திங்கள், 9 அக்டோபர், 2017

சுப.உதயகுமார் பிறப்பால் இந்து அவர் கிறித்தவர் கிடையாது

திருத்தமிழ்த் தேவனார்
எல்லோரும் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதுதான் நல்ல தமிழ் உணர்வு
உள்ளவர்களின் கோரிக்கையாக இருக்க முடியும். இப்பதிவை போட்ட பாலமுருகன்
எந்த அமைப்பின்கீழ் பணி செய்கிறார் எனத் தெரிந்தால் இப்பதிவை நீங்கள்
யாரும் பெரிதாக எடுத்திருக்க மாட்டீர்கள். சுப. உதயகுமாரன் இந்து
சமயத்தைச் சார்ந்தவர்தான். அவருடைய வீட்டு பக்கத்தில் ஒரு இந்து கோவில்
இருக்கிறது. அங்கு கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை வைத்து பாட்டு
போடுவார்கள். யாரும் வீட்டிற்குள் பேசவோ, நோயாளிகள் தூங்கவோ முடியாது.
பாட்டின் ஒலி மாசினை குறைக்கச் சொன்னால் குறைக்க மாட்டார்கள். அதனால்
சுப. உதயகுமாரனுக்கும் ஒலி மாசு எழுப்புவர்களுக்கும் பிரச்சனை உண்டு
என்பதால் அவர் அக்கோவிலுக்கு தற்பொழுது வரி கொடுப்பதில்லை எனக்
கருதுகிறேன். அதனால் எழுந்த சிக்கலை, மேலும் சிக்கலாக்க அவர் ஓர்
கிறித்தவர் என்கிற கதை வலம் வருகிறது. பொதுவாக பொதுத்தளத்தில் பணி
செய்யவரும் ஒருவரை எங்காவது ஒரு இடத்தில் முத்திரை குத்தி அவருடைய பெயரை
கெடுக்க வேண்டும் என பலர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிவார்கள். அவருக்கு
வெளிநாட்டிலிருந்து பணம் வந்தது என்றார்கள். பாராளுமன்றம் வரை
பேசினார்கள். அவர் மீது வழக்குப் பதிவு செய்யுங்கள் என்றபோது அன்றைக்கு
மந்திரியாக இருந்த நாராயணசாமி, ஆதாரம் எதுவும் இல்லை என்று
பாராளுமன்றத்திலே பேசினார். கூட்டத்தொடர் முடிந்து அவர் சென்னை விமான
நிலையத்தில் இறங்கியவுடன் பத்திரிகைகாரர்கள் பேட்டி எடுத்தபோது சுப.
உதயகுமாரனுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்திருக்கிறது என்றார். சுப.
உதயகுமாரன்மீது பாலியல் குற்றச்சாட்டு எதுவும் வெளிப்படுத்த முடியவில்லை
என்பதால் அவர் ஒரு கிறித்தவர் என்கிற முத்திரையை குத்துகிறார்கள்.
இதுவும் கடந்துபோகும். அவர், சுயலாபங்களை நாடாத ஒரு நாடாராக இருப்பதால்
பலரை அவரால் பச்சையாக விமர்சிக்க முடிகிறது. அது பலருக்கு சிக்கலாக
இருப்பதால் அவருக்கு ஓர் சிக்கலை உருவாக்க வலை வீசித் திரிகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக