வியாழன், 21 செப்டம்பர், 2017

ஆஷ் வாஞ்சி குற்றாலம் இந்தியர் குளிக்க தடை போட்டது ஆங்கிலேயர் துப்பாக்கி அனுப்பியவர் மும்பை பெண் வவேசு ஐயர் பயிற்சி

 ஆஷூம்_வாஞ்சிநாதனும்_1
வாஞ்சி நாதன் சுதந்திரப் போராட்ட வீரனா?
ஆஷ் தலித்களின் பாதுகாவலனா?
சில வரலாற்று தகவல்கள்.( 1 )
1906 இந்திய வரலாற்றில் முக்கியமானது. அந்நிய பகிஷ்கரிப்பு இயக்கம் நடந்த ஆண்டு.
சுதேசி இயக்கம் வீறு கொண்டு எழுந்த ஆண்டு.
இதன் ஒரு பகுதியாகவே தூத்துக்குடியில் சுதேசி இயக்கம் உருவானது.
இதன் முன்னணி தலைவர் வ.உ.சி.
சுதேசி இயக்கத்தின் வெளிப்பாடே வ.உ.சி உருவாக்கிய சுதேசி கப்பல்
கம்பெனி.( சுதேசி ஸ்டீம் நாவிகேசன் லிமிடெட்)
இந்தக் கப்பல் கம்பெனியை நிர்மூலமாக அழித்தவன் ஆஷ்துரையே.
1908 மார்ச் 12 வ.உ.சி யை கைது செய்தவனும் ஆஷ்துரைதான்.
இதையொட்டி நடைபெற்ற போராட்டமே நெல்லை எழுச்சி என்பது வரலாற்று பதிவு
குற்றால அருவியில் காலையில் இந்தியர்கள் குளிக்க அனுமதியில்லை என்று
உத்தரவு போட்டவனும் ஆஷ்துரைதான்.
குற்றால கோவில் டிரஸ்ட்கள் இதை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர்
வெள்ளையர்கள் குளிக்கும் போது அவர்களுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்று
சபார்டினேட் ஜட்ஜ் தீர்ப்பு வழங்கினான்.
இத்தகைய அரசியல் பின்னணியில் உருவானது தான் பாரத மாதா சங்கம்.அதன்
உறுப்பினர் வாஞ்சி நாதன்.
பாரத மாதா சங்கப் பிரகடனம் என்ற பிரசுரமும் வெளியடப்பட்டது.
அதில் வெள்ளை அரசு குறித்த அக்கிரமங்கள் பட்டியலிடப்பட்டது
இந்தப் பிரசுரம் "பறங்கி அச்சு இயந்திர சாலை, அழகர் கோவில்,மதுரை" எனவும்
அச்சிடப்பட்டு
அழகர்கோவில் திருவிழாவுக்கு வந்தவர்களிடம் விநியோகிக்கப்பட
்டதாக கூறுகிறது போலீஸ் குறிப்பு.
இந்த அமைப்பின் முக்கியமான ஒருங்கிணைப்பாளர் நீலகண்ட பிரமச்சாரி.
திருவல்லிக்கேணி கூட்டுறவு சொசைட்டியில் வேலை பார்த்து பாரதியின்
நண்பரானவர். பாரதியின் இந்தியா பத்திரிக்கையில் கட்டுரை எழுதியவர். ஆஷ்
கொலை வழக்கின் முதல் குற்றவாளியும் இவர் தான்.
ஆஷைக் கொலை செய்ய 10-04-1910 அன்று தென்காசி மடத்துக்கடை சிதம்பரம்
பிள்ளை வீட்டில் சங்கர கிருஷ்ணய்யர்,சுப்பிரமணிய ஐயர் ஆகிய மூவரும் காளி
படத்தின் முன்பு குங்குமத்தை நீரில் கரைத்துக் குடித்துவிட்டு,
இந்த குங்குமம் வெள்ளையனின் ரத்தம். இது போல் வெள்ளையனின் ரத்தம்
குடிப்போம் என்று சபதம் எடுக்கின்றனர்.
இந்த மூவரும் கூட ஆஷ் கொலை வழக்கின் குற்றவாளிகள் தான்.
சப் கலெக்டராக இருந்த ஆஷ்துரை,நெல்லையின் கலெக்டராக 1910 ஆகஸ்ட் 2 ல்
பதவியேற்கிறான்.
புனலூர் காட்டிலாகாவில் பணியாற்றிய வாஞ்சி நாதன் ஆஷைக் கொல்ல துப்பாக்கி
சுடும் பயற்சிக்காக பாண்டிச்சேரிக்க
ு செல்கிறான். அங்கு வாஞ்சிக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வ.வே.சு ஐயர்
அளிக்கிறார்.
ஆஷை சுட்டுக்கொல்ல வாஞ்சி பயன்படுத்திய துப்பாக்கி பெல்ஜியத்தில்
தயாரிக்கப்பட்ட தானியங்கி துப்பாக்கி. வ.வே.சு ஐயருக்கு அந்த
துப்பாக்கியை அனுப்பியவர் பாரீஸிலிருந்த மேடம் காமா.
மேடம் குஸ்தம் பிகாஜி காமா பம்பாயைச் சேர்ந்தவர்.1901 ல் இங்கிலாந்தில்
அவர் இருந்த போது அங்கு இந்திய விடுதலைக்கு ஆதரவான அபிநவ் பாரத சமிதியில்
உறுப்பினரானவர். அவரை இங்கிலாந்து அரசு கண்காணித்ததால் பாரீஸ்
சென்றார்.பாரீஸ் இந்தியர் கழகத்தை உருவாக்கினார். அங்கிருந்து
பொம்மைகளில் ஒளித்து வைத்து ரிவால்வர்களை அனுப்பி வைத்தவர்.
மேல்படிப்புக்காக பாரீஸ் சென்ற வ.வே.சு ஐயருக்கு பாரீஸ் இந்தியர்
கழகத்தோடு தொடர்பு ஏற்பட்டு,அந்தத் துப்பாக்கியோடு 1910 புதுச்சேரி
வந்தார் வ.வே.சு ஐயர்.
துப்பாக்கி சுடும் பயிற்சியும் முடிந்தது
வாஞ்சிநாதன் 1911 மே 15 செங்கோட்டை வந்து சேர்ந்தான்
வாஞ்சிநாதனும் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சங்கர கிருஷ்ணனும்
திருநெல்வேலி புறப்பட்டனர்
1911 ஜீன் 14,15,16 நெல்லை கைலாசபுரம் ராமலிங்க ஐயர் உணவு விடுதியில்
மூன்று நாளும் தங்கியிருந்தனர்.
ஐயரா இருக்காங்களேன்னு டென்சன் ஆகாதீக
அடுத்து தான் முக்கிய சீன் இருக்கு
தொடரும்
Surya Xavier

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக