Kadanganeriyaan Perumal
2013 மே மாதக் கடைசியில் தினகரன் இணைப்பிதழுக்கு திருமதி சுஜாதா அவர்கள்
கொடுத்த பேட்டியின் ஒரு பகுதி .
“பொதுவா கலை உலகைச் சேர்ந்தவர்கள் வேற உலகத்துல வாழ்வாங்கன்னு சொல்வாங்க.
அதை என் கணவர் விஷயத்துல கண்கூடாப் பார்த்தேன். அவரோட மனநிலை எப்ப,
எப்படி மாறும்னு யாருக்கும் தெரியாது. தன்னோட அந்தரங்கத்துக்குள்ள அவர்
யாரையும் அனுமதித்ததில்லை. எப்பவும் எழுதறது, படிக்கறது,
ஸ்டோரி டிஸ்கஷன் என்று ஒரு வட்டத்துக்குள்ளேயே இருப்பார். மனைவி,
குழந்தைங்க பத்தின சிந்தனை அவருக்குக் கிடையாது. சுருக்கமாச் சொல்லணும்னா
பசங்க என்ன படிச்சாங்க, எப்படிப் படிச்சாங்கன்னு கூட அவருக்குத்
தெரியாது. பசங்களாப் படிச்சாங்க…. அவங்களா வேலையைத் தேடிகிட்டாங்க…
அவங்களா பிடிச்ச பெண்ணைத் திருமணம் செய்துகிட்டாங்க…
மத்தபடி அப்பாவா அவர் எந்த ஸ்டெப்பும் எடுத்ததில்லை.
இந்த மனநிலையை மனைவியான என்னிடமும் செலுத்தினார். நான் சாப்பிட்டனா….தூங்கினேனா…
எனக்கு என்ன வேணும்… எதையும் அவர் கேட்டதில்ல… செஞ்சதில்ல. அவர் எழுதினதை
நான் படிச்சா அவருக்குப் பிடிக்காது.
குடும்பத்தைத் தாண்டிப் பெண்கள் வெளில வரக்கூடாதுனு நினைப்பார். இதுக்குக் காரணம்,
அவர் வளர்ந்த விதம்.
அவரோட உலகம் ரொம்பச் சின்னது. ஸ்ரீரங்கத்துல பாட்டி வீட்லதான்
வளர்ந்தார். அந்த அஹ்ரகாரம்தான் அவருக்கு எல்லாம். அதைத் தாண்டி அவர்
சின்ன வயசுல வந்ததில்லை. வளர்ந்தபிறகு கூட மனதளவுல அந்த அஹ்ரகாரப்
பையனாத்தான் இருந்தார்.
ஆனா எங்க வீட்ல அப்படிக் கிடையாது. பெண்களுக்கு எல்லா உலக விஷயமும் தெரியணும்,
அவங்களும் படிக்கணும்னு நினைச்சாங்க. அப்படித்தான் என்னை வளர்த்தாங்க.
எங்க தாத்தா ஆங்கிலேயர் கிட்ட வேலை பார்த்தவர். அதனால எங்கம்மாவுக்கு
ஆங்கிலத்தையும்,
அறிவியலையும் தாத்தா ஸ்பெஷலா ஒரு ஆங்கிலோ இந்திய டீச்சரைப் ப்ரைவேட்டா
நியமிச்சு படிக்க வச்சார்.
என் தங்கை டாக்டருக்குப் படிச்சுட்டு அமெரிக்காவுல இருக்கா. ஒரு
தம்பியும் அமெரிக்கால செட்டிலாயிட்டான். இன்னொரு தம்பி சென்னைல நல்ல
வேலைல இருந்து ரிடையர் ஆகியிருக்கான்.
இப்படிப்பட்ட குடும்பத்துலதான் 20 வருஷங்கள் வளர்ந்தேன். திடீர்னு
கல்யாணமாகி வேறொரு சூழல் அமைந்ததும் முதல்ல ஒண்ணும் புரியலை. கிட்டத்தட்ட
பத்து வருஷங்கள் ரொம்பச் சிரமப் பட்டேன். அப்புறம் என் கணவரோட உலகம்
எனக்கு பழகிடுச்சு. அவரோட உலகத்துக்குத் தகுந்த உயிரினமா வாழ
ஆரம்பிச்சேன்.
பல நாட்கள் அம்மா மடில படுத்து அழுதிருக்கேன். திரும்பி வந்துடறேன்னு
கதறியிருக்கேன். ஆனா, குழந்தைகளோட ஒரு பொண்ணு தனியா வாழ முடியாது அட்ஜஸ்
பண்ணிக்கன்னு சொன்னாங்க. அந்த காலகட்டம் அப்படி. அதுவே இன்றைய சூழ்நிலையா
இருந்திருந்தா எங்கம்மா கிட்ட யோசனை கேட்டிருக்க மாட்டேன். குழந்தைகளோட
தனியா வந்திருப்பேன்…
அவருக்கு மனைவி குழந்தைகள் மேல அன்பு இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனா, அதை
வெளிப்படுத்தத் தெரியாது. வெளிப்படுத்தாத அன்பால யாருக்கு என்ன பயன்!
உறவுங்கிற சக்கரம் சுழல அன்புதானே அவசியம். அவரை முழுசாப் புரிஞ்சிக்க
எனக்குப் பத்து வருஷங்களாச்சு. அதுக்குப் பிறகு, என்னோட சுயத்தை
விட்டுட்டு, அவருக்காகவும்,
பிள்ளைகளுக்காகவும் வாழ ஆரம்பித்தேன். அவருக்கு ரெண்டு பைபாஸ் சர்ஜரி
நடந்தது. அதனால அவரால எங்கயும் போக முடியாது. துணையா நான் இருந்தேன்.
எங்களுக்கு ரெண்டு பசங்க. ரெண்டு பேருமே அமெரிக்காவுல வேலை
பார்த்துகிட்டு இருந்தாங்க. அவர் காலமானதும் பெரியவன் சென்னைக்கு
வந்துட்டான். சின்னவன் அமெரிக்காவுலதான் இருக்கான். எனக்கு வர்ற மருமகள்
தமிழ்ப்பெண்ணா இருக்கணும்னு ஆசைப் பட்டேன். அது நடக்கலை. பெரியவன்
பஞ்சாபிப் பெண்ணையும், சின்னவன் ஜப்பானியப் பெண்ணையும் விரும்பிக்
கல்யாணம் செஞ்சுகிட்டாங்க. ஆனா ரெண்டு மருமகள்களுமே தங்கமானவங்க..
என்னைக் கைல வச்சுத் தாங்கறாங்க..
இதுவரைக்கும் கணவன், மாமனார்,
மாமியார், அம்மா, அப்பா,
பிள்ளைகள்னு மத்தவங்களுக்காகவே வாழ்ந்துட்டேன். இப்பதான் எனக்காக வாழ
ஆரம்பிச்சுருக்கேன். கோயில்,
யாத்திரைகள்னு பொழுது போகுது. அமெரிக்காவுல இருக்கற சின்னவன் வீட்டுக்கும்,
தம்பி, தங்கைகள் வீட்டுக்கும் போய் வர்றேன், விருப்பப்பட்ட புத்தகங்களைப்
படிக்கிறேன். என்னோட நேரங்கள் எனக்கானதா செலவாகுது. பெரிய
எதிர்பார்ப்புகள் எனக்குக் கிடையாது. அதனாலேயே சந்தோஷமா இருக்கேன்.
ஏன்னா,
எதிர்பார்ப்பு இருந்தாதான் ஏமாற்றம் ஏற்படும். என் வாழ்க்கை எனக்குக்
கத்துக் குடுத்த பாடம் இது.”

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக