திங்கள், 9 அக்டோபர், 2017

மார்த்தாண்ட வர்மா திருநாள் வேணாடு அரசன் கிடையாது பெண்வழி 1750 குமரி கைப்பற்றல்

Vel Murugan
கேரள வரலாறு :
இன்றைய கேரளாவை உருவாக்கிய மார்த்தாண்டவர்மா எனும் ஆட்சியாளன் ...
வேணாட்டின் வாரீசா ...
இல்லை ...
காயங்குளம் ...
ஆற்றின்கல் ...
கொல்லம் ...
நெடுமங்காடு ...
கருநாகப்பள்ளி ...
தேசிங்க நாடு ...
பண்டலம் ...
புரக்காடு ...
தெக்கம்கூர் ...
போன்ற குறுநில மன்னர் குழுவிலிருந்து மருமக்கள் வழியில் தேர்வானவரா ...?
மார்த்தாண்டவர்மாவின் உண்மை பினபுலம் ...?
வேணாட்டின் இளவலாகிய நேரடி வாரீசா ...?
தொடர்பான வரலாற்றாய்வாளர்கள் கருத்தளிக்கவும் ...!

Aathimoola Perumal Prakash
//1061ல் ஐயடிகள் திருவடி என்கிற தமிழ்மன்னன் இந்தத் திற்பரப்பில்தான்
வேணாட்டு அரசமரபைத் தோற்றுவித்தான்.
தொடர்ந்து வந்த 42வேணாட்டு அரசர்கள் சேரநாட்டை மலையாள மயமாக்காமல்
தமிழர்நிலமாகவே நீடிக்க தொடர்ந்து போராடுகிறார்கள்.
அன்றைய நம்பூதிரிகளின் தலைநகர் போன்றது தற்போது தமிழகத்தில் உள்ள சுசீந்திரம்.
அன்று வேணாட்டு அரசர்கள் இல்லாவிட்டால் சுசீந்திரத்தை மீட்டிருக்கமுடியாது.
இந்த மரபில் 'மூன்றாம் ஆதித்தவர்மன் திருவடி' என்ற மன்னனையும் அவனது
5மகன்களையும் நம்பூதிரிகள் நஞ்சு வைத்துக் கொன்றனர்.
அவனது மனைவியான உமையம்மை பெரும்முயற்சி செய்து அரசை மீட்டார்.
கிட்டத்தட்ட வேலுநாச்சியார் வாழ்க்கை போலத்தான்.
இதன் கடைசி மன்னன் 'பாலமார்த்தாண்ட வர்மன் திருவடி' தற்போதைய
திருவனந்தபுரத்தில் இருக்கும் பத்மநாபசாமியின் தீவிர பக்தனாக இருந்தான்.
தனது தலைநகரான திற்பரப்பை பத்மநாபபுரம் என்று பெயர்மாற்றம் செய்தான்.//
// இவன் திருவரங்கம் (சிறிரங்கம்) கோவிலைப் போலவே பத்மநாபசாமிக்கு
நகலெடுத்ததுபோலக் கோவில் கட்டினான். இவனுக்குப் பிள்ளைகள் இல்லை.
இவன் இரண்டு பெண்களைத் தத்தெடுத்தான் அதன்பிறகு அந்த வம்சம் மலையாளியாகிப்போனது.
திருவடி என்ற அடைமொழிக்குப் பதில் திருநாள் என்ற அடைமொழியைப் போட்டுக்கொண்டனர்.
தற்போதைய மன்னன் பெயர் உத்திராடம் திருநாள்.
பாலமார்த்தாண்டன் சாகும்போது கோவில்சொத்துக்களையெல்லாம் பாதாள அறையில்
வைத்துப்பூட்டி இதைத் திறப்பவர்கள் பாம்புதீண்டி சாவார்கள் என்று
எழுதிவிட்டு இறந்துவிட்டான்.
அந்த சொத்துக்கள்தான் தற்போது வெளியே வந்துள்ளன. இதை வெளியேகொண்டு
வந்தவரும் ஒரு தமிழரே ஆவார்//
http://vaettoli.blogspot.in/2014/10/blog-post_23.html?m=1
திருவனந்தபுரம் தமிழன் சொத்து

Arunkumar Pankaj
நான் படித்தவரை ரவிவர்ம குலசேகரரின் மகன் வீர உதய மார்த்தாண்ட வர்மர்
கி.பி.1314ல் வாரிசு இல்லாத காரணத்தினால் கோலாத்திரி வம்சத்தில் இருந்து
அட்டிங்கல் அரசி & குண்ணுமேல் அரசி இருவரையும் தத்து எடுத்ததாகவும் அது
முதலே மருமக்கள் வழி வாரிசு முறை கடைபிடிக்கப் பட்டதாகவும் தெரிகிறது.
அனுஷம் திருநாள் மார்த்தாண்ட வர்மர் காலத்தில் இருந்து அல்ல..

Arunkumar Pankaj
கோலாத்திரி வமசத்தில் இருந்து அவரது தாயும் அவருக்கு முன் ஆட்சி செய்த
ராமவர்மாவும் தத்தெடுக்கப்பட்டதாக படித்துள்ளேன்.

Muthar Sangu
மார்த்தாண்ட வர்மாதான் முதல் பெண் வழி ஆட்சியாளர்!

Abilash Kar
The ivory throne author : manu s Pillai book will help you i guess
திருவிதாங்கூர் கன்னியாகுமரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக