புதன், 7 பிப்ரவரி, 2018

பாலை திணை பற்றி மலையடிவாரம் மறவர்

aathi tamil aathi1956@gmail.com

24/10/17
பெறுநர்: எனக்கு
KN Ganesa Moorthy
தமிழன் மறவர் வரலாறு பாலை (திணை)
இந்த பக்கம் சில பிரச்சனைகளை கொண்டுள்ளது
பாலை
இந்த கட்டுரை பாலை நிலத்தைப் பற்றியது. பாலை மரத்தைப் பற்றிய
கட்டுரைக்கு, காண்க பாலை (மரம்).
பாலை என்பது பண்டைத் தமிழகத்தில் பண்பின் அடிப்படையில் பகுத்து
அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். குறிஞ்சி,
முல்லை ஆகிய நிலத்திணைகளுக்க
ு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல்
மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த
சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும். பாலை நிலத்தலைவர் காளை,
விடலை என அழைக்கப்பட்டனர். பாலை நில மக்கள் மறவர் மற்றும் எயினர்
எனப்பட்டனர் "முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு
இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" -
சிலப்பதிகாரம்
பாலை நிலத்தின் பொழுதுகள் தொகு
இளவேனில், முதுவேனில், பின்பனி என்னும் பெரும் பொழுதுகளும் நண்பகல்
என்னும் சிறுபொழுதும் பாலை நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
பாலை நிலத்தின் கருப்பொருட்கள் தொகு
தெய்வம்: கொற்றவை
மக்கள்: விடலை, காளை, மறவர், மறத்தியர்
பறவைகள்: பருந்து, கழுகு
மரங்கள்: உழிஞ, பாலை, இருப்பை
மலர்கள்: மராம்பு
பண்: பஞ்சுரப் பண் (பாலை) யாழ்
பறை : ஆறலை, சூறைகோள்
தொழில்: வழிப்பறி செய்தல், சூறையாடல், ஆறலைத்தல்
உணவு: ஆறலைத்தலால் வரும் பொருள்
நீர்: கிணறு
விலங்கு: வலியிலந்த புலி
யாழ்: பாலையாழ்
ஊர்: குறும்பு
பாலை நிலத்தின் உரிப்பொருட்கள்

இலக்கியம் சாதி போர்க்குடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக