# ஆஷூம்_வாஞ்சிநாதனும்_3
வாஞ்சிநாதன் விடுதலைப் போராட்ட வீரனா?
ஆஷ் தலித் மக்களின் பாதுகாவலனா?
சில வரலாற்றுத் தகவல்கள் -( 3 )
ஆஷ் கலெக்டராக இருந்த போது குற்றாலத்தில் தலித் மக்கள் குளிக்க
அனுமதியளித்து ஆணை பிறப்பித்தார் என்பது தவறான தகவல். ஏனெனில் காந்தி
குற்றாலத்திற்கு 1934 ல் வருகிறார். அன்றைய ஜில்லா போர்டு உறுப்பினர்
குமாரசாமி தலைமையிலான ஒரு குழு சந்திக்கிறது
குற்றாலம் அருவியில் தலித்கள் குளிக்க முடியாது என்று காந்தியிடம்
கூறுகிறார்கள். காந்தி விசாரிக்கிறார். அருவிக்கு கோவிலின் வாசல் வழியே
தான் செல்ல வேண்டும். கோவில் வாசல் வழியே செல்ல தலித்களுக்கு அனுமதி
இல்லை என்கிறார்கள் கோவில் நிர்வாகத்தினர்.
என்று தலித்கள் இங்கு குளிக்க அனுமத்க்கப்படுகிறார்களோ அன்று நான்
குளித்துக் கொள்கிறேன் என்று குற்றாலத்தில் குளிக்காமலேயே காந்தி
புறப்படுகிறார். இந்திய விடுதலைக்குப் பிறகே தலித்கள் குளிக்க
அனுமதிக்கப்பட்டார்கள்.
நிலைமை இப்படி இருக்க ஆஷ் குளிக்க உத்தரவிட்டார் என்பதற்கான எவ்வித
வரலாற்று ஆவணமும் இல்லை. அவரும் காந்தியைப் போல் அது தவறு என்று
நினைத்திருக்கலாம்
செங்கோட்டை அக்கிரமக்காரத்தின் வழியாக பிரசவ வழியால் துடித்த தலித்
பெண்ணை தூக்கிச் செல்லும் போது வாஞ்சி உள்ளிட்ட இளைஞ்ர்கள் தடுத்தார்கள்
என்றும் ஆஷ் சாட்டையால் அடித்து விரட்டினார் என்று சொல்லப்படுவதும்
உண்மையல்ல.
ஏனெனில் செங்கோட்டை அன்று திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட
பகுதி.நெல்லை ஆட்சியரான ஆஷிற்கு அங்கு வேலையே கிடையாது.மேலும்
செங்கோட்டையின் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவே அக்கிரமக்காரர்களின் காரம்
இருக்கிறது.அதன் வழியாக எவரும் வரவேண்டிய அவசியமும் இல்லை. அந்நியன்
திரைப்படத்தில் வரும் ரன்டக்க ரன்டக்க பாடலின் தொடக்க காட்சிகள் அந்த
அக்ரஹாரத் தெருவில் தான் எடுத்திருப்பார்கள்.
அப்படியானால் அந்த சம்பவம் எதை வைத்துக் கோர்க்கப்படுகிறது என்கிற விவரம்
தேவையாகிறது. பாளையங்கோட்டையில் ஆஷ் கல்லறை இருக்கும் இங்கிலீஷ் சர்ச்
சார்ந்த தெரு வழியே ஒரு தலித் பெண்ணின் சவ ஊர்வலம் செல்கிறது.இதை அன்று
இருந்த திருநெல்வேலி விபூதி சங்கம் என்ற அமைப்பு தடுக்கிறது. இதையொட்டிய
கலவரத்தை அப்போது சப் கலெக்டராக இருந்த ஆஷ் அடக்கியதாக ஒரு குறிப்பு
இருக்கிறது.
ஆஷ் சமூகநீதி காத்த காவலர் என்ற அளவிற்கான ஒப்பீடெல்லாம் அவசியமற்றதும்
ஆதாரமில்லாததுமே.ஒரு வெள்ளை அதிகாரிக்கு உரிய சர்வ அடக்குமுறைகளோடும் ஆஷ்
இருந்தான் என்பதே உண்மை. அவன் வாஞ்சியால் சுடப்படாவிட்டால
ும்,சுட்டுக் கொல்லப்பட வேண்டிய ஏகாதிபத்திய ஏவலாளி தான்.
வாஞ்சியின் கடிதம் அவனது சடலத்தின் சட்டைப் பையில் இருந்து
எடுக்கப்படுகிறது. அதில் ஆங்கிலேயர்கள் சனாதன தர்மத்தை மிதித்து துவம்சம்
செய்து வருகிறார்கள் என்றும், கோமாமிசம் திண்ணும் மிலேச்சன் என்றும்
வாசகங்கள் உள்ளது.இதில் கவனிக்க வேண்டிய விசயம் யாதெனில் பாரதமாதா சங்கம்
வெளியிட்ட பிரசுரத்தில் இது போன்ற வாசகங்கள் எவ்விடத்திலும் இல்லை.
எனது பார்வை யாதெனில் வாஞ்சி நாதனின் நோக்கம் தேசவிடுதலை என்பதை விட,
தனது சாத்திர சம்பிரதாயத்தில் பற்றி நின்று செய்த செயலாகவே
இருக்கிறது.இந்தக் கடிதம் ஒரு அமைப்பின் கருத்தாகவும் இல்லை.அவனின்
கருத்தாகவே உள்ளது. எனவே அவர் மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர் என்ற
பில்டப்புகளும் தேவையில்லை.
பலருடைய திட்டத்தை அமுல்படுத்த முயன்ற ஒருவன் தனது நோக்கத்தை புகுத்திய
செயலாகவே அந்தக் கடிதம் இருக்கிறது.
எனவே வாஞ்சி போற்றப்பட வேண்டிய விடுதலைப் போராட்ட வீரர்களின் வரிசையில்
வைக்கப்பட வேண்டிய நபரும் அல்ல
ஒரு நாட்டையே அடக்கி ஆள வந்த ஏகாதிபத்திய வெள்ளையனின் கலெக்டர் என்ற
அதிகாரத்தை செலுத்திய ஆஷ் எவ்வகையிலும் சமூக நீதிக்காவலன் என்பதும்
ஏற்புடையதுமல்ல.
முற்றும்.
Surya Xavier

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக