புதன், 20 செப்டம்பர், 2017

ஐரோப்பா பாஸ்க் பள்ளர் தொடர்பு ஏறுதழுவுதல் உலகஇனங்கள் கடல் கப்பல்


ஐரோப்பாவின் மத்திய தரைக் கடல் ஒட்டிய நில பகுதிகளில் வாழும்
"பாஸ்க் " பழங்குடி மக்களுக்கும் தமிழர்களுக்கும் நெருக்கமான தொடர்புகள்
உள்ளதை பல ஆய்வுகள் நிறுவுகின்றன!...
இந்த பாஸ்க் இன மக்கள் தான் முதன் முதலில் ஐரோப்பாவில் குடியேறியவர்கள் என்றும்,
இவர்கள் வேளான் தொழில் நன்கு தெரிந்தவர்கள் என்றும் ஐரோப்பிய அறிஞர்களே
குறிப்பிடுகின்றனர்!!....
அது மட்டுமல்ல,
தமிழர்களை போலவே இவர்களும் உலகின் சிறந்த கடலோடிகள்!!...
ஐரோப்பாவில் நடந்த தொழிற் புரட்சியின் காரணமாக,
ஐரோப்பியர்கள் உலகம் முழுவதும் கைப்பற்றியதற்கு முதன்மை காரணம் பாஸ்க்
கடலோடிகளே!!...
இன்றைக்கு ஐரோப்பா விலும், அமெரிக்க நாடுகளிலும் கோடிக்கணக்கில் வாழும்
இந்த பாஸ்க் இன மக்கள்,
நம் குமரி தீவுகள் கடலில் மூழ்கிய போது,
நம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்களே!!....
நம்மை பிரிந்து ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும்,
நம் பழக்கவழக்கங்கள் பலவற்றை இன்றும் அழியாமல் பாதுகாத்து வருகின்றனர்,
இப் பாஸ்க் இன மக்கள்..!!
நம் பாரம்பரிய விளையாட்டான ஏறு தழுவுதல் உள்ளிட்ட பல வழக்கங்களை,
இன்றும் பின்பற்றுகின்றனர்!!...
அவ்வளவு ஏன்,
தமிழர்களின் அடையாளங்களில் முதன்மை அடையாளமான பள்ளர் /மள்ளர் என்ற பெயர்களை,
இன்று வரை தங்களுக்கும், தங்கள் ஊர்களுக்கும் சூட்டி மகிழ்கின்றனர்!!
....
இதையெல்லாம் விட ஆச்சர்யம் என்ன தெரியுமா?
நாம் வணங்கும் மழைக் கடவுள் "மாரி " யை தான்,
அவர்களும் மழைக் கடவுளாக வணங்குகின்றனர்!!...
ஆம்,
"மாரி " தான் அவர்களின் ஏகோபித்த கடவுளாக இன்று வரை தொடர்கிறது தோழர்களே!!...
இவர்களின் " மாரி " கடவுள் ஐரோப்பா முழுவதும் எந்த அளவிற்கு பலம்வாய்ந்து
இருந்தது என்பதற்கு சிறந்த உதாரணம்
ஏசு கிறிஸ்த்துவின் பிறப்பை பற்றிய புனைக் கதையே!!...
ஆம்,
மக்கள் போராளியான ஏசு கிறிஸ்த்துவை பிற்காலத்தில் கடவுளாக மாற்ற முனைந்த
சாமியார் கூட்டம்,
அவரை "மாரி " யின் மகன் என்று சொன்னால் தான் மக்கள் நம்புவார்கள் என்ற
இராஜதந்திரமாய் சிந்திதத்ததின் விளைவே,
இன்றைக்கு நாம் நம்பும் மேரியின் மகன் ஏசு என்ற கதையெல்லாம்??....
இவை போல் பல வரலாற்று ஒற்றுமைகள் நமக்கும் பாஸ்க்குகளுக்கும் இருந்தாலும்,
அவற்றையும் தாண்டி, பாஸ்க்குகள் நம்மவர்கள் தான் என்பதற்கு சிறந்த சான்று,
அவர்களும் நம்மை போலவே (LTTE) ,
தனி நாடு கேட்டு போராடுகின்றனர் (ETA)!!...
விடுதலை உணர்ச்சி நம் ரத்தத்திலேயே ஊறி கிடக்கிறதோ??....
செல்வா பாண்டியர்.
தலைவர்,
தமிழர் நடுவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக