NOV
5
Posted by வழிப்போக்கன்
விவிலியம்… கிருத்துவர்களின் வேத நூல்!!!இந்நூலில்உலகின் முதல் மனிதன் தமிழன் என்றும் முதல் மொழிதமிழ் என்பதற்கு சான்றுகள் இருக்கின்றதா?பார்ப்போம்…!!! விடையினைச் சுமந்துக் கொண்டு பழையஏற்பாடு இதோ நிற்கின்றது!!!
முதலில் பழைய எற்பாட்டினைப் பற்றி சிறிது அறிந்துக்கொள்வோம்.
இது கிருத்துவின் வருகைக்கு முன்னர் நடந்தநிகழ்ச்சிகளை பற்றி எடுத்து உரைப்பது. உலகத்தின்வரலாற்றில் ஆரம்பித்து யூத இனத்தவரின் வரலாறாகசெல்லும் ஒரு நூல்.சரி இப்பொழுது நம் விசயத்துக்குவருவோம்.விவிலியத்தின் படி கடவுள் ஆறு ஊழிக்காலங்களில் உலகினைப் படைக்கிறார். ஆறாவது ஊழிக்காலத்தில் அவரின் சாயலிலேயே மனிதனைப்படைக்கிறார். அவனைக் கடவுள் மண்ணில் இருந்துப் படைக்கிறார்.சரி… அந்த மனிதனை எங்கேபடைக்கிறார்? என்றக் கேள்விக்கு விவிலியம் அளிக்கும் பதில்..
“ தேவனாகிய கர்த்தர் மனிதனை கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்திலே…” - ஆதியாகமம் (2 -8)
மனிதனை ஏதேன் தோட்டத்தில் உருவாக்கினார் சரி. அந்தத் தோட்டம் ஏன் குறிப்பாக கிழக்கேஇருந்தது என்றுக் குறிக்கப்பட்டு உள்ளது? சற்று ஆராயலாமா…!!!
விவிலியம் என்பது பல்வேறுக் காலங்களில் பல்வேறு நபர்களால் தொகுக்கப்பட்ட ஒரு நூலே ஆகும்.
விவிலியம் தொகுக்கப்பட்ட இடம் - மத்திய ஆசியா. எனவே ‘கிழக்கு‘ என்று குறிப்பிட்டு உள்ள இடம்மத்திய ஆசியாவிற்கு கிழக்கிலே தான் இருந்து இருக்க வேண்டும்.
சரி… மத்திய ஆசியாவிற்கு கிழக்கில் உள்ள நாடுகள் என்ன என்ன?இந்தியா, சீனம் மற்றும் சப்பான்!!!
இந்த மூன்று நாடுகளில் மிகவும் பழமையான நாகரீகம் கொண்ட நாடு என்ன என்பதனை நாம் பார்க்கவேண்டும். ஏனெனில் மனிதன் தோன்றிய இடம் தானே உலகிலேயே பழைமையான நாகரீகம்உடைய இடமாக இருந்து இருக்க வேண்டும்.
அப்படி பழமையான நாகரீகம் எதுவென்று நாம் பார்க்கையில் நமக்கு விடையாய் தொல்லியல்ஆராய்ச்சியாளர்கள் இப்பொழுது தருவது இந்தியாவில் உள்ள சிந்து சமவெளி நாகரீகமே ஆகும்.
அப்படி என்றால் விவிலியத்தினில் கூறப்படும் ‘கிழக்கில் உள்ள இடம்‘ சிந்து சமவெளி என்று நாம்கருத இடம் இருக்கின்றது (அதாவது அதை விட பழைய நாகரீகம் கிழக்கில் கண்டுப் பிடிக்கப் படும்வரை).
சிந்து சமவெளி நாகரீகம் தான் விவிலியம் சொல்லும் இடம் என்றால் அதில் வாழ்ந்த மனிதன் தான்முதல் மனிதனாக இருக்க வேண்டும். அப்படி என்றால் சிந்து சமவெளியில் வாழ்ந்த மனிதர்கள் யார்?சிந்து சமவெளி நாகரீகம் யாருடையது?
இந்தக் கேள்விக்கான பதிலுக்கு இருவர் போட்டி இடுகின்றனர். சிந்து சமவெளி நாகரீகம்தங்களுடையது என்று அவர்கள் உரிமைக் கொண்டாடுகின்றனர்.
ஒருவர் … ஆரியர்
இன்னொருவர் … தமிழர்.
இந்த நாகரீகத்திற்கு ஆரியர் உரிமைக் கொண்டாடினாலுமே, சான்றுகளும், எழுத்துக்களும், பல்வேறுவெளிநாட்டு அறிஞர்களின் ஆராய்ச்சியும் இந்த நாகரீகம் தமிழர்களின் நாகரீகம் என்றேமுடிவினைத் தருகின்றது.
இதன் அடிப்படையில் சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் தமிழர்களே என்றும் அதனால் உலகின்முதல் மனிதன் தமிழன் என்றும் நாம் கருத முடிகின்றது.
நிறுத்துங்கள்…! நிறுத்துங்கள்…! சிந்துசமவெளி என்கின்றீர்கள்… தமிழர்கள் என்கின்றீர்கள்…!!!சான்றுகள் போதவில்லையே… இன்னும் கொஞ்சம் விளக்கிக் கூறுங்கள் என்கின்றீர்களா…!!!
சரி… விவிலியத்தின்படி முதல் மனிதன் யார்?
ஆதாம் தானே.
அவனுக்கு அந்தப் பெயரினை வைத்தது யார்?
விவிலியத்தில் இந்தக் கேள்விக்கு பதில் இல்லை. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆதாம்பெயர் இடுகின்றான் (ஏவாளுக்கும் உட்பட) ஆனால் அவனுக்கு பெயர் யார் இட்டது என்பதனைப்பற்றிய செய்தி இல்லை.
“அப்படியே ஆதாம் சகல வித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும் சகலவிதகாட்டு மிருகங்களுக்கும் பெயரிட்டான்…” ஆதியாகமம் (2 -20)
ஆதாம் என்றப் பெயரே ஆதியாகமம் (2-19) தான் முதல் முறையாக பயன்படுத்தப் படுகின்றது.
அதற்கு முன்னால் முதல் மனிதன் ‘மனிதன்‘ என்ற சொல்லாலேயே குறிக்கப்பட்டு வந்துள்ளான்.அவனுக்கு ஆதாம் என்றப் பெயர் எப்படி வந்தது என்றச் செய்தி விவிலியத்தில் இல்லை. ஒரு வேளைஅது தொடர்பான செய்தி இருந்து, பின்னர் அது ஒரு சிலரால் விலக்கப்பட்டு இருக்கலாம்(விவிலியத்தின் செய்திகளை பலர் தங்களுக்கு சாதகமாக மாற்றி உள்ளனர் என்பது வரலாறு) என்றக்கருத்துக்களும் உலாவிக் கொண்டு இருக்கின்றன. எது எப்படியோ அந்தப் பெயர் எப்படி வந்தது என்றுநமக்கு கூற நம் வரலாற்று அறிஞர் இருக்கின்றார். அட அவர்தாங்க… தமிழ்!!!
ஆதி!!!
இந்த வார்த்தையைக் கண்டவுடன் உங்களுக்கு என்ன ஞாபகம் வருகின்றது?
ஆதி என்றால் தொடக்கம்.
அப்படி என்றால் தொடக்கத்தில் இருந்த மனிதனை நீங்கள் அழைக்க வேண்டும் என்றால் எவ்வாறுஅழைப்பீர்கள்?
ஆதி மனிதன் என்று அழைக்க வாய்ப்பு இருக்கின்றதா..!!!
‘ஆதி மனிதன்‘ … ‘ஆதன்‘ என்றாகி பின்னர் மொழிப்பெயர்ப்பில் ‘ஆதாம்‘ என்றாகி இருப்பதற்குவாய்ப்பு உண்டல்லவா?
ஆதாம் என்ற சொல்லுக்கும் ஆதிமனிதன் என்ற சொல்லுக்கும் உள்ள பொருத்தங்களை நீங்களேபார்த்து முடிவு செய்துக் கொள்ளுங்கள்…
இப்பொழுது நாம் ஏவாளைப் பற்றி பார்ப்போம்!!!
ஏவாளுக்குப் பெயர் இட்டவன் ஆதாம்.
“ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்றுப் பெயரிட்டான். ஏனெனில் அவன்உயிருல்லோருக்கெல்லாம் தாயானவள்” - ஆதியாகமம் (3 - 20 )
மேல் உள்ள வாக்கியத்தின் படி, ஏவாள் என்றால் தாய் என்றும் அல்லது பாட்டி என்றும் பொருள் தரவேண்டும்.
ஆனால் ஆங்கிலத்தில் ‘இவே (EVE)’ என்றுச் சொல்லும் சொல் இந்தப் பொருளைத் தருகின்றதாஎன்றால் இல்லை என்பதே பதில்.
நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம், விவிலியம் என்பது எபிரேயத்தில் இருந்துமொழிப்பெயர்க்கப்பட்ட ஒன்றே ஆகும். எனவே இந்தச் சொல்லினை நாம் எபிரேயத்தில் காண்பதேசரியாக அமையும்.
எபிரேயத்தில் ஏவாள் ‘ஆயா‘ என்றே குறிக்கப்படுகின்றாள்.
ஆயா என்றால் பாட்டி என்று அர்த்தம். உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் இவளே பாட்டிஎன்பதினால் இவளை ஆயா என்றான் ஆதிமனிதன்.
‘ஆயா‘ என்றச் சொல்லே மருவி ‘ஈயா‘ என்றும் ‘இவே‘ என்றும் மாறி நிற்கின்றது.
ஆயா என்றச் சொல்லும் அதன் அர்த்தமும் எம்மொழியினைச் சேர்ந்தவை என்று கூறத் தேவைஇல்லை என்றே தான் நினைக்கின்றேன். இரண்டுமே தமிழில் இன்றும் பழக்கத்தில் இருப்பதினைநாம் காண முடியும்.
எனவே, ஆதி மனிதனும் , ஆயாவும் தமிழர்களே என்பதினில் சந்தேகம் இல்லை.
இன்னும் மேலாக,
கடவுள் மனிதனை மண்ணில் இருந்தே படைத்தார்.
“தேவனாகிய கர்த்தர் மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி…” - ஆதியாகமம் (2 - 7)
இப்பொழுது அவன் மண்ணில் இருந்து படைக்கப்பட்டதினாலேயே அவனை மனிதன் (மண் - தன்)என்றுக் கருதவும் வாய்ப்பு இருக்கின்றது.
மேலும் அவனிடம் மனசு இருப்பதினால் அவனை மனுசன் என்றுக் கூறப்படுகின்றது என்றும்கருதலாம்.
இப்பொழுது ஆங்கிலத்தின் man என்ற வார்த்தையையும் woman என்ற வார்த்தையையும் நாம் எடுத்துக்கொள்வோம்.
மண்ணில் இருந்துப் படைக்கப் பட்டவன் என்பதினால் அவனை மண் (Man) என்றுக் கூறுகின்றார்கள்என்றும்,
மண்ணினால் செய்யப்பட்ட மனிதனின் உள்ளிருந்து உருவாக்கப்பட்டதால் பெண்ணை, உள் - மண்(மண்ணின் உள்ளிருந்து) என்ற அர்த்தம் பொருந்த woman என்றும் கூறுகின்றார்கள் என்று நாம்கருதலாம் தானே.
மண்ணும், மனசும் - எந்த மொழி என்று நமக்கு நன்றாகத் தெரியும். தமிழ் மொழியே அது…!!!
மேலே நாம் கண்டக் கருத்துக்களின் மூலம்… அதாவது,
ஆதாம் - ஆதி மனிதன்
ஏவாள் - ஆயா
Man - மண்
Woman - உள் மண்
விவிலியம் கூறும் முதல் மனிதன் தமிழன் என்றும் முதல் மொழி தமிழ் என்றும் நாம் அறிந்துக்கொள்ளலாம்.
சரி… மனிதன் பிறந்து விட்டான்… தவறுகளும் செய்யத் தொடங்கி விட்டான். இறைவன் அதனைக்கண்டு மனம் உடைந்து உலகினை அழிக்க முடிவு எடுத்துவிட்டான்… உலகினை அழிக்க வெள்ளம்தயாராக இருக்கின்றது… அதோ வெள்ளம் வரும் அறிகுறி தெரிகின்றது….!!!
வெள்ளத்திலும் முதல் மனிதர்கள் தமிழர்கள் என்று பறைசாட்ட நோவா தன்னுடைய படகுடன்அதோ நிற்கின்றார்…
நோவாவை சந்திப்போம்… அடுத்தப் பதிவில்!!!
முந்தையப் பதிவு : 1 | 2 | 3 | 4 | 5 | 6

42 comments:
ஆதி.
மல்லாங்கிணர்.
வேத மதம் கூறும் பிரபஞ்சவியலில், பிரபஞ்சச் சக்கரத்தின் கால்பங்கேயான தோன்றும் பகுதியில் நான்முகப் பிரம்மன் படைப்பை ஆரம்பிக்கிறார். இந்தப் படைப்பு நிகழும் விதம், பல வகைகளில் ஆங்காங்கே விளக்கப்பட்டுள்ளது. அவற்றுள் நாம் பார்க்கும் பிரபஞ்ச – உலக வகையில் கிரகித்துக் கொள்ளக் கூடிய அடிப்படைகளை இங்கே விளக்குவோம். முதல் அடிப்படை கீதையில் விளக்கப்படுகிறது. (பகவத் கீதை 3, 4-ஆம் அத்தியாயங்கள்.)
இது யக்ஞம் எனப்படும் வேள்வி ரீதியான படைப்பு. யக்ஞம் என்றால் அர்ப்பணிப்பின் வாயிலாக வழிபடுதல் என்று பொருள். வழிபாடு என்பதே அர்ப்பணிப்பு ஆகும். அர்ப்பணிப்பு என்றால் எதையாவது கொடுத்தல் என்று அர்த்தம். எதையாவது ஒன்றைக் கொடுத்தால்தான், பிரதிபலனாக ஒன்று கிடைக்கும். நாம் ஒன்றும் கொடுக்காமல், நமக்கென்று ஒன்றை எடுத்துக் கொண்டால் அது திருட்டுக்குச் சமானம். அதுவே பாபம் என்றும் சொல்லப்படும். அது மட்டுமல்ல, திருப்பிக் கொடுக்காமல் எடுத்துக் கொண்டால், இருப்பு குறைந்து கொண்டே வரும்; மேலும் மேலும் அதனால் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது.
இந்தக் கருத்துதான் யக்ஞம், ஹோமம், வேள்வி, வழிபாடு, நைவேத்யம், படைப்பு போன்றவற்றுக்கான அடிப்படையானது. இந்த வழிபாட்டை விருப்பு வெறுப்பு இல்லாமல், பற்றிலாமல் செய்ய வேண்டும். படைப்புக் கடவுளான பிரம்ம தேவன் அப்படித்தான் ஆரம்பித்து வைத்தார். ‘ப்ரவர்திதம் சக்ரம்’ என்று அவரால் பரம்பரையாகத் தொடங்கி வைக்கப்பட்ட இந்தச் சக்கரத்தை நாம் அனைவரும் செயல்படுத்திவந்தால்தான் படைப்பு என்பது தொடர்ந்து கொண்டே செல்லும். அது எப்படி என்று பார்ப்போம்.
யக்ஞம் அல்லது ஹோமம் அல்லது வேள்வி என்றால் அங்கே ஹோம குண்டம் இருக்க வேண்டும். அதில் அக்னி இருக்க வேண்டும். அதில் அர்ப்பணிக்க அவிப்பொருள் இருக்க வேண்டும். அந்த அவிப்பொருள் யாரைச் சென்றடைகிறதோ அவர் அதற்குப் பலன் ஒன்றைத் திருப்பி தருகிறார். அந்தப் பலன் பலரையும் சென்றடையும். அப்படிப் பலன் பெறுபவர்கள், இலவசமாகக் கிடைத்தது என்று வாங்கி அனுபவித்தால் மட்டும் போதாது. பிரதிபலனாக திருப்பிச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் அது திருட்டுக்குச் சமானம். அது பாபத்தைக் கொடுக்கும். இது எப்படி நடக்கிறது என்று முதலில் உலக வகையில் புரிந்து கொண்டு, பிறகு பிரபஞ்ச அளவில் காணலாம்.