புதன், 20 செப்டம்பர், 2017

சமஸ் வந்தேறி திஇந்து பத்திரிக்கை

Palani Deepan
சமஸ்
தி இந்து நாளிதழின் எழுத்தாளர் சமஸ் எனது நண்பர் சுதாகரின் அறம் செய்வோம்
அமைப்பு சார்பாக சிறப்பு பேச்சாளராக வந்தார்.
பேசும்பொழுது சமஸ் தன்னை காந்தியன் என்றார். இடதுசாரி ஆதரவாளர்
என்றார்....பிராமணீயத்தை உயரே தூக்கினார். இடைஇடையே தலித் தலித் என்று
கொஞ்சம் தூவினார்.
சரி. அவரது கோட்பாடு. அவரது பேச்சு.
இடையிடையே ஈ.வெ.ராமசாமியைப் பற்றியும் புகழ்ந்து போற்றித் தள்ளினார்...
புரிந்துப் போயிற்று. சமஸ் ஒரு வடுகர்.
அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தேன்.
அடுத்து அவரது வடுக கோட்பாட்டை ஆரம்பித்தார்.
தமிழ்நாட்டில் வந்து வாழும் அடுத்த மாநில மொழிக்காரனும் தமிழன்தான்(?).
அவனை தெலுங்கன் என்றும் கன்னடன் என்றும் சாதிப்பிரித்து ஒதுக்குவது
மிகவும் கண்டித்தக்கது. அருவருப்பானது.
(கூட்டத்திற்கு வந்திருந்த அவரது இனத்தவர்கள் கைதட்டலை எழுப்பினர்)
இன்றைய தமிழ் நவீன இலக்கியத்தில் தமிழை தாய்மொழியாகக் கொள்ளாத
தெலுங்கர்களே மிகப்பெரிய சாதனை(?)களை நிகழ்த்தியிருக்கிறார்கள்....
என்றார்...அவர்களை ஒதுக்க முடியுமா...? சவால் விட்டார்.
(உண்மைத்தமிழனுக்கு எவன் வாய்ப்பு கொடுக்கிறான்...? ஊடகம் முழுக்க
பிராமணர்களிடமும் திராவிடர்களிடமும் தானே இருக்கின்றன...)
நானும் எவ்வளவு நேரம்தான் அமைதியாக இருப்பது....
எழுந்தேன்.
ஐயா, தமிழ்த் தேசியக் கோட்பாட்டைப்பற்றி தங்கள் கருத்து என்ன...?
சமஸ்...”இவ்வாறு மற்ற மொழிக்காரர்களை பிரித்து பேசுவது அபத்தம்.
தமிழர்களின் இழிநிலையை இது காட்டுகிறது...”
எது இழிநிலை? இந்தியாவின் மற்ற மாநிலங்கள் அனைத்திலும் அந்த மாநிலத்தின்
மொழிக்கு சொந்தக்காரனே ஆள்கிறான்... இங்கு தமிழகத்தில் மட்டுந்தானே கடந்த
ஐம்பது ஆண்டுகளாக அந்நியன் ஆள்கிறான்.... என்றேன்.
சற்றும் எதிர்பாரதவிதமாக
....”கருணாநிதி தமிழர் இல்லையா...” என்றார்.
என்ன மாதிரி ஒரு கேள்வி... திசைதிருப்பல் பாருங்கள்....
வந்திருந்தவர்களில் கணிசமானோர் கருணாநிதியின் கட்சியைச் சார்ந்தவர்கள்....
இருந்தாலும் துணிவாக சொன்னேன், ”அவர் தமிழர் இல்லை”
சமஸ கொஞ்சம் ஆடித்தான் போனார். பின்பு,”கருணாநிதியை தமிழர் இல்லை என்று
சொல்லும் உங்களிடம் வாதித்து பயன் இல்லை...” என்றார்.
ஓ...! அடக்கொடுமையே...!!
பேச்சில் பல இடங்களில் தமிழர்களைப்பற்றி பாராட்டிப் பேசுவதாக பலர்
நினைக்க, தமிழர்களுக்கு எதிரான கருத்துகளையே மிக நுட்பமாக பதிவு
செய்தார்.
திராவிட மதிமாறனுக்கும் இவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
இதில் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும்... பல பிராமண ஏடுகள்... திராவிட
கோட்பாட்டை எதிர்ப்பதாக காட்டிக்கொண்டால
ும்... அதே திராவிட எழுத்தாளர்களுக்குத்தான் பெரும் வாய்ப்பு தந்து...
அவர்களோடு கைகோர்த்து நடனமிடுகின்றன.
தமிழர்களை எடுத்த எடுப்பிலேயே புறக்கணிக்கின்றன.
இதைத்தான் தமிழ்த்தேசியவாதிகள் பலமுறை எடுத்துச் சொல்லி இடித்துரைக்கின்றனர்.
தி இந்து நிறுவனத்திற்கு ஒரு வேண்டுகோள். தி இந்து என்கிற நாளிதழின்
பெயருக்குக் கீழ் ”தமிழால் இணைவோம்” என்று பொறித்துள்ளீர்கள்... அதனை
தயவு செய்து எடுத்து விட்டு ”திராவிடத்தால்,பிராமணீயத்தால் இணைவோம்”
என்று போடுங்கள். இன்னமும் எதற்கு பொய் வேடம்?
தமிழர்கள் இத்தகையவர்களை அடையாளங்கண்டு....ஒதுக்கி, ஒதுங்கி,
ஏமாந்துவிடாமல், தமிழ் சிந்தனைகள் தொடர்ந்து வளம்பெற உழைப்பார்களாக...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக