Arul Natesan
அனிதா: உங்களைப் புலிகள் என்று ஏன் அழைத்துக் கொள்கிறீர்கள் ?
பிரபாகரன்: தமிழர்களின் அரசியல் வரலாற்றில் புலிச்சின்னமானத
ு ஆழ்ந்து வேரோடி இருப்பதால் தான் எமது இயக்கத்திற்கு ‘விடுதலைப்
புலிகள்’ என்று பெயரிட்டேன். புலிச்சின்னமானத
ு தமிழ்த் தேசியத்தின் புத்தெழுச்சியை உருவகப்படுத்துகிறது. அத்துடன்
கொரில்லா யுத்த முறையைய்யும் புலிச்சின்னம் குறித்து நிற்கிறது.
அனிதா: விடுதலைப் போராட்டத்தில் உங்களது நீண்டகால அனுபவமானது, வாழ்க்கை
பற்றிய உங்களது நோக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்த
அனுபவங்களின் மூலம் உங்கள் பார்வையில் ஏற்பட்ட தாக்கங்கள் பற்றியும்,
உங்கள் இலட்சியத்தில் எழுந்த உறுதிப்பாடுகள் பற்றியும் கூறுவீர்களா?
அத்துடன் உங்கள் அனுபவங்கள் நீங்கள் ஏற்கனவே வரித்துக் கொண்ட சில
கொள்கைகள், கோட்பாடுகள் நடைமுறையில் எத்துணை பொருத்துமற்றது என்பதனை
உணர்த்தும் அதேவேளையில் வேறு சில சரியானவைதாம் என்ற கருத்தினையும்
ஏற்படுத்தியிருக
்கலாம் அல்லவா ? அவற்றில் சிலவற்றைக் கூறுவீர்களா?
பிரபாகரன்: நாங்கள் வரித்துக்கொண்ட ஆயுதப் புரட்சிப் பாதை மிகவும்
சரியானது என்பதைக் கடந்த 12 வருடகால அனுபவங்கள் சந்தேகத்திற்கு
இடமில்லாமல் எனக்கு உணர்த்தியிருக்கின்றன. எமது ஆயுத ரீதியிலான போராட்ட
வடிவத்தை ‘பயங்கரவாதம்’ என்று விமர்சித்த மற்ற விடுதலைக் குழுக்குள்
ஒடுக்கப்பட எமது மக்களின் விடுதலைக்கான ஒரே வழி ஆயுதப் போராட்டம் தான்
என்பதை இப்போது ஏற்றுக்கொண்டு விட்டன. நாங்கள் கைக்கொண்ட கொரில்லா
யுத்தமுறையானது விடுதலைப் போராட்டத்தின் வலிமைமிக்க வடிவமாக
அமைந்திருக்கிறது.
எமது வெற்றிகரமான கொரில்லாத் தாக்குதல்கள், சிங்கள ஆயுதப் படைகளைத்
தோற்கடித்து, சுதந்திரத்தை வென்றெடுக்க எம்மால் முடியுமென்ற நம்பிக்கையை
எமது மக்களுக்கு ஊட்டியிருக்கின்றன.
இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
அனிதா: இலங்கை அரசாங்கத்தால் தேடப்படுபவர்களில் முதன்மையானவராக இருப்பது
குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பிரபாகரன்: பிரிட்டிஷ் அரசாங்கம் யாரைப் ‘பயங்கரவாதி’ என்று சொல்கிறதோ,
அவனே உண்மையான ஐரிஸ் தேசியப் போராளி என்று ஐரிஸ் தலைவர் ஒருவர்
குறிப்பிட்டார். அதுபோல, இலங்கை அரசு என்னைத் தேடப்படுபவர்களில்
முதன்மையானவராகக் கருதினால் அது நான் உண்மையான தமிழ்த் தேசிய போராளி
என்பதையே உணர்த்துகிறது. அவ்வாறு தேடப்படும் நபராக இருப்பதில்
பெருமைப்படுகிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக