*முத்தமிழ் சங்கங்கள்*
*பதிவு 3*
*கடந்த இரு தினங்களாக முதற்சங்கத்தின் காலக்கணக்கீட்டையும், கி.மு
20,000 தில் இருந்தே தமிழன் மொழியறிவாளனாக இருந்திருந்தான் என
அனைவருக்கும் உணர்த்த முயற்சித்தோம்.*
இன்றும் வந்தோம், ஆரிய இராமாயணம் கண்டது தமிழனின் இடைச் சங்கத்தில்தான்
என எடுத்துச்சொல்லவும், பிறந்தார் தொல்காப்பியர் முதற்சங்கத்தில்
தொலைத்ததை தொகுத்து வழங்க இடைச்சங்கத்தில் என தலை நிமிர்த்தி
பறைச்சாற்றவும்.!
*கிமு 9583ல் கடல் ஆழியின் சீற்றத்திற்கு தென்மதுரை இரையான பின்
கபாடபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு அங்கு மீண்டும் வாழ்வைத்
தொடர்ந்தனர். இங்கும் தன் தாய் தமிழ் பெருமை நாட்டிட தமிழ்ச் சங்கத்தை
உருவமைத்தனர். இதுவே இடைச் சங்கம்.*
*இந்த இடைச்சங்கம் 3750 ஆண்டுக் காலம் நடைபெற்றது. இச்சங்கத்தில்
தொல்காப்பியர், இருந்தையூர் கருங்கோழியார் வெள்ளூர்க் காப்பியனார் போன்ற
புலவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களால் பாடப்பெற்றவை தொல்காப்பியம்,கலி,
குருகு, வெண்டாளி, வியாழ மாலை அகவல் போன்ற நூல்களாகும்.*
*இந்த இடைச்சங்கம் இடம்பெற்ற காலம் கி.மு. 6,805 முதல் கி.மு. 6,000 வரை
என கணிக்கப்பட்டுள்ளது.*
ராமாயணம் இடம்பெற்ற காலமும் இந்த இடைச்சங்கம் இடம்பெற்ற காலத்தில்தான் என
அறியப்படுகிறது. காரணம் பல ராமாயண குறிப்புக்களில் சங்கத்தலைநகரம்
கபாடபுரமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவிளையாடல் புராணம்படி அனந்தகுண பாண்டியன் என்ற பாண்டிய அரசனின்
ஆட்சியில் இராமன் இராவணன் மீது படையெடுப்பு நடத்திய சான்றுகள் உண்டு,
அதோடு சின்னமனூர் செப்பேடுகளிலும் இவற்றைப் பற்றி குறிப்புகள்
இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
*ஆனால் இன்னொரு கடல் சீற்றத்தால் இந்த கபாடபுறமும் அழிய நேரிட்டது.*
*பிறகு நேர்ந்தது என்ன??*
*நாளை தொடரில்*
*கற்போம் கற்பிப்போம்*
#Kanninmanikal
#ஆதிச்சுடர்
#AthiSudhar
#SithiGlobal

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக