பூ – வேறுபாடு உணர்த்தியது
நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே
கண்ணகாரன் கொற்றனார் . நற். 143 : 11
தலைவி உடன் போக்கு மேற்கொண்டனள். அன்னை வருந்திக் கூறினாள் ; மகளின் களவை அறிந்திருந்தும் அவளைக் காக்கத் தவறிவிட்டேனே ; களவும் ஓர் அறநெறியே என்றும் கருதினாள். தலைவன் வேற்றுப் புலத்தான்; அவன் தந்த பூவும் தம் நிலத்திற்கு உரியதன்று ; எனப் பூ வேறுபாட்டினைக் கொண்டு தலைவியின் களவை அறிந்திருந்தாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக