புதன், 20 செப்டம்பர், 2017

பறையர் சிவன் தொடர்பு இல்லை ?

Sivakumar Kone
சிவன் பறையரா ??
சமீப காலமாக சிவபெருமான் ஒரு பறையர் என்று முகநூலிலும் யுடியூபிலும் பல
பதிவுகள் வந்தவண்ணம் உள்ளன.கோனாருக்க
ு கிருஷ்ணன்,பள்ளருக்கு இந்திரன், முக்குலத்தோருக்கு போர்க்கடவுளான?
முருகன் .... இவ்வாறு ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கடவுளை இணைத்து
திருவிழா,கும்பாபிசேகம் என்ற பெயர்களில் அவர்களது பொருளாதாரத்தைச்
சுரண்டும் பார்ப்பனீய-வணிகக் கூட்டுக் களவானிகளின் கைவைரிசை தான் இது.
சிவன் ஒரு பறையர் என்று சொல்வதற்கு மூல காரணமே பரேஷ் (Paresh,Paramesh)
என்ற வடஇந்தியச் சொல். தமிழகத்தில் சமண சமயத்தின் கை ஓங்கியிருந்த பொழுது
இச்சொல் புழக்கத்தில் வந்தது.இன்றும் இப்பெயரை குஜராதியர்களே அதிகம்
பயன்படுத்துகின்றனர் என்பதை நோக்கவும்.
சமணத் தீர்த்தங்கரர்களில் மிக உயர்ந்தவரைக் குறிக்கும் ஒரு
வடமொழிச்சொல்லான இச்சொல் பிற்காலங்களில் சைவத்தில் உள்வாங்கப்பட்டு
பரேசன்/
பரமேஸ்வரன் என்று மாற்றப்பட்டது.
ரிசபநாதன் என்ற தீர்த்தங்கரனை சிவபெருமான் என்று பித்தலாட்டம் செய்த அதே
ஆதிக்க சாதிவெறி சைவ கும்பல் தான் இந்த வேலையையும் செய்தது. ஏற்கனவே
சுரேஷ்,ரமேஷ்,ராஜேஷ் போன்ற வடயிந்தியச் சொற்கள் சுரேசன்,ரமேசன் என்று
சைவர்களால் மாற்றப்பட்டு உள்ளதையும் நோக்கவும்.
இந்து மதக் கடவுளரை ஒரு சாதியோடு சேர்த்து புனைக்கதையை எழுதி அவர்களது
பொருளாதாரத்தைச் சுரண்டும் போக்கு இம்மண்ணில் தொடர்ச்சியாக நடந்து
வருகிறது.அந்த வரிசையில் இப்போது மாட்டவிருப்பது பறையர் சமூகம்.
இடஒதுக்கீடு,சலுகைகள் போன்றவற்றால் ஒரு அளவுக்கு முன்னேறியுள்ள பறையர்
சமூகம் இது போன்ற புகழ் போதையேற்றும் ஆசாமிகளிடம் இருந்து
ஒதுங்கியிருப்பத
ு நல்லது.
பி.கு: சாம்பலை உடலில் பூசுவது இன்றும் ஆப்ரிக்க மற்றும் ஆஸ்திரேலியப்
பழங்குடிகளிடம் காணப்படும் ஒரு வழக்கம் . இதே போலத்தான் அக்காலத்தில்
தமிழகப் பழங்குடிகளும் சேறு,சாம்பல் போன்றவற்றை ஒரு சில காரணக்களுக்காகப்
பூசியிருப்பர். அப்படி சாம்பலைப் பூசும் வழக்கம் கொண்ட ஒரு பழங்குடியின்
பெயர் சாம்பவர் என்பதாகும். இவர்களுக்கும் சைவத்துக்கும் சற்றும்
தொடர்பில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக