வியாழன், 21 செப்டம்பர், 2017

குலதெய்வம் வழிபாடு மறைக்குளம் சிறுதெய்வம் பலி ஊர்முறை

மதுரைக்கு அருகில் காரியாபட்டியில் இருந்து நரிக்குடி போகும் சாலையில்
இருக்கிறது "மறைக்குளம்" என்ற ஊர்.அந்த ஊர் தான் எப்போதும் பசுமையாக
இருக்கிறது அவர்களை போல திருமணச்சீர்வரிசை செய்முறை செய்ய ஆளே இல்லை என
அனைவராலும் பொறாமைப்படக்கூடிய ஊர்...அந்த ஊர் எவ்வாறு அப்படி செழிப்பாக
இருக்கிறது என எனக்குள் வெகுநாள் சந்தேகம் கலந்த ஆவல்
ஒரு நாள் அந்த ஊரில் சம்பந்தம் செய்துள்ள Karthikeyapandian
Kalyanigandhi அவர்கள் மூலமாக அங்கே செல்ல வாய்ப்பு கிடைத்தது
அங்கே சென்ற நான் அந்த ஊரின் வரலாற்றை பற்றியும் குலதெய்வத்தை பற்றியும்
வாழ்வியல் பற்றியும் தெரிந்துகொண்டதை கீழே கொடுக்கிறேன்
அந்த ஊரில் உள்ள காவல்தெய்வத்திற
்கு பெயர் ஊத்தடியான் கருப்பசாமி இது ஒரு ஊத்திற்கு அருகே உள்ளது இதை
முதலில் வலையர் சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் தான் வெகுதொலைவில்
இருந்துவந்து இந்த தெய்வத்திற்கு பன்றியை பலிகொடுத்து வந்ததாகவும்
அவர்கள் வெகுதொலைவில் இருந்து வரமுடியாததால் இந்த ஊரில்
உள்ளவர்களுக்கு(அகமுடையார்கள்) வாக்குகொடுத்து இனி நீங்களே
செய்துகொள்ளுங்கள் என விட்டுவிட்டார்கள் அதிலிருந்து நாங்கள் செய்கிறோம்
என சொல்கிறார்கள்.வலையர்கள் பன்றிபலிகொடுத்தார்கள் வாக்குவாங்கிய பிறகு
நாங்கள் கிடாவை பலிகொடுக்கிறோம்
.அதுவும் சாமிக்கு வெள்ளை நிறம் இல்லாத முழுகருப்புகிடாய் தான் வேண்டும்
என கேட்டதால் இப்போது வரை கருப்புகிடாய்கள் தான் பலிகொடுக்கிறோம்
என்றார்கள்
இதில் முக்கியமான விடயம் அந்த சாமி இருக்கும் இடத்தில் எந்த ஒரு சின்ன
சிலையோ கல்லோ கூட இல்லை வெறும் சூலம் தான் இருக்கிறது
இதுவரை அந்த சாமிக்கு வாரம் வெள்ளி வெள்ளிகிழமை தவறாமல் பலிகொடுக்கப்படு
கிறது.அனைவரது வீட்டிலும் கருப்புநிற ஆட்டுகிடாய்கள்
வளர்க்கப்படுகிறது.வாரம் ஒருவர் பலிகொடுக்கிறார்கள்.இதுவரை ஒருவாரமும்
தவறியதே இல்லை ஆனால் பலிகொடுத்தவர் அந்த கறியை உண்ணுவது இல்லை ஊரே
உண்ணுகிறது.
பலிகொடுக்க வேண்டும் எனில் அந்த குடும்பம் முந்தைய வாரமே சாமிஆடும்
நபரிடம் கேட்கவேண்டும்.
அந்த சாமி ஆடும் நபர் வெள்ளிகிழமை மாலை நேரத்தில் வித்தியாசமான
கருப்புநிற உடைகளை போட்டுகொண்டு ஊர்முச்சந்தியில் நிற்கிறார்
பலிகொடுக்கும் கிடாயை கொண்டுவருகிறார்கள் ஊர்காரர்கள்.அந்த கிடாய்க்கு
விபூதி போட்டு அவிழ்த்து விடுகிறார் பூசாரி அந்த கிடாய் ஓடுகிறது அதன்
பின்னே ஊரே ஓடுகிறது அந்த கிடாய் வேகமாக ஓடி சென்று அந்த ஊத்தடியான்
கருப்பை மூன்றுமுறை சுற்றி நிற்கிறது.இதுவே மிகப்பெரிய ஆச்சரியத்தை
உண்டாக்குகிறது.
ஏனெனில் ஊரில் இருந்து 300 மீட்டர் இருக்கும் அந்த கருப்புஇருக்கும்
இடம்.வந்து நின்ற ஆட்டை வெட்டுகிறார் பூசாரி உடனே அந்த இரத்தம் பூமியில்
சிந்துவதற்குள் குடித்தும் விடுகிறார்.பலிகொடுத்த குடும்பத்திற்கு
அவர்கள் கேட்கும் வாக்கை கொடுக்கிறார் பூசாரி.அந்த ஆட்டை இரவு கறிக்காக
எடுத்துசெல்கிறத
ு ஊர்.அந்த கறியை அடுத்தநாள்வரை வைத்து இருக்க கூடாதாம்.அன்று இரவே
அனைவரும் சேர்ந்து தின்றுவிடுகிறார்கள்.அந்த இரத்தம் குடித்த பூசாரி
சிறிது நேரத்திற்கு அனைவருக்கும் குறிசொல்லுகிறார்.முக்கியமாக குழந்தை
எப்போது பிறக்கும் என சொல்லுகிறார் அவர் சொல்லி அந்த மாதம் குழந்தை
பிறக்காமல் இருந்தது இல்லையாம்.இத்துடன் ஊர்தெய்வ பலி முடிகிறது.இதுவே
இத்தனை ஆண்டுகள் கடத்தப்பட்டு வருகிறது.இவர்களுக்கும்
பெரும்கல்கோவிலுக்கும் சம்பந்தமே இல்லை.
மேலும் அந்த ஊரில் ஒருவர் இறந்துவிட்டால் இறந்தவரின் பங்காளிகளுக்குள்
இறந்த உடலுக்கு அருகிலேயே சேவல் சண்டை நடக்கும்.அப்போது அங்கே # இரத்தம்
சிந்தி தோற்கும் சேவலை உடனே கறியாக்கி இறந்த உடலை வைத்துகொண்டே சாராயம்
அருந்தி சாப்பிட்டுவிடுவ
ார்கள்.இது என்ன என்று புரிகிறதா ? வீரியம் உள்ள இனத்தை
இனப்பெருக்கத்திற்கும் தோற்ற சேவலை பலியாகவும் கொடுக்கும் பழக்கம்.இந்த
ஊரின் இளைஞர்கள் தான் மாநிலஅளவில் கபாடி விளையாட்டில் முக்கியமான
வீரர்கள்.இந்த ஊரில் நீர் எப்போதும் வற்றிய பஞ்சம் வந்ததே இல்லை
செழிப்பாக இருக்கிறார்கள்.
உறவு முறையை பேணுவதில் இவர்களை போன்ற ஊர் இல்லவே இல்லை...
இப்போது சொல்லுங்கள் இதை போல தமிழ்நாட்டில் பல ஊர்களை பார்த்த நான்
குலதெய்வ பலியை பேசாமல் எப்படி கடந்து செல்லுவேன்?இதை ஒழிக்க துடித்த
...துடிக்கும் கல்லை கழுவிகுடிக்க சொல்லும் சமண பெளத்த சைவ வைணவத்தை
ஓழிக்காமல் எப்படி இறந்து போவேன்? இப்போதும் எதிர்க்கவில்லையெனில்
வீரியம்இல்லா சண்டைசேவலா ?
விருத்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக