வியாழன், 13 ஜூலை, 2017

1974 லேயே இலங்கை தமிழ்நாடு மீனவர் சண்டை

aathi tamil aathi1956@gmail.com

16/5/14
பெறுநர்: எனக்கு
http://tamil.dailymirror.lk/2010-08-31-14-50-37/66690.html
 1976ஆம்
ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி இலங்கையில்
வெளியாகும் தமிழ் பத்திரிகையொன்றின் முன்
பக்கத்தில் பிரசுரமான செய்தியொன்றை எடுத்துக்
காட்டலாம். 'பாக்கு நீரிணையில் இறால் இருப்பதற்காக
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடலுக்குச் செல்ல
முடியாது - இந்திய அரசு அதிகாரி விளக்கம்' என்ற
தலைப்பில் அந்தச் செய்தி வெளியாகியிருந்தது.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற் பகுதியில் மீன்
பிடிப்பதாக இலங்கை அரசாங்கம் இந்திய
அரசாங்கத்திடம் செய்திருந்த
முறைப்பாடொன்றை அடுத்து அதைப்
பற்றி விசாரணை செய்வதற்காக
ராமேஸ்வரத்திற்கு வந்திருந்த இந்திய வெளிவிவகார
அமைச்சின் இணைச் செயலாளராகவிருந்த
எஸ்.சஹாப்தீனை மேற்கோள் காட்டியே இந்த
செய்தி எழுதப்பட்டிருந்தது. இலங்கை கடற்
படையினர் இந்திய கடற் பகுதிக்குள்
புகுந்து இந்திய
மீனவர்களுக்கு தொல்லை கொடுக்காதிருக்க
நடவடிக்கை எடுக்கப்படும் என்று சஹாப்தீன்
உறுதியளித்ததாகவும் அந்தச் செய்தியில்
குறிப்பிடப்படடிருந்தது.
இது பிரிதொரு விடயத்திற்காக பழைய
பத்திரிகைகளை ஆராயும் போது தற்செயலாக எமக்குக்
கிடைத்த செய்தியாகும். அதாவது அதற்கும் (1976ஆம்
ஆண்டுக்கும்) நீண்ட
காலத்திற்கு முன்பிலிருந்தே இந்த
மீன்பிடி சண்டை நிலவி வந்துள்ளது. இந்திய மீனவர்கள்
இலங்கை கடற் பிரதேசத்தில் மீன் பிடிப்பதும்
இலங்கை கடற்படையினர் இந்திய
மீனவர்களுக்கு 'தொல்லை' கொடுப்பதும் அன்றும்
நடைபெற்றுள்ளது.
1976இல் தான் முதன் முதலில் இந்தப்
பிரச்சினை உருவானது என்று வைத்துக் கொண்டாலும்
இது இப்போதைக்கு நீண்ட கால
பிரச்சினை என்பது தெளிவானது. 1976ஆம்
ஆண்டு இதே மே மாதம் 14ஆம் திகதி தான் தமிழீழம்
தொடர்பான வரலாற்று பிரசித்திப் பெற்ற
வட்டுக்கோட்டை மாநாடு நடபெற்றது என்பதும்
குறிப்பிடத்தக்கதாகும்.

கச்சத்தீவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக