புதன், 20 செப்டம்பர், 2017

கோழி வளர்ப்பு தொழில்

Tamil Irfank
கொட்டி கிடக்கு வாய்ப்பு - 001
10×10 அடி நீளம் அகளம் - 15 அடி உயரம் 7 1/2 .7 1/2 . என தடுத்து -
இரண்டு பிரிவாக தயார் செய்யுங்க - மூங்கில் கூரை என்றால்? 10 ஆயிரம் -
இரும்பு தகடு கூரை என்றால்? சதுரஅடி 125 என்றால் 10.250 ₹ உள் தடுப்பு
சுற்று தடுப்பு 5000 மொத்தம் 15 ஆயிரம் ஆகும் -
முட்டைஇட கூடிய நிலையில் 3 பெட்டைகோழி 1 சேவல் - 1000 ரூபாய் வாங்கி
விடலாம் . வசதி இருந்தால் இன்னும் 3 பெட்டைகோழி ஒரு சேவல் வாங்கலாம் -
கோழி வாங்கிய உடன் நோய் தொற்றாமல் இருக்க முன்நடவடிக்கை தடுப்பூசி அவசியம் -
செட் மேல் தடுப்பில் 3 பெட்டை ஒரு சேவல் கீழ் தரையில் 3 பெட்டை ஒரு சேவல்
என பிரித்து விடுங்க -
உணவு?
கோதுமை - 200 g
உடைத்த சோளம் -400 g
கம்பு - கேழ்வரகு - கொள் - தலா 100 g
கருவாடு தூள் 100 கிராம் மொத்தம் 1 கிலோ இதே அளவீடு வைத்து 50 கிலோ
தயாரிக்க 2000 ரூபாய் சிலவாகும் 8 கோழிக்கு 2 மாதம் பயன்படுத்தலாம் -
இந்த தீவனம் காலை மட்டுமே 1/2 கிலோ வீதம் குடுக்கனும் -
இடையில் முருங்கை அகத்தி முட்டைகோஷ் வெங்காயம் - என பொடியாக நறுக்கி
கால்கிலோ குடுக்கனும் - தண்ணீர் எப்போதும் இருக்கனும் - தண்ணீர் விரையம்
ஆகத கோழிகளுக்காக உள்ள ஜக் வாங்கி அதில் தண்ணீர் ஊற்றி வைப்பது நோய்
வராமல் கோழியை காக்கும் -
Tamil Irfank
கொட்டி கிடக்கும் வாய்ப்பு - 002
துரித கோழி வளர்ப்பு இரண்டுவகையாக உள்ளது ஒன்று முட்டை தேவைக்கு -
மற்றொன்று கறி தேவைக்கு -
இந்த துரித கோழிவகை
# பிராயிலர் என்று சொல்கிறோம் - இவைகள் முழுக்க முழுகக் உணவு தேவையை
பூர்த்தி செய்ய மட்டுமே நவீன வளப்பு முறையில் வெகு சீக்கிரமாக வளர்ச்சி
அடைய ஹார்மோன் ஊசிகள் உணவுகள் பயன்படுத்துகிறார்கள் - இதனால் நமக்கு நாம்
அறியாத வகையில் சின்ன நோய் முதல் பெரிய நோய் வரை வர இந்த பிராயிலர்
கோழிகள் வழி செய்கிறது -
இதற்க்கு மாற்று நாமே நமது வீட்டில் கோழிகள் வளர்கலாம் - நாட்டுகோழிகளில்
முட்டைகோழி கறிகோழி என பிரிவுகள் கிடையாது - நாட்டு கோழிகளிடம்
நோய்எதிர்ப்பு சக்தி பிராயிலர் கோழியை விட 50% அதிகம் ஆதலால் செயர்க்கை
மருந்து தடுப்பூசி மிக குறைவு -
பிராயிலர் கோழியை விட நாட்டுகோழி கறி முட்டை மருத்துவகுணமும்
ஆரோக்கியமும் எந்த வித பின் விளைவுகள் இல்லாதது -
குறிப்பு :- இப்போது பரவலாக நாட்டுகோழி மாதரியே துரித கலபின கறிகோழிகள்
விற்பனைக்கு வந்துள்ளது - ஆனால் அது நாட்டுகோழி வடிவமே தவிர்த்து
பிராயிலர் தன்மை உள்ளது -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக