ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

அவுணர் சங்ககால குறிப்பு இலக்கியம் முருகன் செங்குட்டுவன் ?

aathi tamil aathi1956@gmail.com

16/12/15
பெறுநர்: எனக்கு
அவுணர் என்போர் தமிழரோ பாரதநாட்டவரோ அசுர்ரோ அல்லர்!
அவுணர்:
தொல்தமிழ்ப்பாடல் சான்றுகள்: அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர் - திரு 59
அவுணர் தமிழரல்ல என்பதை உறுதிப்படுத்த அவுணருக்கு எதிரான முருகனின் செயல்
இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது.
கணம்_கொள் அவுணர் கடந்த பொலம் தார் - மது 590
அவுணகூட்டத்தருக்கு எதிராகச் செயல்பட்ட மாறனைக் காட்டுகிறது.
செம் களம் பட கொன்று அவுணர் தேய்த்த - குறு 1/1 தமிழரல்லாத அவுணரை
செவ்வேல் முருகன் சேஎய் அடக்கி அழிக்க முற்பட்டதைக் காட்டுகிறது.
அணங்கு உடை அவுணர் ஏமம் புணர்க்கும் - பதி 11/4 இலங்கையில் தமிழருக்கு
எதிராகச்செயல்பட்ட அவுணரைக் காட்டுகிறது.
மாய அவுணர் மருங்கு அற தபுத்த வேல் - பரி 5/7 தமிழரை அவுணர் எதிர்த்தபோது
செவ்வேல் முருகனால் அடக்கப்பட்டதைக் காட்டுகிறது.
அணங்கு உடை அவுணர் கணம்_கொண்டு ஒளித்து என - புறம் 174/1 தமிழ்ச்சோழர் -
ஞாயிற்றுக்குடியினரின் ஆட்சியைக் கெடுத்தவருக்கு ஆதரவாக இருந்த அவுணரைக்
காட்டுகிறது.
அன்னவர் பட அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ - பரி 3/56 தமிழரோ
பாரதநாட்டவரோ அல்லாத அவுணரை முருகன் அடக்கி ஒடுக்கி மேன்மையுடன்
முதல்ப்படைத்தலைவனானதைக் காட்டுகிறது.
யாவரும் பிறரும் அமரரும் அவுணரும்/மேவரு முதுமொழி விழு தவ முதல்வரும் -
பரி 8/8,9 தமிழரல்லாத யாவரும் அமரர் உட்பட அடக்கப்பட்டதோடு தமிழ்மொழியை
அழிக்கவும் சிதைக்கவும் முயன்ற மற்றொரு தமிழரல்லாதாரின்
தலைவராகச்செயல்பட்டவரையும் அடக்கித் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த
முருகன் செவ்வேலைக் காட்டுகிறது.
மடங்கல் போல் சினைஇ மாயம் செய் அவுணரை/கடந்து அடு முன்பொடு முக்கண்ணான்
மூ எயிலும் - கலி 2/3,4 அவுணரால் கைப்பற்றப்பட்ட மூன்று கோட்டைகளையும்
திரும்பக்கைப்பற்றிச் சிங்கம்போலச் சினத்துடன் மேற்சென்று வென்ற
முக்கண்ணானைக் காட்டுகிறது.
தமிழ்முருகனான செங்குட்டுவன் தமிழ்ச்சோழருக்கு எதிராகச்செயல்பட்ட
தமிழரால்லாத, அசுரருமல்லாத அவுணரையும் ஆரியரையும் மோரியரையும் கோசரையும்
அடக்கியதற்கான தகவல்கள் மேலும் பலபாடல்களிலும் சிலப்பதிகாரத்திலும்
இடம்பெற்றுள்ளன.
சிலப்பதிகாரம்:
கடு விசை அவுணர் கணம் கொண்டு ஈண்டி - புகார் 6/7
படை வீழ்த்து அவுணர் பையுள் எய்த - புகார் 6/52
காய் சின அவுணர் கடும் தொழில் பொறாஅள் - புகார் 6/58
செரு வெம் கோலம் அவுணர் நீங்க - புகார் 6/60
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள்_அமலை ஆடும் போலும்
- மது 12/117
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள்_அமலை ஆடும் ஆயின் -
மது 12/118
பிணிமுகம் மேற்கொண்டு அவுணர் பீடு அழியும் வண்ணம் - வஞ்சி 24/53
அவுணரை கடந்த சுடர் இலை நெடு வேல் - மது 23/189
அல்லிய தொகுதியும் அவுணன் கடந்த - புகார் 6/48
இரண்டு வேறு உருவின் திரண்ட தோள் அவுணன்
தலை மிசை நின்ற தையல் பலர் தொழும் - மது 12/65,66
வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து - வஞ்சி 24/57
சிலப்பதிகாரத்தில் முருகன் - செவ்வேலின் தாய் கொற்றவைக்கு எதிராகச்
செயல்பட்டோருக்கு ஆதரவாக இருந்த அவுணரைக் காண்கிறோம். முருகனின்
வளர்ச்சியால் அவுணரும் பிறரும் எனத் தமிழரலாத அனைவரும் முருகனது தாயின்
உடன்பிறந்த தமிழ்ச்சோழர் மற்றும் தாயாதியர் துணையுடன் அடக்கப்பட்டவரலாறே
சிலப்பதிகாரத்துள் விரிவாகவும் மறைபொருளாகவும் காட்டப்படுகிறது.
அவுணரை அசுரராகக் காட்டுவது மாபெரும் தவறாகும். சிலநேரங்களில் தமிழருக்கு
எதிராகச்செயல்பட்ட சுரருக்கும், சுரன் - சூரன் செழியனுக்கும் ஆதரவாகச்
செயல்பட்டதால் சுரர் என்று கொள்ளலாம். பல பாடல்களிலிலும் புராணங்களிலும்
இதிகாசங்களிலும் தமிழருக்கு எதிரானோராக அரக்கரும் சுரருமே
இடம்பெற்றுள்ளனர். அவர்களை எதிர்த்துப்போரிட்டோரே தமிழரான அசுரர் என்பதை
அ சுரர் - சுரர் அல்லாதோர் என்ற பெயரும் பொருளுமே உணர்த்திநிற்கிறது.
chandeasekaran arumugam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக