aathi1956 <aathi1956@gmail.com>
செவ்., 17 ஜூலை, 2018, பிற்பகல் 12:32
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# நான்மறை என்பது # சமஸ்கிருத வேதங்களா?...அல்வது # தமிழ் வேதங்களா?....
# சிலப்பதிகாரத்தில் ...
# மதுரை நகரில் அந்தணர்கள் அதிகாலையில் கோயில்களில் நான்மறை வேதம் ஓதினர் என்றுள்ளது...இந்த நான்மறைகள் எவை? வட வேதங்களான ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களா?.. ஏனெனில் அந்தணர் ஓதினர் எனக் குறிப்பிடப் பட்டுள்ளதால் இவை சமஸ்கிருத வேதங்களாகத் தான் இருக்கும் என்று மயக்கம் ஏற்படலாம்... ஆனால் அன்று அந்தனர்களால் ஓதப்பட்டவை தமிழ் நான்மறைகளான அறம் பொருள் இன்பம் வீடு தொடர்பான வேதங்களாகத் தான் இருக்க வேண்டும்...
வேதங்களில் கடைசியில் வந்தது அதர்வண வேதமாகும்.அது கி.பி 3 ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்கின்றனர் ஆய்வாளர்கள்... அப்படியிருக்கையில் கி.பி.2 ஆம் நூற்றாண்டில் மதுரையில் எவ்வாறு நான்மறை பாடப்பட்டிருக்க முடியும்?... அப்படியென்றால் அந்த நான்மறை என்பவை தமிழ் தான்...
மேலும்....விசய நகரப் பேரரசின் (தமிழ்நாட்டில் நுழைந்த நாயக்கர்கள் அரசு) முதலாம் ஆட்சிக் காலத்தில் ஆந்திரத்தில் வாழ்ந்த சாயணாச்சாரியர் என்னும் 14 ஆவது நூற்றாண்டுகாலத்து வேத அறிஞர், வேதத்தின் பொருளை விளக்கி எழுதிய, வேதார்த்த பிரகாசா (Vedartha Prakasha) என்னும் நூலே முதன்முதலாக எழுத்து வடிவில் கிடைக்கும் வேதங்களாகும்.
வேதம் த்ரயே’ (வேதம் மூன்றே)என்று அமரகோசம் என்ற வடமொழி நிகண்டு நூல் கூறுகிறது.
இதே போன்று ரிக் வேதத்திலும், மனுஸ்மிருதியிலும் வடமொழி வேதம் 3 என்றே வருகிறது.
பிறகு எப்படி அது நான்மறையானது என்ற கேள்வி சரியான பதிலில்லாமல் தொங்கித் தொய்கிறது...
இதனெதிராக தமிழ் வேதம் அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நான்கு தான் என்பதற்குப் பன்னிரு திருமுறைகளிலிருந்து 135 மேற்கோள்கள் இருக்கின்றன.
வைணவ நாலாயிரத் தமிழும் இதை உறுதி செய்கிறது.
அத்தனையும் பார்க்க இயலாவிட்டாலும் # திருஞானசம்பந்தர் பாடிய பாடல் ஒன்று போதும்! அது வருமாறு:
# சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்அரா நல்லிதழி
சழிந்த சென்னிச் சைவ வேடம் தாம்நினைந் தைம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்
கறம்பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே.
அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கே அந்தனர் அன்று மொழிந்த தமிழ்வேதம் என்பதை இப்பாடலில் தெளிவுபடக் காணலாம்.
தமிழ் வேதங்கள் நான்கிற்கும் நூல்கள் எங்கே என்று வெகுநாளாக பலர் கேட்ட வண்ணம் இருந்தனர்.
அவையோ கடல் போல தமிழில் விரிவன.
எனவே தொகுத்துக் காட்டுவார் இல்லை.
வடமொழி வேதங்கள் கூட வேத வியாசரால் தொகுத்த பிறகு தானே புழக்கத்தில் வந்தன.
அவையும் 1930- களில் அச்சுக்கு வந்த பின் தான் அவை யாவை எனத் தெரிந்தது.
அது போல தமிழ் வேதத்தையும் (இருப்பவை தாம்; இல்லாதவை அல்ல) அவற்றையும் தொகுத்து அச்சேற்றும் காலம் வந்துள்ளது....
# அந்தனர் அல்லது பார்ப்பனர்கள் தமிழர்களே அவர்கள் தமிழகக் கோயில்களில் ஓதி வந்தவை சமஸ்கிருத வேதங்கள் அல்ல தமிழ் வேதங்களே...
தெலுங்கர் வருகைக்குப் பின்னரே இங்கு சமஸ்கிருதம் புகுத்தப் பட்டது என்பதும் அது முதலே இங்குள்ள தமிழ்ப் பார்ப்பனர்களும் சமஸ்கிருத வேதங்கள் பயின்றிருக்க முடியும் என்றும் ஆகவே தமிழ்நாட்டு பார்ப்பனர்களின் தாய் மொழி தமிழ் தான் என்றும் அவர்கள் தமிழர்களே என்றும் அறியலாம்.
1 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி
Ramalingam Thiyagarajan மற்றும் 22 பேர்
காளிங்கன்
வேதங்கள் : எதிர்ப்போரும் மறுப்போரும் ஒரணியா? என்ற எனது கட்டுரை சென்ற மானுடம் இதழில் வெளிவந்துள்ளது நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 1 மணிநேரம் முன்பு
அமீத் அ ர்
ரிக் யதுர் சாம அதர்வன என்பவையே தமிழ் வேதங்கள்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்
ரிக் - உருக்கு வேதம். அதாவது இரும்பை உருக்குவது சம்பந்தமான வேதங்களாக சொல்கின்றனர.
யதுர் -அதர்வன. அதிரும் இசைக் கருவிகள் சம்பந்தமான வேதங்கள் தான் எ்கின்றனர்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 18 நிமிடங்களுக்கு முன்பு
காளிங்கன்
உண்மையான வேதங்கள் தைத்திரியமும், பௌடீகமுந் தவலகாரமுஞ் சாமவேமுமாம். இனி இருக்கும், யசுரும் சாமும் அதர்வணமும் மென்பாருமுளர். அது பொருந்தாது - என்கிறார் புகழ் பெற்ற பார்ப்பன உரையாசிரியர் நச்சினார்க்கினியர்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 9 நிமிடங்களுக்கு முன்பு
Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2017/04/blog-post_98.html?m=0
பார்ப்பனர் ஏன் தமிழில் ஓதுவதில்லை?
வேதம் வேதங்கள் ரிக் பார்ப்பனர்
aathi tamil <aathi1956@gmail.com>
புத., 18 ஜூலை, 2018, பிற்பகல் 12:29
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# பல் யாகசாலை முதுகுடுமி பெருவழுதி என்ற பாண்டிய மன்னன்
# கி.மு.5 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு வாழ்ந்தவன்...
அவன் # நால்வேதங்களிலும் யாகங்களை அதிகமாகச் செய்ததால் இப் பெயர்
பெற்றான்... சமஸ்கிருத வேதமான # அதர்வண வேதத்திற்கும் முற்பட்ட காலத்தைச்
சேர்ந்தவன் இவன்... அவனது காலத்தில் ஓதப்பட்ட வேதங்கள்
# சமஸ்கிருத வேதங்கள் தான் என்று எந்த ஆதாரமும் இல்லை... சமஸ்கிருதத்தின்
3 வேதங்களும் தமிழ் நாட்டில் அறிமுகமாத காலம் அது... மேலும்
# யூபத்தூண் (யாகத்தின் போது பயன்படுத்தப்படும் # தூபத்தூண் )
# சிந்து # சமவெளி நாகரிக # ஹரப்பா நகரில் கண்டறியப் பட்டுள்ளது.சிந்து
சமவெளி நாகரிகம் சமஸ்கிருத # முதல்
# வேதமான # ரிக் வேதத்திற்கும்
# முந்தைய கி.மு.3500-கி.மு.2500 ஆண்டைச் சேர்ந்தது...
#பல் யாகசாலை முதுகுடுமி பெருவழுதியின் காலத்தில் வாழ்ந்த
# நெட்டியமையார் எனும் புலவர் அம்மன்னன் #யூபத்தூண் வைத்து
நால்வேதங்களில் யாகம் செய்ததைப் பற்றி பாடுகின்றார்.... (புறம்.15)
“நால்வேதத்து
அருஞ் சீர்த்திப்பெருங்கண்ணுறை
நெய்மமலி ஆவுதி பொங்க, பல் மாண்
வீயாச்சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன் களம் பல கொல்?
யா பல கொல்லோ?
பொருள்
உன்னால் தோற்கடிக்கப்பட்ட பகைவர்கள் எண்ணிக்கை அதிகமா? அல்லது நான்கு
வேதங்களில் சொன்னபடி நெய்யும் பொரியும் போட்டு யூப ஸ்தம்பங்கள் நட்டு நீ
செய்த யாககங்கள் அதிகமா?என்று பாண்டிய மன்னரைக் கேட்கிறார்
நெட்டிமையார்....
# ஆக அவன் ஓதியவை சமஸ்கிருத வேதங்கள் அல்ல அவை தமிழ் நான்மறைகளே என்பதை அறியலாம்
எனது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோனிலிருந்து அனுப்பப்பட்டது.
17/7/18 அன்று, aathi1956 <
aathi1956@gmail.com> எழுதியது: