செவ்வாய், 10 அக்டோபர், 2017

வெங்கடேசபண்ணையார் நாடார் அதிமுக திமுக சாதி அரசியல்

திராவிடம் சாதி வளர்த்த கதை.
---------------------------------------------------
தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு 144 தடை அமலில் உள்ளது.
சாதிய ரவுடி ஒருவரின் நினைவு நாளை முன்னிட்டு இந்த தடை. வெளியில் இருந்து
பார்ப்பவர்களுக்கு இது ஒரு சாதிய நிகழ்வாக மட்டும் தெரியும். அந்த
சாதிவெறிக்கு பின்னால் திராவிடம் ஒளிந்து கிடப்பது பலருக்குத் தெரியாது.
ஜெயாவின் ஆட்சியில் வெங்கடேச பண்ணையார் என்னும் ரவுடி என்கவுண்டரில்
கொல்லப்படுகிறார். அப்போது நாடார் சாதியை அதிமுகவுக்கு எதிராக திருப்பும்
வேலையை சூத்திர(திராவிட) முன்னேற்ற கழகம் திறம்பட செய்தது.
ரவுடியின் மனைவி ராதிகாசெல்வி உடனே திமுகவில் சேர்க்கப்படுகிறார். அடுத்த
தேர்தலில் அவருக்கு எம்பி சீட் கொடுத்து சாதி வெறியை வலுப்படுத்தி வெற்றி
பெறுகிறது திமுக.
சாதியத்தின் மூலம் தங்கள் காரியம் முடிந்த பிறகு சாதியவாதிகளை விலக்கி
வைப்பதுதான் திராவிட அரசியல். அப்பதான் முற்போக்கு அடையாளம் கொடுக்க திக,
திவிக, தபெதிக போன்ற சூத்திர(திராவிட) இயக்கங்கள் தயாராவார்கள். தலித்
வாக்குகளையும் பெறலாம்.
ராதிகாசெல்வி தற்போது திமுகவில் தடம் காணாமல் போய் விட்டார். ஆனால் அன்று
திமுக கொளுத்திப்போட்ட சாதிவெறி இன்றும் எரிகிறது.
குருபூஜை, ரிப்பன் கட்டுதல், சாதிய முழக்கங்கள், போஸ்டர்கள் என நாடார்
சாதி இளைஞர்களைப் பின்னோக்கி நகர்த்துகிறார்கள். மற்றொரு பக்கம் காவி
கும்பல் நாடார் சாதியில் ஆள் எடுத்துக் கொண்டிருக்கிறது.
வலதுசாரி/இடதுசாரி தமிழ்த்தேசியம் என வகைப்படுத்தும் புதிய பெரியார்
பக்தர்கள் கூட இந்த "திராவிட சாதிவெறி அரசியல்" குறித்து பேச
மாட்டார்கள். திராவிட புனிதம் கெட்டுவிடக் கூடாதல்லவா!!
புரிந்தவன் பிழைத்துக் கொள்வான்.
புரியாதவன் ஆரிய மற்றும் திராவிட சாதிய அரசியலுக்கு பலியாவான்.
சகோதரர் Gurunathan Sivaraman அவர்கள் எழுதிய பதிவு இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக