ஞாயிறு, 9 ஜூலை, 2017

இசுலாமியர் யூதர் ஒப்பீடு

aathi tamil aathi1956@gmail.com

21/7/14
பெறுநர்: எனக்கு
உலக வரலாற்றில் 1933 – 1945 ம் ஆண்டை எவராலும்
இலகுவில் மறந்துவிட முடியாது. இந்த ஆண்டின்
இடைப்பகுதிகளில்தான் கிட்டத்தட்ட்ட 6 மில்லியன்
யூதர்கள் ஜேர்மனிய சர்வாதிகாரியான ஹிட்லரால்
கொன்று குவிக்கப்பட்டார்கள்.
இவ்வாறு கூண்டோடு அளிக்கப்பட்டவர்கள் போக மிச்சம்
மிகுதி இருந்தவர்கள்தான் இன்றைய ஐரோப்பிய
உலகிலும், மத்திய கிழக்கின்
ஒரு எல்லைப்பகுதியிலும் சென்று நாடோடிகளாக
குடியமர்ந்தார்கள்.
ஆனால் உலகெங்கும் இவர்கள் சிதரிக்கிடந்தாலும்
இன்றைய உலகையே ஆட்டிப்படைக்கும் அளவிற்கு சர்வ
வல்லமை கொண்டவர்களாக இருக்கின்றார்கள்
என்பது ஒரு கசப்பான உண்மைதான்.
இவ்வாறு திகழ்வதற்கு எந்த ஒரு பாரிய பண
முதலீடோ, பொருளாதார வல்லமையோ அவர்கள்
மூலதனமாக கொண்டிருக்கவில்லை. மாறாக
அவர்களின் கல்வி அறிவு மட்டுமே அத்தனைக்கும்
மூல காரணமும், மூலதனமுமாகும். இந்த
சமூகத்தில் இருந்து வந்தவர்கள்தான் உலகம்
போற்றும் விஞ்ஞானிகளான அல்பட் ஐன்ஸ்டீன், கார்ல்
மாக்ஸ் மற்றும் கணணி மென்பொருளான ஒராக்கிளின்
( Oracle ) தந்தை லெர்ரி எல்லிசென் போன்றோர்.
இன்னும் நூற்றுக்கு மேற்பட்டோர் உள்ளனர்.
இன்றைய உலகிலே யூதர்களின் மொத்த
எண்ணிக்கை கிட்டதட்ட 14 மில்லியன் ஆனால்
இஸ்லாமியர்களின் எண்ணிக்கையோ 1.5
பில்லியனாகும். ஆனால் இந்த
இரண்டு சமூகத்தினுடைய கல்வி அறிவின்
வித்தியாசமானது ஒப்பீட்டளவில் மடுவிற்கும்
மலைக்கும் இடையிலான வித்தியாசமாகும்.
இதற்க்கு ஆதாரமாக பின்வரும் தரவே போதுமானது.
தற்பொழுது உலகிலுள்ள மொத்த நாடுகளில் 57
நாடுகள் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட
நாடுகளாகும். இதில் முக்கியமாக
உயர்கல்வி கற்பதற்காக இருப்பதுவோ வெறும் 500
பல்கலைக்கலகங்கல்தான். ஆனால் அமெரிக்காவில்
மட்டும் 5000 பல்கலைக்கலகங்களும் இந்தியாவில்
8407 பல்கலைக்கலகங்களும் காணப்படுகின்றது.
இதில் முக்கிய அம்சம் என்னவென்றால்
இங்கு காணப்படும் 500 பல்கலைக்களகங்களில்
எந்தஒரு பல்கலைக்கழகமும் முதல் 500
பல்கலைக்கலகங்களுக்கான தரப்படுத்தலில் கூட
இடம்பிடிக்கவில்லை .
உலக எழுத்தறிவு விகிதத்தில் கிருஸ்துவர்கள்
90% ஆனால் முஸ்லிம்கள் 40%. கிருஸ்துவ
நாடுகளில் 40% மாணவர்கள்
பட்டப்படிப்பை தெரிவு செய்யப்படுகின்றார்கள்
அனால் முஸ்லிம் நாடுகளில் வெறும் 2%
மாணவர்களே தேர்வு செய்கின்றனர்.
இது மட்டுமல்லாமல் இந்த மொத்த முஸ்லிம்
நாடுகளிலும் ஒரு மில்லியனுக்கு 230
விஞ்ஜானிகள் என்றளவில் காணப்படுகின்றார்கள்
ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரை இதன்
எண்ணிக்கை 5000.
இது மாத்திரமல்லாது உலக வணிகம், உற்பத்தி,
ஏற்றுமதி போன்ற பொருளாதார ரீதியிலும்
யூதர்களின் ஆதிக்கமே கையோங்கி நிற்கின்றது.
இவ்வளர்ச்சியானது எந்த ஒரு ஆயுதத்தாலும்
அளிக்க முடியாதளவு இன்றுவரை மிகவும்
ஆணித்தரமாக இருப்பதற்கு முக்கிய
காரணமே அவர்களுடைய கல்வியறிவுதான்.

ரகுநந்தன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக