Palani Deepan
எழுத்துச் சீர்திருத்தம்.
“எழுத்துச் சீர்திருத்தமும் பெரியாரும்“ என்கிற தலைப்பில் ஒரு பெரிய
பில்டப் கொடுத்து, எஸ.வி.ராஜதுரை எழுதிய கட்டுரையை இன்றைய தமிழ் தி இந்து
நாளேடு வெளியிட்டு இருக்கிறது.
நேற்றைய தி இந்து நாளேட்டில், திரு.கி.வீரமணி விழுந்தடித்துக்
கொண்டு வந்து, எழுத்துச் சீர்திருத்தத்திற்கு முதல்வர் பெரியாரே என்றும்,
குத்தூசி குருசாமி(தமிழர்) இல்லையென்றும் ஒரு மறுப்பு தெரிவித்து
இருந்தார்.
நிறைய பேருக்கு ஏதோ தமிழ் எழுத்துகளை பெரிய அளவில் ஈ.வெ.ரா சீர்திருத்தி,
நமக்கு கொடையாக வழங்கி உள்ளார் போலிருக்கிறது என்கிற மயக்கத்தை இவைகள்
தருகின்றன.
இதனை சீர்திருத்தம் என்று சொல்லி கொள்வதற்கு இதில் ஒன்றுமே இல்லை. ஆனால்
இதை வைத்துக்கொண்டு மிகப்பெரிய விளம்பரம் தொடர்ந்து செய்யப்பட்டு
வருகின்றது.
ஆம்.
தமிழ் எழுத்துகளில் ல, ன, ண, ள போன்ற ஒருசில எழுத்துகள் மட்டுமே “ஐ“ சேரும்
போது மேலே கொம்புப் போட்டு எழுதும் வழக்கம் இருந்தது. இதனை மேற்கொம்பை
எடுத்துவிட்டு மற்ற க, ங, ச, ஆகிய எழுத்துகளில் எவ்வாறு ”ஐ” சேர்ந்தால்
மாற்றம் பெறுகிறதோ, அதைப்போன்றே மேற்குறித்த எழுத்துகளிலும் லை, னை, என
மாற்றம் செய்யப்பட்டது.
இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். இது சீர்திருத்தம் அல்லவே அல்ல.
கொண்டுவரப்பட்டது மாற்றமும் இல்லை. சங்ககாலம் முதற்கொண்டு அதற்கு அடுத்த
ஐநூறு ஆண்டுகாலங்களிலும் மேற்படி ல,ள.ன... போன்ற எழுத்துகள் ”ஐ”
சேரும்போது லை, ளை, னை என்றுதான் எழுதப்பட்டிருக்கின்றன. பின்பு
காலசூழலில் ஓலைச்சுவடிக்கு ஏற்ப ஒரு சின்னதான மாற்றம் புகுத்தப்பட்டிர
ுக்கிறது.
இதனை பாவாணரும், பாரதிதாசனும் முழுமையாக ஒப்புக்கொண்டு, விளக்கம் அளித்துள்ளனர்.
”ல மேற்கொம்பிட்ட லை என்பது இடையில் புகுந்தது. லை என்பதுதான் சரி” என
பாரதிதாசன் 01.07.62 குயில் இதழில் எழுதியுள்ளார்.
ஐ, ஔ தமிழின் அரச எழுத்துகள். இதனை மாற்ற தமிழ் அறிஞர்கள் எவரும்
ஒப்புக்கொள்ளவில்லை. தமிழக அரசும் அதன் மாற்றத்தை ஏற்கவில்லை.
சரி.... தி இந்து கட்டுரையை எழுதிய அறிவுசீவியின் பெயர் எஸ்.வி.ராஜதுரை....
ஐ, ஔ தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையை குறைக்க நீக்க வேண்டுமாம்.
ஆனால் இந்த அறிவுசீவியின் பெயரில் ஸ், ஜ, போன்ற தமிழ் நெடுங்கணக்கில்
வராத, தமிழ் சாராத கிரந்த எழுத்துகளை கொண்டுள்ளது. இவைகள் சேரும் போது
தமி்ழ் எழுத்துகளின்எண்
ணிக்கை கூடாதா...?
உண்மையில் எழுத்துச் சீர்திருத்தம் என்பது, இந்த கிரந்த எழுத்துகளை,
நீக்கி நல்ல தமிழில் எழுதுவதுதான் என்பது நல்ல தமிழ் அறிஞர்களின்
கருத்து.
இதைப்போன்ற உப்புசப்பில்லாத, உதவாத கட்டுரைகளை பெரிய பில்டப் கொடுத்து
வெளியிடுவதை தி இந்து நிறுத்த வேண்டும்.
இல்லையென்றால் தமிழர்கள் தி இந்து வாங்குவதை நிறுத்திவிடுவார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக