Magudeswaran Govindarajan
தாள்களை நகலெடுப்பதை ‘ஜெராக்ஸ்’ என்றே கூறிப் பழகிவிட்டோம். இதற்கொரு
நல்ல தமிழ்ச்சொல்லைத் தேடியபடி இருந்தேன்.
நகல் என்பது உருதுச்சொல். பிரதி என்பது வடசொல். ஜெராக்ஸ் என்னும் சொல்லே
நகலுக்குப் பெயராக ஆகிவந்ததைக் கிண்டல் செய்திருக்கிறோம். அவ்வாறு
கிண்டலடித்தது பொருளற்றது என்று தோன்றுகிறது. ஏனென்றால் நம் மரபில்
ஆகுபெயர் என்று ஒன்றிருக்கிறது.
ஒன்றுக்குப் பெயராக ஆகிவருவது அதனோடு தொடர்புடைய மற்றொன்றுக்கும்
பெயராகிவிடும். அதுதான் ஆகுபெயர். ஊர் சிரித்தது’ என்றால் அது ஊரில்
வசிக்கும் மக்களைக் குறிக்கும். இங்கே ஊர் என்பது இடப்பெயர்.
இவ்விடப்பெயர் “இடத்தில் வசிக்கும் மக்களைக்” குறித்தமையால் இது
இடவாகுபெயர்.
கருவியாகு பெயர் என்றும் ஒன்றிருக்கிறது. ஒரு கருவியின் பெயர் அதனால்
தோற்றுவிக்கப்படும் பொருளுக்கும் பெயராகிவிடும். அதன்படி ‘ஜெராக்ஸ்
மெசின்’ உருவாக்கும் பொருளை ஜெராக்ஸ் என்றே அழைத்துவிட்டோம்.
நம் இரத்தத்தில் ஊறிய பழக்கத்தால் வந்த பெயர்தான் அது. ஜெராக்ஸ் என்பது
நிறுவனப் பெயரே ஆனாலும் அது ஆங்கிலத்திலும் நம்மவர்களால் அவ்வாறே
வழங்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.
சரி, ஜெராக்ஸ் என்னும் நகல் தாளுக்குத் தமிழில் என்ன ? போட்டோகாபி என்பது
அதன் ஆங்கிலச்சொல் என்பதால் தமிழில் அதனை ‘ஒளிப்படி’ எனலாம்.
ஜெராக்ஸ், நகல், காப்பி என எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு ‘ஒளிப்படி’
என்றால் பொருத்தமாக இருக்கும். போட்டோ என்றால் ஒளி. காபி என்றால் படி.
நகலெடுக்கும்போது அந்தக் கருவி ஒளியை வழித்துச் செல்வதைப்பார்க்கலாம்.
அதனால் ஜெராக்ஸ் என்பதற்கு ‘ஒளிப்படி’ பொருந்தும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக