புதன், 20 செப்டம்பர், 2017

இணையம் தமிழ் முதலிடம் இந்தி இரண்டாவது கன்னடர் மூன்றாவது மொழிப்பற்று தமிழ்மொழி

ஹிந்தியை விட தமிழ் மொழி தான் இணையத்தில் அதிகம் பயன்படுகிறது : ஆய்வின்
முடிவால் மத்திய அரசு அதிர்ச்சி..,
இந்தியப் பேரரசின் ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’ என்கிற கோட்பாட்டிற்கு
வேட்டுவைக்கும் ஆய்வு முடிவு ஒன்றினை KPMG & Google நிறுவனங்கள்
வெளியிட்டுள்ளன.
ஹிந்தி மொழியை விட தமிழ் மொழிதான் இணையத்தில் அதிகம் பயன்படுவதாக அந்த
ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில் இந்திய மொழிகளின் மூலமாக 23 கோடி பேர்
இணையத்தை பயன்படுத்தியுள்ளனர். இது 2021-ல் 54 கோடி பேராக அதிகரிக்கும்.
இந்திய மொழிகளில் தமிழ் மொழிதான் மிக அதிகமாக இணையப் பயன்பாட்டில்
இருப்பதாகவும் (42%), இதற்கு அடுத்த இடத்தில் ஹிந்தி மொழி (39%)
இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.
அதுமட்டுமல்லாமல், அடுத்த 5 ஆண்டுகளில் “தமிழ், கன்னடம், தெலுங்கு” ஆகிய
தென் மொழிகள்தான் இந்தியாவின் இணையப் பயன்பாட்டில் அதிகம் இருக்கும்
எனவும் இந்த அறிக்கை கூறுகிறது!
ஒருவேளை, இணையத்தில் தமிழுக்கு பதிலாக ஹிந்தியை தான் பயன்படுத்த வேண்டும்
என்று சட்டம் போடுமோ இந்தியப் பேரரசு? யார் கண்டது, நடந்தாலும் நடக்கும்!

seithipunal.com/tamil-more-useful-then-hindi-in-internet/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக