புதன், 7 பிப்ரவரி, 2018

வட்டி திருமூலர் எதிர்ப்பு வர்ணம் அடிப்படையில் வழங்க மனுதர்மம்

aathi tamil aathi1956@gmail.com

24/10/17
பெறுநர்: எனக்கு
 இளங்கோவன் , 3 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
வட்டி - மநு, சாணக்கியர், திருமூலர்
--------------------------------------------------------
கந்துவட்டி என்பது ஏறத்தாழ 40% வருடவட்டி பெறும் தொழில். தனியாரின்
கந்துவட்டியைப்போன்றே, வங்கிகளின் கடனட்டையில் சிக்கிக்கொள்பவர்களும்
கொடுமையடைவார்கள். வட்டிகட்ட விட்டால் வட்டிக்கு வட்டியாய் குட்டிபோடும்
என்பது நாமறிந்ததே.
வரலாற்றில் கொடுமையான வட்டிவீதத்திற்கு மநுவும், சாணக்கியரும் வடிவம்
கொடுக்கிறார்கள். மநுநீதியானது வட்டீவீதத்தையும் வருணப்படுத்தியது.
மநுவின்படி:
பிராமணர்க்கு - 24%
சத்திரியர்க்கு - 36%
வைசியர்க்கு - 48%
சூத்திரர்க்கு - 60%
சாணக்கியரின்படி:
வணிகமல்லாத கடனுக்கு - 15%.
15% வட்டி தருமமான வட்டி என்று சொல்லும் சாணக்கியர், தொழில்வணிகம் என்று
வரும்போது கண்களை சிவப்பாக்கிக்கொள்கிறார்.
வணிக/தொழில் வட்டி - 60%
ஆபத்து நிறைந்த தொழில்/
வணிகத்துக்கான வட்டி - 120%
ஏற்றுமதி/இறக்குமதி தொழிலுக்கு வட்டி - 240%
இன்று, ஆபத்து நிறைந்த தொழிலாக ஆனது, ஆக்கப்பட்டது வேளாண்மையும்,
சிறுவணிகமும்தான். அதனால்தால் அவர்கள் கொடுமைப்படுகிறார்கள். அரசும்
கண்டு கொள்வதில்லை.
கந்துவட்டி, மீட்டர்வட்டி, இராக்கெட்டு வட்டி என்றெல்லாம் மக்கள்
அல்லாடுவதற்கும், வலியோரின் கொடுமை மிகுதற்கும் குறைந்தது 2000 ஆண்டு
வரலாறு இருக்கிறது. அக்கொடுமைகளுக்கு வடிவம் கொடுத்தவர்களாக மநுவும்,
சாணக்கியரும் திகழ்கிறார்கள். சாணக்கியரைத்தான் தில்லியை ஆளும்
பா.ச.கவும் பின்பற்றுகிறது என்று அவர்கள் பெருமையாக
சொல்லிக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டு எத்தர்களும் கொடுவட்டி
ஈட்டிப்பிழைப்பதற்கும் மநு, சாணக்கியரின் சட்டதிட்டங்களே காரணமாக
கருதலாம்.
வடக்கு வட்டியை இப்படி போடுகையில், தமிழ்மரபு என்ன சொல்கிறது?
என்னை நன்றாய் இறைவன் செய்தான்
தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே! என்று சொல்லிய திருமூலர்,
வட்டி வாங்கும் பட்டிப்பதகர் என்று வட்டித்தொழிலையெ கடுமையாக சாடுவார்.
சிலர், வடமொழியில் இருந்த ஆகமங்களை தமிழில் மொழிபெயர்த்தவர் திருமூலர்
என்று சொல்லி உளறுவார்கள். அடிப்படை பண்பாட்டிலேயே வாழ்வியலிலேயெ
வேறுபாட்டை தமிழுக்கும் வடக்கிற்கும் இடையே காண்பிப்பார் திருமூலர்.
அவரின் படைப்பா மொழிபெயர்ப்பு?
எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன்ன
ஒட்டிய நல்லறஞ் செய்யாதவர் செல்வம்
வட்டி கொண்டீட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே.
(திருமந்திரம் - முதல் தந்திரம்)
பட்டிப்பதகர் என்றால், களவுசெய்யும் கொடும்பாவிகள் என்று பொருள்.
கொடுமையான வட்டிவாங்குநரின் தொழில் பிறர்பொருளை களவு செய்யும்
கொடும்பாவத்திற்கு இணையானது என்று சொல்வார் திருமூலர்.
தமிழர் இதை பின்பற்றினாரா என்பது ஐயத்திற்குரியதுதான்.
ஆனால், வட்டிக்கு வடிவம் கொடுத்த வடக்கு வருண வேதிய மரபிற்கும், தமிழ்
சைவமரபிற்கும் 180 திகிரி வேறுபாடுள்ளதை காணலாம். தமிழியக்கம் என்பது
இம்மண்ணில் நிலைத்தால்தான் இயற்கை பிழைக்கும். இயற்கை பிழைத்தால்தான்
இயல்பு வாழ்க்கை பிழைக்கும். வட்டிக்கொடுமைகள் மங்கும்.
தமிழ் சைவமரபுதான் முதன்முதலில் வட்டித்தொழிலை ஏற்காத சமயமரபு.
(இன்றைய வட்டிக்கொடுமை செய்தி இதை எழுதத்தூண்டியது)
நேற்று, 08:16 PM · பொது

கந்துவட்டி கடன் சித்தர் இலக்கியம் பொருளாதாரம் வணிகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக