திங்கள், 18 செப்டம்பர், 2017

கேரளா தமிழர் பகுதி வளர்ச்சி குறைவு நாகர்கோவில் விருதுநகர் வரை ரயில்வே மலையாளி ஆதிக்கம் மண்மீட்பு

குமரி மாவட்டம் கேரளாவோடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதும் நபர்களுக்கு.
.
இந்திய ஒன்றியத்தில் 1949ல் சேர்ந்தது திருவிதாங்கூர்.
அன்று முதல் 1972ம் ஆண்டு வரை தென் திருவிதாங்கூரில் (குமரி மாவட்டம்)
இருப்புப்பாதையே
போடப்படவில்லை. அதனால் அந்த மாவட்டத்தில் தொடரூந்து போக்குவரத்தே
இல்லாமல் இருந்தது.
6-9-1972 ஆண்டு திருவனந்தபுரம் -நாகர்கோயில்- திருநெல்வேலி க்கு நாகர்கோயில் தடத்
தில் பாதைகள் அமைக்கும் திட்டத்தை அப்போதைய ஒன்றிய பிரதமர் 'இந்திரா
ப்ரிய தர்ஷினி ' தொடங்கி
வைத்தார்.
ஏழு ஆண்டுகளுக்கு பிறகு 15-04-1979ம் ஆண்டு முதல் நாகர்கோயில்-
திருவனந்தபுரம் பாதையில் தொடர் வண்டி ஓடத்தொடங்கின. பாதை அமைத்தவுடன்
நாகர்கோயில்-விர
ுதுநகர் வரை தனது கோட்டத்தில் வைத்துக் கொண்டு இன்று வரை அதன் பலனை
திருவனந்தபுரம் கோட்டம் அனுபவித்து வருகிறது.
இப்போது திருவனந்தபுரம் கோட்டத்திலேயே அதிக வருவாய் பெற்று தரும் 2வது
மற்றும் 3 வது நிலையமாக நாகர்கோயில், திருநெல்வேலி உள்ளது.
ஆண்டுக்கு 20, 18 கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது, இந்த வருவாயை வைத்து
நாகர்கோயில் தொடரூந்து நிலையத்துக்கு எந்த வசதிகளையும் திருவனந்தபுரம்
கோட்டம் செய்து கொடுக்கவில்லை.
இங்கிருந்து அதிக அளவு தொடர் வண்டிகளும் இயக்கப்படவில்லை.
எல்லா வண்டிகளும் திருவனந்தபுரத்தில் இருந்து தான் இயக்கப்படுகின்றன.
திருவனந்தபுரத்த
ுக்கும் நாகர்கோயிலுக்கும் இடையே உள்ள தூரம் 70KM தான். நாகர்கோயிலில்
இருந்து புறப்படும் வண்டிகளின் எண்ணிக்கை ரொம்ப குறைவு, திருவனந்தபுரம்
கோட்ட அதிகாரிகள் நாகர்கோயில் நிலையத்தை தங்களின் உபரி தொடரூந்து
பெட்டிகளை நிறுத்தி வைக்கும் இடமாகவே பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் அங்கு புதிய வண்டிகள் புறப்படுவதற்கோ,வருவதற்கோ இடவசதி இல்லாத
நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.
பெரிய அளவில் பதிவு செய்யவேண்டுமானால் (group booking) நாகர்கோயிலில்
வசதி இல்லை, திருவனந்தபுரம் தான் செல்லவேண்டும். நாகர்கோயில் நிலையத்தில்
வழங்கப்படும் சீட்டுகளில் தமிழ் இருக்காது மலையாளத்தில் தான் இருக்கும்.
குமரியில் இருந்து தமிழக தலைநகர் சென்னைக்கு இப்போது ஒரே ஒரு வண்டி தான் உள்ளது.
இதனால் தான் நெல்லை,குமரி மாவட்ட மக்கள் திருவனந்தபுரம் கோட்டத்தில்
இருக்கும் குமரி மாவட்ட பாதைகளை மதுரைகோட்டத்தில் இணைக்கவேண்டும் என்று
கோரி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக