தமிழ்நாட்டின் இழந்த பகுதிகளை மீட்டெடுப்போம்!
-சி.பா.ஆதித்தனார்.
பீர்மேடு, தேவிகுளம், நெய்யாற்றின் கரை ஆகிய பகுதிகள் தமிழ் நாட்டில்
இருந்து பிரிக்கப்பட்டு, மலையாளிகள் கையில் சிக்கிக் கிடக்கின்றனவே!
அந்தப் பகுதிகள் தமிழ்நாட்டோடு சேர வேண்டாமா?
வட எல்லையில் வேங்கடம் வரையில் உள்ள தமிழ்ப் பகுதிகள் ஆந்திரர்களின்
ஆட்சியில் கிடக்கின்றனவே! அந்தப் பகுதிகள் தமிழ்நாட்டுடன் சேர வேண்டாமா?
பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்கள் டெல்லியின் கண்காணிப்பில்
இருக்கின்றனவே! அந்தப் பகுதிகளில் வாழ்கிறவர்கள் தமிழர்கள் தானே! அவர்கள்
தமிழ்நாட்டோடு சேர வேண்டாமா?
18 மைல் அகலம் உள்ள ஒரு சிறிய நீர்ப்பகுதிக்கு அப்பால், வட இலங்கையில்
தமிழ் மக்கள் வாழுகிறார்கள். அதுவும் தமிழ்நாட்டின் ஒரு பகுதி தான். அது,
தாயகத்தில் இருந்து பிரிந்து கிடக்கிறதே!
இந்தியா தேசம் துண்டுபடக் கூடாது என்று கவலைப்படுகிற தேசியவாதிகள்,
தமிழ்நாடு இவ்வாறு சிதறுண்டு கிடப்பதைப் பற்றி என்ன சொல்லுகிறார்கள்.
ஆகையால் தமிழ்நாடு ஒன்று சேர வேண்டும் என்று சொல்வது 'துரோகம்' ஆகாது.
இவ்வாறு ஒன்று சேருகிற பகுதிகள் ஒரு சுதந்திர நாடாக இருக்க வேண்டும்
என்று கூறுவதும் 'துரோகம்' அல்ல.
('தமிழ்ப் பேரரசு' நூலில் சி.பா. ஆதித்தனார் எழுதியது.)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக