தொண்டை மண்டல மக்களெல்லாரும் குமரிக் கண்ட மருத நில மக்களாகியிருக்க
வேண்டுமென்தில்லை. அது மட்டுமல்ல, சோழர்கள் ஆண்ட சோழ நாடு முன்பு
காவிரியின் பாய்நிலமாக இருக்கவில்லை. காவிரி முன்பு மேற்குக் கடல்
நோக்கிப் பாயும் ஓர் ஆண் ஆறாக இருந்திருக்கலாம்.
தமிழில் நதி என்பதைக் கிழக்கு நோக்கிப் பாயும் பெண் ஆறு என்றும்நதம்
என்பதை மேற்கு நோக்கிப் பாயும் ஆண் ஆறு என்றும் வகைப்படுத்தினர்...
[3].மேற்குத் தொடர்ச்சி மலையைத் தொட்டு மேற்கே கடல் இருப்பதால் மேற்கு
நோக்கிப் பாயும் ஆறுகள் எந்தப் பயனுமின்றி கடலில் கலந்து விடுவதால்
அவற்றை ஆண் ஆறுகள் என்றனர். கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகள் சமவெளிகளில்
ஓடிப் பாசனத்துக்குப் பயன்பட்டு நாட்டின் வளத்தைப் பெருக்கியதனால் பெண்
ஆறுகள் என்றனர்.
மேற்கு நோக்கிப் பாய்ந்த காவிரியை தமிழர்கள் முதலில் வேலூர் மாவட்டம்
வழியாகத் திருப்பியுள்ளனர். காவிரிப்பாக்கம் எனும் ஊர் அதன் தடயமாக
நமக்கு மிஞ்சியுள்ளது. செயற்கைக் கோள் புகைப்படத்தின் துணையுடன் இதனை
மெய்ப்பித்துக் காட்டியுள்ளது தினமணிகட்டுரை ஒன்று.
காவிரி, அடுத்து கொங்கு நாட்டுக்குத் திருப்பப்பட்டுள்ளது. ஏற்காடு
மலையில் காணப்படும் ஒரு குகை வழியாக அங்கு வந்ததாகவும் செவி வழிச் செய்தி
உண்டு.காந்தமன் என்ற சோழ மன்னன் ஒரு பிலத்தினுள் மறைந்த காவிரியை வாளால்
மீட்டுச் சோழ நாட்டுக்குக் கொண்டு வந்ததாகமணிமேகலை கூறுகிறது.
காந்தமன் என்பது கரிகாலன் என்பதன் சமற்கிருத மொழிபெயர்ப்பாக இருக்கலாம்.
முதல் கரிகாலனை இது குறிக்கலாம். எப்படி இருப்பினும் சோழர்கள்
உறையூருக்கு வந்த போது இன்றைய தஞ்சைத் தரணி ஓர் அரைப் பாலைவனமாகவே
இருந்திருக்க வேண்டும்.இன்றும் ஏப்பிரல், மே மாதங்களில் இன்றைய
நாகை மாவட்டப் பகுதிகளில் நடமாட நேர்ந்தால் அதன் பாலைவனப்
பண்பைப் பட்டறியலாம்.குடிநீர் கூடக் கிடைக்காது.
கிணற்று நீர் மண்ணெண்ணெய் நாற்றமெடுக்கும் அல்லது இரும்புத் துருவுடன்
இருக்கும். எனவே சோழர்கள் வந்து நிலைப்பட்டுக் காவிரியைத் திருப்பிய
பின்னர்தான் இன்றைய நெல் வேளாண்மையும் சம்பாவகை நெல்களும் தஞ்சைத்
தரணியில் அறிமுகமாகியிருக்கும்.பவானி, அமராவதி போன்ற ஆறுகள் முன்பு
எப்பாதையில் ஓடின என்பதைக் கண்டுபிடித்தால் காவிரிக்கு முந்திய வேளாண்
நிலங்களைத் தடம் பிடிக்க முடியும். சோழர்கள் அங்கு நுழைந்த போது
அங்கிருந்த வேடர்களுடன் அவர்களுக்கு ஏற்பட்ட மோதலையும் பின்னர்
அவர்களுக்கிடையில் ஏற்பட்ட இணக்க உடன்பாட்டையும் காட்டுவதாக, சிபிக்கும்
புறா குறித்து வேடனுக்கும் ஏற்பட்ட பூசலை விளக்கலாம்.
இவ்வாறு சோழ நாட்டு மக்கள் அனைவரும் வெளியிலிருந்து வந்தவர்கள், அதாவது
இந்திரனோடு உறவுடையவர்கள் என்று கொள்ள இடமில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக