திங்கள், 9 அக்டோபர், 2017

ஜனகன் சனகன் ஹஜ் கட்சு மதம் தமிழ்மயமாக்கல் ஏற்கனவே

வள்ளுவத்தேவன் உதய்
அங்கு மட்டுமில்லை.
எங்கேயும் சமயத்தைக் காட்டிலும் மொழிச்சார்பே இறைவழிக்கு எடுத்தாளப்படுகிறது.
வால்மீகி இராமகாதையில் "ஜனகன், லக்ஷ்மணன், ஹனுமன் " போன்றோரைத் தமிழில்
எழுதிய கம்பன் "சனகன், இலக்குவன், அனுமன் " என்றே தமிழுக்கு
முன்னிற்கிறார்.
இதேபோல, சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவர் "ஹஜ் பயணத்தைக் "
குறிக்குமிடத்தில் தமிழுக்கு முன்னின்று "கட்சு " என்றெழுதுகிறார்.
இதுபோலவே தான் அல்லா என்ற விளிப்பும்.
முஹம்மது - முகமது என்றும் ரஹ்மான் - ரகுமான் என்றும் தமிழே முன்னிறுத்தப்பட
்டு இறைவழி தேடப்படுகிறது.

Aathimoola Perumal Prakash
பைபிளை மொழிபெயர்த்த நாவலரும் அவ்வாறே. ஜான்-யோவான், மேத்யூ-மத்தேயு,
ஜீசஸ்-ஏசு, ஈவ்-ஏவாள், மேரி-மரியாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக