ஆமா யார் சார்.. அந்த தமிழன்..?!
சமூகம், பாலா டூன்ஸ் Leave A Comment
நானும் பலமுறை கவனித்துக்கொண்டிருக்கிறேன்.. தமிழர் உரிமை குறித்த
விவாதம் வரும்போதெல்லாம்.. தவறாமல் `யார் தமிழர்கள்’ என்ற பதில் கேள்வியை
திராவிட அறிவுஜீவிகள் கிளப்புகிறார்கள்.
(கவனிக்க.. கேள்வி எழுப்புவது இந்தியர்கள் அல்ல..)
எப்படி இப்படி ஒரு அறிவுப்பூர்வமான கேள்வியை கேட்கிறார்கள் என்று பயங்கர
ஆச்சர்யமாக இருக்கும். அவர்களின் அறிவைப்பார்த்து ஆனந்தத்தில்
கண்ணெல்லாம் கூட வேர்க்கும்னா பார்த்துக்கோங்களேன்..
இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் இருக்கின்றன.. இந்தியா ஒரு தனி
இனத்தின் நாடு அல்ல.. பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பு.
அதில் மராத்தியர்கள்.. தெலுங்கர்கள்.. கன்னடர்கள்.. மலையாளிகள்..
பஞ்சாபிகள்.. வங்காளிகள், குஜராத்திகள், என்றெல்லாம் இருப்பதுபோல் தமிழர்
என்பதும் ஒரு தேசிய இனம்.
நான் மும்பையில் எத்தனை தலைமுறையாக இருந்தாலும் எனக்கு நன்றாக மராத்தி
பேசத்தெரிந்தாலும் கூட நான் மராத்தியன் ஆக முடியாது.. நானும்
மராத்தியர்தான் என்று போலியாக அடையாளப்படுத்திக்கொண்டதில்லை. அவர்களிடம்
சென்று யாரெல்லாம் மராத்தியர்கள் என்று அபத்தமாக கேள்வி கேட்டதில்லை.
நீங்கள் மராத்தியர் என்று உங்களை அடையாளப்படுத்திக்கொள்வது என்னை
அந்நியப்படுத்துகிறது.. அதனால் நம்மிருவருக்கும் பொதுவான பெயராக
திராவிடர் என்பதுபோல் ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்வோம் என்று திரிபுவாதம்
செய்து அவர்கள் இன அடையாளத்திற்கு புதுப்பெயர் கொடுத்து சிதைக்க
விரும்பியதில்லை.
நான் தமிழன் என்று அறிந்தே அவர்கள் என்னிடம் நட்பு பாராட்டுகிறார்கள்..
எங்களுக்குள் நட்பாக இருப்பதில் எந்த மொழிப்பிரச்சினையும் ஏற்படவில்லை.
தமிழகத்திலும் அப்படி பிறமொழி நண்பர்களுடன் நட்பாகதான் இருக்கிறேன்.
ஆனால் தமிழகத்தில் தமிழர்களின் உரிமை தொடர்பான விவாதம் வரும்போதெல்லாம்
தவறாமல், யார் தமிழர்கள் என்ற நுட்பமான கேள்வி எழுப்பப்படுகிறது.
இப்படி ஒரு கேள்வி எழுப்பப்படுவதே அபத்தமாக இருக்கிறது. யார் மலையாளி..
யார் கன்னடர்.. யார் தெலுங்கர்.. யார் மராட்டியர் என்றெல்லாம் கேள்வி
எழுப்புவீர்களா..
ஆனால் தமிழர்கள் என்று வரும்போதும் மட்டும் திரும்ப திரும்ப யார்
தமிழர்கள் என்ற கேள்வியை எதற்காக எழுப்புகிறார்கள். இப்படி கேள்வி
எழுப்புவர்கள் எல்லாம் திராவிடத்தை ஆதரித்து பேசுபவர்களாக
இருக்கிறார்கள். இவர்கள் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும்
போராடுபவர்களாக வெளி தோற்றத்தில் தங்களை கட்டமைத்து கொண்டவர்களாக
இருக்கிறார்கள்.
இந்த யார் தமிழர்கள் என்ற கேள்வி அறியாமையால் எழுப்பப்படுவது இல்லை.
திட்டமிட்டே எழுப்பப்படுகிறது. இறுதியில் சாதிதான் தமிழர்களின் அடையாளாமா
என்று மடக்கிவிட்டதாக நம்பியர் போல் பயங்கரமாக சிரிக்கிறார்கள். தமிழ்
நாட்டில் பள்ளியில் தமிழ்மொழி கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும் எனும்போது,
ஐயகோ.. இனவெறி பாரீர் என்று முற்போக்காக கொதிக்கிறார்கள்.
இந்த கம்பெனி ஆட்கள் பக்கத்து மாநிலங்களான தெலுங்கானாவில் தெலுங்கு
கட்டாயம் எனும்போதோ, கர்நாடகாவில் கன்னடம் கட்டாயம் எனும்போதோ வாய்
திறப்பதில்லை.
சரி யார் தமிழர் என்ற பஞ்சாயத்திற்கு வருவோம்..
இந்தியாவில் வசிக்கும் பிற மொழி தேசிய இனங்களுக்கு அந்த மொழி
சார்ந்தவர்கள் என்பதற்கு என்ன வரையறையோ அதுவேதான் தமிழர்கள் என்பதற்கான
வரையறையும் கூட.
அந்த வகையில் தாய்மொழியாக தமிழ் மொழியை கொண்டவர்கள் மட்டுமே
தமிழர்களாகிறார்கள். மராத்தியையோ தெலுங்கையோ கன்னடத்தையோ தாய்மொழியாக
கொண்டவர்கள் அந்த மொழி சார்ந்தவர்கள்.
ஆக எவரெல்லாம் தமிழை தாய்மொழியாக கொண்டிருப்பார்கள்..
இயல்பாகவே தமிழகத்தின் பூர்வீகக்குடி இனக்குழுவினர்தான் தமிழை
தாய்மொழியாக கொண்டிருப்பார்கள். இவர்கள் உலகின் எந்த மூலையில்
இருந்தாலும் அவர்கள் தமிழர்கள்தான்.
இப்படி அடையாளப்படுத்துவதற்கு சீமானோ மணியரசனோ அல்லது
வேறு யாரும் அத்தாரிட்டி கிடையாது. நான் தமிழன் என்று ஒரு தமிழர்
யாரிடமும் போய் ஸ்டாம்ப் குத்தி அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய
அவசியமில்லை. என் தாய்மொழி தமிழ் என்றால் நான் தமிழன். என் தாய்மொழி
மலையாளம் என்றால் நான் மலையாளி அவ்வளவுதான்.
வீட்டில் தங்கள் தாய்மொழியையும்
வெளியில் உரையாடல் மொழியாக தமிழை சிறப்பாக பேசும் எழுதும் படிக்கும்
தமிழ் நாட்டில் வசிக்கும் பிற மொழியினர் எல்லாம் தமிழகத்தைச்
சேர்ந்தவர்கள் அவ்வளவுதான்.
`தமிழர்களுக்கும்’.. `தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களுக்குமான’ எளிய
வித்தியாசம் இதுதான்.
தமிழ்நாட்டில் நீண்டகாலம் வசிப்பதாலயே ஒருவர் தமிழர் ஆகிவிட முடியாது.
நான் தமிழன் என்பதால் இதை சொல்லவில்லை. நான் மராட்டியனாக இருந்தாலும்
இதைதான் சொல்வேன்.
ஏனெனில் ஒரு இனத்தின் அடையாளத்தை தங்கள் அரசியல் லாபத்திற்காக திரிபு
செய்வது அயோக்கியத்தனம்.
ஒப்பிட்டளவில் பிற எந்த மாநிலத்தையும் விட தமிழகம் பிறமொழியினருக்கு
பாதுகாப்பானது. பிறமாநிலங்களில் தங்கள் மண்ணின் மைந்தனை தவிர வேறு
யாரையும் அதிகாரத்திற்கு வர அனுமதிப்பதில்லை. ஆனால் தமிழகத்தில் மக்கள்
செல்வாக்கை பெற்றுவிட்டால் போதும் அவர்களை அதிகாரத்தில் அமர வைத்து அழகு
பார்ப்பார்கள் தமிழர்கள்.
அதனால் தமிழர்கள் தங்களை தமிழர்கள் என அடையாளப்படுத்தும்போதோ.. தங்கள்
மொழி உரிமையை பேசும்போதோ எரிச்சல் அடையாதீர்கள்.
அப்படி உங்களுக்கு எரிச்சல் வருமாயின் நீங்கள்தான் இனவெறியர்களே தவிர..
தமிழர்கள் அல்ல..!
-கார்ட்டூனிஸ்ட் பாலா
www.linesmedia.in
13-9-17

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக