத்தான் (தொழிலுக்கு) சமஸ்கிருத ஸ்லோகங்கள்
10 நிமிடங்களுக்கு முன்பு · Messenger இலிருந்து அனுப்பியது
பாண்டிய ராசன் சட்டத்தரணி
நான் கலப்புத் திருமணம் செய்தவன்
என் மனைவி தமிழ் குறவர்
19/7/18 அன்று, aathi1956 <aathi1956@gmail.com> எழுதியது:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக