புன்னையது நலன்
விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்த்தது
நும்மினும் சிறந்தது நுவ்வையாகும் என்று
அன்னை கூறினாள் புன்னையது நலனே
………………………………. நற்.172 : 1 – 5
தலைவனே ! தோழியர் கூட்டத்தோடு விளையாடிய நாங்கள் – ஒரு நாள் புன்னை விதையை வெள்ளிய மணலுள் அழித்தி விளையாடியபின் அதனை மறந்து போனோம்/. அவ்விதை வேரூன்றி முளைத்துத் தோன்ற அதனைக் கண்டு மகிழ்ந்த நாங்கள் நெய்யோடு கலந்த இனிய பாலை நீராக ஊ ற்றி வளர்த்தோம். அதனைக் கண்ட அன்னை ; “ நீங்கள் வளர்க்கும் இப்புன்னை உங்களை விடச் சிறந்ததாகும் ; அது உங்களோடு பிறந்த தங்கையாகும் தகுதி உடையது காண்பீர் “ என்று அப்புன்னையின் நலனை அன்னை கூறினாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக