வெள்ளி, 21 ஜூலை, 2017

சோழர் கோயில் மேலாண்மை பிராமணர் அத்துமீறல் தண்டனை

aathi tamil aathi1956@gmail.com

மார். 22
பெறுநர்: எனக்கு
Karthikeyapandian Kalyanigandhi.
கோயில் ஒரு நிறுவனம்
தவறுகளைத் திருத்துதல்
கோயில் நிலங்கள் பற்றிய ஆவணங்களும் விவரங்களும் தெளிவாக இருந்தாலும்,
இவற்றை மேற்பார்வை செய்யக்குழுக்களும் அதிகாரிகளும் இருந்தாலும்,இதில் பல
தவறுகளும் நடைபெற்றன.கி.பி
.1002 இல் பதியப்பட்ட முதலாம் ராசராசனின் 17 ஆட்சியாண்டுத் திருமாளம்
கல்வெட்டு, கோயில் நிலத்தைத் தனியார் ஒருவர் தவறாக எடுத்துப்
பயன்படுத்தியதைக் கண்டுபிடித்து,திரும்பப் பெற்றதைக் குறிப்பிடுகிறது.
இப்படித் தனியார் ஒருவர் செய்ததன்றி, மாராயமங்கலம் என்ற பிராமணர் சபையே
திட்டமிட்டுப் பல ஆண்டுகள் கோயில் நிலத்தைக் கள்ள நோக்குடன் எடுத்துப்
பயன்படுத்தி வந்ததையும்,ஆட்ச
ியாண்டு அழிந்துவிட்ட முதலாம் ராசேந்திரனின் தெற்குக்காடுக் கல்வெட்டு
விவரிக்கிறது. கோயிலுக்கு உடைமையான இரண்டு நிலங்களிலிருந்து 33
ஆண்டுகளாகப் பிராமணர்களின் சபை உற்பத்தியை எடுத்துப் பயன்படுத்தி
வந்தது.உற்பத்தியின் பயன் எதுவும் கோயிலுக்குத் தரப்படவில்லை. இதையறிந்த
அன்னதான யோகி என்பவன் அரசனிடம் முறையிட்டான்.விவரங்களை அறிய ராசேந்திர
சோழ மூவேந்தவேளான் என்ற அதிகாரி கோயிலுக்கு அரசனால்
அனுப்பப்பட்டான்.கோயிலுக்கு வந்த அந்த அதிகாரி,உரிய ஆவணங்களைப்
பார்வையிட்டு,சப
ை உறுப்பினர்களையும் அழைத்து ஆய்ந்தபோது குற்றச்சாட்டு உண்மகயென உறுதிப்பட்டது.க
ோயிலின் உடைமையைத் தவறாக எடுத்துப் பயன்படுத்தியதற்காகப் பிராமணர்
சபைக்குத் தண்டம் செலுத்துமாறு ஆணையிடப்பட்டது.அன்று செல்வமும்
செல்வாக்கும் கொண்டிருந்த பிராமணர்கள் கூட இத்தகைய ஊழல்களையும்
ஓழக்கக்கேடுகளையும் செய்துவந்தார்கள் என்பது நோக்கத்தக்கது.
கி.பி.1182 இல் பதியப்பட்ட திருக்கோடிக்காவலில் உள்ள மூன்றாம்
குலோத்துங்கனின் நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஓன்று.கோயில்களின்
உடைமை தொடர்பாகக் கண்டிப்பான வழிமுறைகள் பின்பற்றப்பட்டதைக் காட்டும்
நிகழ்வு ஒன்றை முன்நிறுத்துகிறது.
கோயிலுக்கு உடைமையான நிலம் ஒன்று முறைமாறி எடுத்துக்கொள்ளப்பட்டதுடன்
நீர் பாய்ச்சுதற்கான வாய்க்கால் ஒன்றும் வெட்டப்பட்டது.இது பற்றிய உண்மை
தெரிந்தவுடன் அரசன் அந்த வாய்க்காலை மூடிவிடுமாறு ஆணையிட்டு,அதன் பிறகு
நிலம் கோயிலுக்குத் திரும்பக் கிடைக்கச் செய்தான்.கோயில் நிலத்தை
எடுத்து,
உற்பத்திக்கான வாய்க்கால் அமைத்திருந்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை

கோவில் கோயில் நிலம் நிலவுடைமை சோழர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக